ராகி லெமன் இடியாப்பம்
தே.பொருட்கள்:
ராகி மாவு - 2 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எலுமிச்சை பழம் - 1
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 2
வேர்க்கடலை - 1 கைப்பிடி
செய்முறை :
* ராகி மாவில் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து நன்கு கொதிக்கவிடவும்.
*கொதித்த நீரை மாவில் கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி கரண்டியால் கிளறவும்.சப்பாத்தி மாவு பதத்திற்க்கு இருக்கனும்.
*பின் அதை இடியாப்பம் அல்லது ஒமப்பொடி அச்சில் போட்டு பிழிந்து ஆவியில் வேகவைத்து உதிர்த்துக்கொள்ளவும்.
*எலுமிச்சை பழத்தில் சாறெடுக்கவும்.கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து எலுமிச்சை சாறை ஊற்றி கொதிக்கவிடவும்.
*லேசாக கொதித்ததும் உதிர்த்த இடியாப்பத்தை போட்டு கிளறி இறக்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
26 பேர் ருசி பார்த்தவர்கள்:
I too make ragi idiyappam but I used to mix rice flour with ragi flour...you have done only with ragi flour..that sounds interesting and healthy..
I have tried ragi dosai and uppuma. Ragi idiyaappam is new to me. Thank you for the recipe.
உங்கள் வலைத்தளம் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒவ்வொன்றாக பார்த்து, செய்து தருவதாக சொல்லியிருக்கிறார்கள்.
அப்படியே எனக்கு ஒரு பார்ஸல் ஆமா சொல்லிட்டேன் . நாங்கெல்லாம் ராவான ரவுடிக .மலையயே உருட்டுவோம்ல
நல்லாவும் நல்லாதாகவும் சொல்றீங்க
நன்றிங்க.
நல்லா இருக்குங்க. கொஞ்சம் உதிரியாக இருந்தால் இன்னமும் நல்லா இருக்கும்ன்னு நினைக்கின்றேன். இதையும் செய்துவிட வேண்டியதுதான். மிக்க நன்றி.
I have tried ragi dosai and uppuma. Ragi idiyaappam is new to me.
சித்ரா அப்படியே, எனக்குக் கொடுக்காமல் சாப்பிட்டதையும் சொல்ல வேண்டியதுதானே.
ராகியில் எதுசெய்தாலும் நல்லா சாப்பிடுவேன் மேனகா. சூப்பர் சூப்பர்
//அப்படியே எனக்கு ஒரு பார்ஸல் ஆமா சொல்லிட்டேன் //
ரிப்பீட்டேய்
Interesting and healthy too. Do you prepare ragi flour at home or buy from outside?
Goog one....
நன்றி நிது!!
நன்றி சித்ரா!!
அம்மாவுக்கு என் வலைதளம் பிடித்ததில் மிக்க சந்தோஷம்.அம்மாவுக்கு என் வணக்கங்கள்.நன்றி மன்னார்குடி!!
பார்சல்தானே அனுப்பிட்டா போச்சு.நன்றி சங்கர்!!
நன்றி சகோ!!
ராகியில் இடியாப்பம் உதிரியாக வரலை.ஆனால் டேஸ்ட் ரொம்ப நல்லாயிருந்தது.செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி சுதாண்ணா!!
நன்றி மலிக்கா!!
பார்சல் உங்களுக்கும் சேர்த்தே அனுப்பிவிடுகிறேன்.நன்றி சசி!!
கடையில் விற்கும் ராகிமாவில் தான் செய்தேன்.நன்றி சிட்சாட்!!
நன்றி சகோ!!
ரொம்ப நல்லா இருக்கு மேனகா , நான் இது மாதிரி மாவுல டிரை பண்ணினது இல்லை , அனில் தயாரிப்பில் ரெடிமேடா கிடைக்கும் சேமியாவில் இது மாதிரி பண்ணுறது அது நல்ல உதிரியா வரும் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த டிபன்
என் பொண்ணுக்கு ரொம்ப புடிச்ச இடியாப்பம் இது. ஆனா ரெடிமேடு இடியாப்பம் வாங்கி செய்வேன். இது ட்ரை பண்ணி பார்க்கிறேன்.
looks very tasty and colourful MENAKA
எனக்கும் ராகி பிடிக்கும். இடியாப்பம் செய்ததில்லை. செய்து பார்க்கிறேன் மேனகா. நன்றி.
இங்கு ரெடிமேடாக கிடைக்குதான்னு தெரியல.அதான் நானே டிரை பண்ணேன்.நன்றி சாரு அக்கா!!
செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி சுகந்தி!!
நன்றி தேனக்கா!!
நன்றி ராமலஷ்மி அக்கா!!
இதையும் செய்து பார்த்தாச்சு. நல்லா வந்திருந்துச்சு. நன்றி.
செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததற்க்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சகோ.நன்றியும் கூட....
Hi Sashiga
All ur diet recipe's are g8t
I will try these items soon :)
thankyou very much and keep posting
--
ohm
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஓம்!!
Post a Comment