Monday, 22 March 2010 | By: Menaga Sathia

சைனீஸ் கேபேஜ் சாம்பார்


இது ஒரு வகை கேபேஜ் வகையை சேர்ந்தது.சைனாவில் அதிகம் பயிரிடப்படுகிறது.Bok choy என்றும் இதற்க்கு பெயர் உண்டு.ப்ரெஞ்சில் இதனை Blette என்று சொல்வார்கள்.

மேலதிக விபரங்களுக்கு இங்கு பார்க்கவும்.
சமைக்கும் போது வெள்ளை தண்டை நீக்கி விட்டு கீரையை மட்டும் அரிந்து சமைக்கவும்.
தே.பொருட்கள்:

பொடியாக அரிந்த சைனீஸ் கேபேஜ் - 1 கப்
துவரம் பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டுப்பல் - 5
அரிந்த தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
புளி கரைசல் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு

செய்முறை :
*துவரம் பருப்புடன் மஞ்சள்தூள்+பூண்டுப்பல்+பச்சை மிளகாய்+தக்காளி அனைத்தையும் சேர்த்து குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

* பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம்+ கேபேஜ்+சாம்பார் பொடி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி புளிகரைசலுடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

*கொதித்ததும் வெந்த பருப்பை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

*கீரை சாம்பார் மாதிரி நல்ல சுவையில் இருக்கும் இந்த சாம்பார்.

29 பேர் ருசி பார்த்தவர்கள்:

சசிகுமார் said...

இன்று நான் தான் பஸ்ட், நல்ல பயனுள்ள பதிவு அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

சாருஸ்ரீராஜ் said...

ம் நல்லா இருக்கு மேனகா இதுக்கு முந்திய குறிப்புக்கு கமெண்ட் எழுதமுடியவில்லை. கமெண்ட் எழுதினால் வேற பேஜ்க்கு போயிடுது

Pavithra Srihari said...

naan thaan 2nd ...romba different aa irukku sambhar. andha cabbageaae naan kelvi pattathu illa . ippo thaan first time.

Very unique ..

Menaga Sathia said...

உங்கள் முதல் பதிவுக்கும்,கருத்துக்கும் நன்றி சசி!!

முந்தைய பதிவுக்கு இப்போ கமெண்ட் போடமுடியுது.நன்றி சாரு அக்கா!!

Menaga Sathia said...

2 நிமிஷம் லேட்டாக வந்துட்டீங்க பவித்ரா.இந்த கேபேஜை ப்ரான்சில்தான் நானும் பார்த்திருக்கேன்.இதை நானும் வாங்கி சமைக்க மாட்டேன்.அக்கா சொல்லியபிறகு தான் வாங்கி சமைக்கிறேன்.நன்றி பவித்ரா!!

Thenammai Lakshmanan said...

Its differnt Menaka ..
Try panni parkiren...:)

Menaga Sathia said...

செய்து பாருங்கள்.கீரை சாம்பார் மாதிரியே இருக்கும்.நன்றி தேனக்கா!!

Nithu Bala said...

Pudhusa try panni irukengha..parka roombha nalla irukku..nan France ku vandhu vidukaren..ungha samayal saptu enjoy pannalam..nan samaikavey venam:-)

Menaga Sathia said...

வாங்க நிது,எப்ப வேணாலும் ப்ரான்ஸ் வாங்க.என் சமையலை சாப்பிட்டு எஞ்சாய் பண்ணுங்க.நன்றி நிதுபாலா!!

Vijiskitchencreations said...

நானும் இதில் கூட்டு செய்திருக்கேன். ரொம்ப நன்றாக இருக்கும். அடுத்த தடவை உங்க ரெசிப்பி டைப்பில் செய்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

இந்த கேபேஜை அடிக்கடி பார்க்கிறோம் சமைக்க நினைத்ததில்லை, இப்ப முடியலன்னாலும் ஒரு முறை முயற்சித்திடுவோம் ...

Sarah Naveen said...

Yummy yumm!!1

பொன் மாலை பொழுது said...

எனக்கு ஒருவகையில் பொறாமையாதான் இருக்கு.
இப்படி வகை வகையா சமைப்பதே ஒரு சுகமான அனுபவம்.
அதோடு இல்லாமல், அவைகளை போட்டோ எடுத்து பிறருக்கும்
அறியசெய்வது அதை மேலும் இனிமையுள்ளதாக ஆக்கும்.
"சமையல்"எனக்கு பிடித்த ஒன்று. அதனால் தான் நானும் எப்போவாவது
படங்களை போட்டு திருப்தி பட்டுக்கொள்வேன் .
வழக்கம் போல Cleanex தான் .

Trendsetters said...

quite a creation..making sambhar with bokchoy makes u a pro

Menaga Sathia said...

இதில் கூட்டு செய்ததில்லை.செய்து பார்க்கிறேன்.நன்றி விஜி!!

சமைத்து பாருங்கள்.நன்றி சகோ!!

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சாரா!!

நன்றி சகோ!!

நன்றி Trendsetters!!

Chitra said...

Bok Choy soup சாப்பிட்டு இருக்கேன். Bok choy சாம்பார் - புதிய item. :-)

PriyaRaj said...

Romba diff aa eruku ...ethoda taste eppadi erukum pa...naamba cabbage mathiriya....

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க. இங்கன எங்க வீட்டு சைனீஸ் ஓனர் இதை அடிக்கடி வாங்கி வந்து சாப்பிடுவார். எதிர்காலத்தில் நானும் இதே மாதிரி சமைத்துப் பார்க்கின்றேன். மிக்க நன்றி.

ஸாதிகா said...

வித்தியாசமாக சமைப்பதில் மேனகா எப்பொழுதுமே ஃபர்ஸ்ட் தான்.

Menaga Sathia said...

இதில் சூப் சாப்பிட்டிருக்கிங்களா?நன்றாகயிருக்குமா,டிரை பண்ணுகிறேன்.நன்றி சித்ரா!!

இது கீரை சாம்பார் மாதிரியே இருக்கும்.நன்றாகயிருக்கும்.கிடைத்தால் சமைத்து பாருங்கள்.நன்றி ப்ரியாராஜ்!!

Menaga Sathia said...

செய்து பாருங்கள்.நன்றி சுதாண்ணா!!

நன்றி ஸாதிகா அக்கா!!

தெய்வசுகந்தி said...

நல்லா இருக்கு மேனகா.bokchoy நான் ட்ரை பண்ணினதேயில்ல.

பனித்துளி சங்கர் said...

எத்தனையோ சாம்பார் பார்த்து இருக்கேன் ஆனால் இப்பத்தான் சைனீஸ் கேபேஜ் சாம்பார் இப்படி ஒரு சாம்பார் இருப்பதே தெரிந்துகொண்டேன் . அருமை . பகிர்வுக்கு நன்றி !

Priya Suresh said...

Itha sambar naan adikadi pannuven...CHinese store ponna muthala naan yedukurathu intha bokchoy than..poriyal senchi paarunga innum pidikum ungaluku..

Menaga Sathia said...

சுகந்தி இந்த கேபேஜை சமைத்து பாருங்கள்,நல்லாயிருக்கும்.நன்றி சுகந்தி!!

நன்றி சங்கர்!!

இதில் பொரியலும் செய்வேன்பா.நன்றி ப்ரியா!!

Jaleela Kamal said...

வித்தியாசமான சாம்பார், இது சாலடுக்கு மட்டும் தான் பயன் படுத்தி இருக்கோம்.

அடுத்த முறை செய்து பார்த்து விட வேண்டியதுதான்.

Menaga Sathia said...

இதில் சாலட் செய்ததில்லை.நன்றி ஜலிலாக்கா!!

மாதேவி said...

சாம்பார் வித்தியாசமாக இருக்கின்றது. வாழ்த்துகள்.

ஒலிவ் ஒயிலில் பிரட்டி எடுப்பதுண்டு, பொரியலும் செய்திருக்கின்றேன்.

01 09 10