இந்த ரெசிபியை மதுரம் குறிப்பில் பார்த்து செய்தது.ஒரிஜினல் ரெசிபியில் சாக்லேட் சிப்ஸ் சேர்த்திருப்பாங்க,நான் அதற்கு பதில் காய்ந்த திராட்சை சேர்த்து செய்திருக்கேன்.இதில் முட்டை,வெண்ணெய் எதுவும் சேர்க்காத ப்ரெட் ரெசிபி.ப்ரெட் ஆறியபிறகு துண்டு போட்டிருந்தால் கட் செய்ய ஈஸியாக இருக்கும்.நான் பேக்கிங் செய்து முடித்ததும் என் பொண்ணின் அழுகையால் சூடாக கட் செய்ய வேண்டியதாகிவிட்டது.ஷேப்தான் சரியாக வரலை.ஆனால் டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பர்ர்ர்!!
தே.பொருட்கள்:
பார்ட் -1
ஆல் பர்பஸ் மாவு - 1 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
பட்டைத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
பார்ட் - 2
தோல் சீவி துருவிய சுகினி - 1 கப்
காய்ந்த திராட்சை - 1/4 கப்
பார்ட் - 3
வெஜிடேபிள் எண்ணெய் - 1/2 கப்
சர்க்கரை - 3/4 கப்
மசித்த வாழைப்பழம் - 1 பெரியது
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்
செய்முறை :
*பார்ட் -1 கூறிய பொருட்களை ஒன்றாக கலக்கவும்.
*இதனுடன் பார்ட் - 2 கூறிய பொருட்களைக் கலக்கவும்.
*பார்ட் -3 கூறிய பொருட்களை ஒன்றாக கலந்து பீட்டரில் நன்கு அடிக்கவும்.இதனுடன் பார்ட் 1,2 கலவையை ஒன்றாக கலந்து ப்ரெட் செய்யும் பாத்திரத்தில் ஊற்றவும்.
*அவனை 180°C முற்சூடு செய்து 30 நிமிடம் இந்த கலவையை பேக் செய்து எடுக்கவும்.
*ஆறியதும் துண்டுகள் போடவும்.
27 பேர் ருசி பார்த்தவர்கள்:
ஆஹா..மேனகா...பார்க்கும் பொழுதே மிகவும் சூப்பராக இருக்கின்றது...அருமை...ஒரே பேக்கிங் ஐடம்ஸாக கலக்கிறிங்க...வாழ்த்துகள்...
enne orey baking mood-la irukengha..super bread..parcel paniduga
mm.....Superb bread!
Inspite of looking great, I will have to say this won't be my favorite probably cause I can't fathom both zucchini and banana together. :(.
மேனகா நானு முட்டையோடு செய்திருக்கென். எங்க வீட்டு தோட்டதில் விளந்த சுகினியை வைத்து செய்தேன். ரொம்ப நன்றாக் இருந்தது. வாவ் முடையில்லாமலா? குட் அடுத்த தடவை கண்டிப்பா செய்கிறேன். நன்றி.
//I can't fathom both zucchini and banana together.// I have the same thought. Do they get along?????. Presentation looks very nice.
very nice...... looks so good!
//ஆல் பர்பஸ் மாவு //
அப்படீன்னா என்ன மாவுங்க.. ?!
This eggless version is new to me Menaka..bread looks so moist, I have bookmarked this....thanks dear :)
mm.....Superb bread!
நன்றி கீதா!! மகளுக்காக நானே செய்து கொடுக்கிறேன்.அப்படி செய்வதில் தனி சந்தோஷமா இருக்கு...
நன்றி நிது!! உங்களுக்கு பார்சல் அனுப்பியாச்சு..
நன்றி ப்ரியா!!
நன்றி கூல்!! சுகினி சேர்ப்பதால் வித்தியாசம் எதுவும் தெரியாது.
நன்றி விஜி!! நம் தோட்டத்தில் விளைந்த காயில் சமைப்பதே தனி சுகம்தான்.அடுத்தமுறை முட்டையில்லாமல் செய்து பாருங்கள்....
நன்றி வானதி!! நீங்கள் ஒரு முறை செய்து பாருங்கள்.சாதரணமான வாழைப்பழ ப்ரெட் போலவே இருக்கும்...
நன்றி சித்ரா!!
ஆல் பர்பஸ் மாவு என்பது மைதாமாவுதான்.அந்த மைதா மாவில் எல்லா வகை பேக்கிங் ஐயிட்டம்ஸ்களுக்கு உபயோகப்படும்.பேக்கிங் கவரிலேயே இருக்கும்.நன்றி கவிதா!!
நன்றி கீதா!! செய்து பாருங்கள்.இப்போழுது எனக்கு முட்டையில்லாமல் கேக் செய்வதுதான் பிடித்துள்ளது...
நன்றி சகோ!!
அட அருமையான பிரட்..சிம்பிளா சொல்லி இருக்கீங்க..விரைவில் செய்து பார்த்துவிடுகிறேன்.
வித்யாசமா இருக்குடா மேனகா இந்த ரெசிபி.... ஜொள்ளு கூட ஊறுது....:)))
பேக்கிங் மேளா மாதிரி இருக்கு.அசத்துங்க,அசத்துங்க.
woww.. superrr.. egg illama bread.. udanae seithu paarkanum.. romba thanks.. :)
நல்ல பதிவு அக்கா ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Cake looks perfect and soft!!!
நாக்கு ஊருது
செய்து பார்த்து சொல்லுங்கள்,நன்றி ஸாதிகாக்கா!!
நன்றி தேனக்கா!!
நன்றி ஆசியாக்கா!!
நன்றி ஆனந்தி!! செய்து பார்த்து சொல்லுங்கள்...
நன்றி சசி!!
நன்றி அருணா!!
நன்றி கார்த்திக்!!
மன்னிக்கவும் காசு இல்லை அதுதான் சாப்பிட வர நேரம் ஆகிடுச்சு ! எப்பொழுதும்போல் இன்று அசத்தல்தான் . பகிர்வுக்கு நன்றி !
Nice try menaga! Naanum ithu varai Zuccini vaanginathe illa. :)
நன்றி சங்கர்!!
சுகினியில் செய்து பாருங்கள்,வித்தியாசம் தெரியாது.நன்றி மகி!!
Thanks for trying this recipe of mine, Menega. You have to always cut breads after it has cooled completely for better/easy slicing and good taste.
முதல் வருகைக்கும்,டிப்ஸ்க்கும்,கருத்துக்கும் நன்றி மதுரம்!!
Post a Comment