Monday 25 October 2010 | By: Menaga Sathia

பருப்பு உருண்டை ரசம்/ Paruppu Urundai Rasam

சாதரணமாக பருப்பு உருண்டைக்குழம்பு தான் செய்வோம்.அதுபோல் உருண்டைகளை ரச்த்தில் போட்டு செய்தால் இன்னும் சூப்பராகயிருக்கும்...
தே.பொருட்கள்:புளி கரைசல் - 1 1/2 கப்
தக்காளி - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பூண்டுப்பல் - 2
பச்சை மிளகாய் - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
ரசப்பொடி - 3/4 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது

உருண்டைக்கு:கடலைப்பருப்பு - 1 கப்
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நருக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:*கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் உப்பு+சோம்பு+காய்ந்த மிளகாய்+பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*வெங்காயம்+கொத்தமல்லித்தழையை இதனுடன் கலந்து உருண்டைகளாக ஆவியில் வேகவைத்தெடுக்கவும்.பூண்டு+பச்சை மிளகாயை நசுக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து தக்காளி+மஞ்சள்தூள்+உப்புநசுக்கிய பூண்டு பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*பின் ரசப்பொடியை சேர்த்து கொதிக்கவிட்டு வேகவைத்த உருண்டைகளைப்போட்டு 5 நிமிடம் கழித்து மல்லித்தழை தூவி இறக்கவும்.

30 பேர் ருசி பார்த்தவர்கள்:

எல் கே said...

புதுசு கண்ணா புதுசு

புதிய மனிதா. said...

அசத்தல் குறிப்பு அக்கா ,..

புவனேஸ்வரி ராமநாதன் said...

ரசத்திலும் உருண்டையா.? பார்க்கவே நல்லாயிருக்கு.

தமிழ்த்தோட்டம் said...

அருமை

பொன் மாலை பொழுது said...

மாலை வேலை டிபனுக்கு ஏற்றது. ஒரு முள் கரண்டியும் சேர்த்து போட்டால் குத்தி எடுத்து தின்னலாம் தானே? ! கூடவே ஒரு கப் சூடா பில்டர் காப்பி !:)))))
கொடுத்துவச்ச புண்ணியவான்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

புதுசா இருக்கே...

சசிகுமார் said...

thanks akka

Kurinji said...

Pthusa erukku and romba superavum erukku...

Jayanthy Kumaran said...

woow....can t wait to giv a try...

Tasty Appetite

Asiya Omar said...

புதுசு புதுசாக அசத்தல்.

சாருஸ்ரீராஜ் said...

கேள்விபடாத ஒன்னு மேனகா so innovative soon i will try it

Menaga Sathia said...

நன்றி எல்கே!!

நன்றி புதிய மனிதா!!

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி தமிழ்த்தோட்டம்!!

Menaga Sathia said...

நன்றி சகோ!! பில்டர் காபிதானே ,போட்டு தருகிறேன் உங்களுக்கு...

நன்றி வெறும்பய!!

நன்றி சசி!!

நன்றி குறிஞ்சி!!

Menaga Sathia said...

நன்றி ஜெய்!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி சாரு அக்கா!!செய்து பார்த்து சொல்லுங்கள்....

Thenammai Lakshmanan said...

ம்ம் பருப்பு உருண்டையில் ரசமா.. செய்து பார்த்துடுறேன்.. மேனகா..:))

வல்லிசிம்ஹன் said...

அதிசயமா இருக்கு. ரசத்தில வடை உண்டு. இப்போ பருப்புருண்டையேவா!!!நல்லாத்தான் இருக்கும். செய்து பார்க்கலாம் நன்றி மேனகா.

Nithu Bala said...

puthiya recipe..thanks dear for sharing..

ராமலக்ஷ்மி said...

நானும் இப்பதான் கேள்விப் படுகிறேன். செய்து பார்க்கிறேன். நன்றி மேனகா.

Priya Suresh said...

Romba pidicha paruppu urundai rasam..superaa irruku Menaga..

எஸ்.கே said...

இது புதுசா இருக்கே! சூப்ப்பர்!

Krishnaveni said...

looks so good, new recipe, great

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

wow...புதுசா இருக்குங்களே மேனகா... கலக்கறீங்க போல இருக்கே... சூப்பர்

Gayathri Kumar said...

Migavum nandraga irukku. Will try it soon.

Kanchana Radhakrishnan said...

பருப்பு உருண்டை குழம்பு தான் செய்வோம்.ரசம் வித்தியாசமாக இருக்கிறது.

தெய்வசுகந்தி said...

புதுசா இருக்குது மேனகா!

Menaga Sathia said...

நன்றி தேனக்கா!!

நன்றி வல்லி அக்கா!!

நன்றி நிது!!

நன்றி ராமலஷ்மி அக்கா!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி எஸ்.கே!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி புவனா!!

Menaga Sathia said...

நன்றி காயத்ரி!!

நன்றி காஞ்சனா!!

நன்றி தெய்வசுகந்தி!!

vanathy said...

Wow! yummy.

Jaleela Kamal said...

pruppu uruNdai paarththathum en thozi vaLLi napakam varuthu , nalla irukku

01 09 10