Thursday, 7 April 2011 | By: Menaga Sathia

முட்டையில்லாத ஆரஞ்ச் கேக் ரஸ்க் / Eggless Orange Cake Rusk

மகியின் குறிப்பை பார்த்து சிலமாற்றங்களுடன் செய்தது.நன்றி மகி!! கேக்காக செய்திருந்தால் 3 நாள் வரை இருக்கும்.இது செய்தவுடன் பாதி கேக்காகவும்,மீதி ரஸ்காகவும் செய்தவுடன் நானும் என் பொண்ணும் காலிபண்ணிட்டோம்.

தே.பொருட்கள்
ஆல் பர்பஸ் மாவு - 2 கப்
ஆரஞ்ச் ஜூஸ் -1/2 கப்
துருவிய ஆரஞ்ச் தோல் - 1/4 டீஸ்பூன்
சர்க்கரை - 1 1/4 கப்
வெண்ணெய் -1/2 கப்
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்
விருப்பமான நட்ஸ் வகைகள் - 1/4 கப்
தயிர் - 125 கிராம்
எள் -மேலே தூவ

செய்முறை

*வெண்ணெயுடன் சர்க்கரை கலந்து நன்கு பீட் செய்யவும்.மைதாவுடன் பேக்கிங் சோடாவை கலக்கவும்.

*சர்க்கரை கரைந்ததும் தயிர்+ஆரஞ்ச் ஜூஸ்+ஆரஞ்ச் தோல்+மைதா+நட்ஸ் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக கலக்கவும்.

*கேக் பாத்திரத்தில் கலவையை ஊற்றி எள்ளை தூவி,180°C முற்சூடு செய்த அவனில் 25 நிமிடம் பேக் செய்யவும்.

*கேக் ஆறியதும் துண்டுகளாகி அவன் டிரேயில் வைத்து மீண்டும் அவனில் 140°C ல் 1 1/4 மணிநேரம் பேக் செய்யவும்.

*ஆரஞ்ச் சுவையுடன் ரஸ்க் தயார்.காற்று புகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

சசிகுமார் said...

அக்கா ஆரஞ்சு கேக் என்று சொல்லிட்டு ஏதோ Brown color ல செய்து இருக்கீங்க. எங்களை ஏமாத்த முடியாது நாங்கெல்லாம் பயங்கரமான ஆளுங்க ஹி ஹி ஹி

Geetha6 said...

yummy !!!

இராஜராஜேஸ்வரி said...

முட்டையில்லாமல் செய்முறை தந்ததற்கு நன்றி.

GEETHA ACHAL said...

romba nalla iruku menaga....

Prema said...

Delicious rusk,perfect with a cup of tea...

சாருஸ்ரீராஜ் said...

எங்களுக்கு தராமால் நீங்களே சாப்பிட்டாச்சா மேனகா.. சூப்பர்.

Vimitha Durai said...

Orange flavored rusk looks so inviting and mouth watering...

Chitra said...

Thank you for this super recipe.

Priya Sreeram said...

nice recipe for the eggless version !

Valar Siva said...

Looks delicious dear!!!

valar
http://valarskitchen-basics.blogspot.com/

MANO நாஞ்சில் மனோ said...

ம்ம்ம் இதையெல்லாம் பார்த்துட்டு எனக்கு பெருமூச்சிதான் வருது ம்ம்ம் என்னைக்கு ஊர் போயி நல்ல சாப்பாடு சாப்பிட போறேனோ....

Sarah Naveen said...

looks so yummy!!!!

Unknown said...

mekavum arumaiyaga irruku :) Muttai illa recipes oda bookmark panniduven

Shanavi said...

Orange manamudham arumaiyana rusk..Arpudham

Priya Suresh said...

Super delicious cake, konjam yeduthukalam pola irruku..

Mahi said...

ரஸ்க் நல்லா இருக்கு மேனகா! செய்து பார்த்து போஸ்டும் பண்ணிட்டீங்க,சந்தோஷமா இருக்கு! தேங்க்ஸ்! :)

Mrs.Mano Saminathan said...

ஆரஞ்சு கேக் ‍ரஸ்க் அருமை மேனகா! பார்க்கும்போதே சாப்பிடத் தூண்டுகிறது!

Asiya Omar said...

அருமை மேனகா.

Jaleela Kamal said...

ரொம்ப அருமை முன்பெல்லாம் ரஸ்க் என்றால் ரொம்ப பிடிக்கும் சாப்பிட்டு டீகுடிக்க நல்ல இருக்கும், எங்கே நேரம் இருக்கு இதெல்லாம் செய்ய,கலக்குங்க

01 09 10