Monday, 20 August 2012 | By: Menaga Sathia

நாண் / 4 Varieties Of (Eggless 'N' Yeast Free) Naan With Stove Top Method

 எனக்கும்,என் பொண்ணுக்கும் ரொம்ப பிடித்தமான ரொட்டி இது.ஈஸ்ட் மற்றும் முட்டை சேர்க்காமல் சீஸ் நாண்,பட்டர் நாண்,கார்லிக் நாண்,சோயா கீமா நாண் என 4 வகைகளில் செய்துள்ளேன்....இந்த அளவில் 4 நாண்கள் வரும்.

தே.பொருட்கள்

மைதா - 2 கப்
பேக்கிங் பவுடர் -  1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*மைதா+உப்பு+பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாக கலக்கவும்.

*தயிருடன் மைதா கலவையை கலந்து தேவையான நீர் சேர்த்து சற்று தளர்த்தியான பதத்தில் பிசையவும்.

*கடைசியாக எலுமிச்சை சாறை மாவில் கலந்து நன்கு பிசையவும்.

*அதனை ஈரத்துணியால மூடி வெப்பமான இடத்தில் வைக்கவும்.
 *6-7 மணிநேரங்களில் மாவு இரு மடங்காக உப்பியிருக்கும்.
 *உப்பியிருக்கும் மாவை மீண்டும் கைகளால் மிருதுவாக பிசையவும்.

*அதனை 4 சம உருண்டைகளாக பிரிக்கவும்.

*மைதா மாவை பலகையில் தூவி ஒரு உருண்டையை எடுத்து கைகளில் ஒட்டாதவாறு பிசையவும்.

பட்டர் நாண் / Butter Naan

*ஒவல் வடிவத்தில் உருண்டையை கைகளால் இழுக்கவும்.
 *ஒரு பக்கத்தில் தண்ணீர் தடவி,நான் ஸ்டிக் கடாயை அடுப்பில் காயவைத்து தண்ணீர் தடவிய பக்கத்தை கடாயில் படுமாறு வைக்கவும்.
*அடிப்பக்கம் வெந்ததில் அடையாளமாக பப்பிள்ஸ் வரும்,உடனை தவாவை திருப்பி  நேரடியாக அடுப்பில் காட்டவும்.

*நாண் வெந்ததும் தானாகவே கடாயிலிருந்து வந்துவிடும்.

*கவனமாக காட்டவேண்டும்,இல்லையெனில் நாண் தீய்ந்துவிடும்.

*மேல் பக்கத்தில் உருகிய பட்டரை ப்ரெஷ்ஷால் தடவி விடவும்.

*இப்போழுது பட்டர் நாண் ரெடி!!

கார்லிக் நாண்/Garlic Naan

துருவிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை -சிறிது

*பட்டர் நாண் செய்தததைப் போலவே ஓவல் வடிவத்தில் செய்து அதன் மேல் பூண்டி+கொத்தமல்லித்தழை தூவி சப்பாத்தி உருட்டும் கருவியால் லேசாக உருட்டிவிடவும்.

*அப்போழுதுதான் அடுப்பில் காட்டும் போது பூண்டு+ கொத்தமல்லிதழை கொட்டாது.

*பட்டர் நாண் செய்ததை போலவே செய்து வெந்த பக்கத்தில் பட்டரை தடவி விடவும்.
 சோயா கீமா நாண் /Soya Kheema Naan

சோயா உருண்டைகள் -5
பொடியாக அரிந்த வெங்காயம் -2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது+கரம் மசாலா - தலா 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிது

*கொதிக்கும் நீரில் சோயா உருண்டைகளைப் போட்டு 10 நிமிடம் கழித்து நீரை வடிகட்டி குளிர்ந்த நீரில் நன்கு அலசி நீரை பிழியவும்.

*அதனை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

*கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+கரம் மசாலா +உப்பு சேர்த்து வதக்கவும். 

*வதங்கியதும் உதிர்த்த சோயாவை சேர்த்து நங்கு உதிரியாக வரும் வரை வதக்கி கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.


*ஒரு உருண்டையை எடுத்து சோயா கலவையை வைத்து ஓவல் வடிவத்தில் செய்யவும்.

*ஸ்டப்பிங் வெளியே வராதபடி செய்யவும்.

* பட்டர் நாண் செய்ததை போலவே செய்யவும்.
 சீஸ் நாண்/Cheese Naan

சீஸ் துண்டுகள்

*ஒரு உருண்டையை எடுத்து சீஸினை வைத்து மெதுவாக உருட்டி இழுக்கவும்.
 *இல்லையெனில் சீஸ் உருகி வெளியே வந்துவிடும்,பட்டர் நாண் செய்ததை போலவே செய்யவும்.
*விருப்பமான க்ரேவியுடன் பரிமாறவும்.

பி.கு

*சோயா ஸ்டப்பிங் பதில் சிக்கன் கீமா அல்லது மட்டன் கீமா வைத்து செய்யலாம்.அப்படி செய்யும் போது ஸ்டப்பிங் நன்கு டிரையாக இருக்கவேண்டும்.

*சோயா உருண்டைக்கு பதில் சோயா க்ரனுல்ஸூம் பயன்படுத்தலாம்.

*ஒவ்வொறு நாண் வெந்த பிறகு ப்ரெஷ்ஷால் உருகிய பட்டரை தடவி விடவும்.

20 பேர் ருசி பார்த்தவர்கள்:

Akila said...

wow naan looks great... never know it can be prepared without yeast...

Event: Dish Name Starts With N till August 31st
Learning-to-cook

Regards,
Akila

angelin said...

பார்க்கவே அருமையா இருக்கு மேனகா ..என் பொண்ணுக்கும் ரொம்ப பிடிக்கும் ..கண்டிப்பா செய்திட்டு சொல்கிறேன்

Anonymous said...

நான் சூப்பரா இருக்கும்ல?

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையா இருக்கு...

வீட்டில் செய்து பார்க்க வேண்டும்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

ஹுஸைனம்மா said...

நாண்-ஐ இப்படியும் செய்யலாமா!! ஆச்சர்யம். பட்டூராவுக்கு இதெதானே செய்வோம். அதைப் போலத்தானே.

பிசைந்த மாவு ரொம்ப தளர்வா தெரியுதே.. கையில் ரொம்ப ஒட்டுமோ?

Hema said...

Wow, wow delicious, I've tried making this with the pressure pan..

Priya said...

Ada ada variety varietyaa naan, kalakuringa Menaga..Especially that cheese naan yennoda favourite.

Nithu Bala said...

Thanks for yeast free recipe. Love it.

Sangeetha Nambi said...

Yum Yummy....
http://recipe-excavator.blogspot.com

சி.பி.செந்தில்குமார் said...

அதானே,ஆத்துக்காரருக்கு பிடிச்சதை சமைக்காதீங்க, நீங்க 2 பேருமே ஹி ஹி ( சும்மா )

Asiya Omar said...

மிக அருமை.

வரலாற்று சுவடுகள் said...

அருமை!

tamilsasikitchen said...

Delicious naan...Like to try it without yeast....

S.Menaga said...

@ ஹூசைனம்மா

பட்டூராவுக்கு எலுமிச்சை சாறு சேர்க்கமாட்டாங்க...

மாவு தளர்வாக இருந்தால் தான் நாண் மிருதுவாக ,இழுக்க வரும்.கையில் ஒட்டினால் மேலும் சிறிது மாவை தூவி பிசையவும்.

சிநேகிதி said...

வாவ் விதவிதமாக நான் சூப்பர்

Premalatha Aravindhan said...

wow perfect naan,my daughter's fav...

சிநேகிதி said...

hi dear, Inviting you to join my event " Party snacks",more detais : http://en-iniyaillam.blogspot.co.uk/2012/08/party-snacks-event-announcement.html

Rekha said...

wow super yummy naan.. looks so good
http://www.indiantastyfoodrecipes.com/

Jay said...

wow...just wonderful..:)
Tasty Appetite

Priyas Feast said...

Wow..superb varities of naan...asathiteenga :)

01 09 10