வெனிலா குக்கீஸ் செய்ய தே.பொருட்கள்
மைதா மாவு - 1 1/4 கப்
வெண்ணெய் - 3/4 கப் அறை வெப்ப நிலை
தயிர் -1/4 கப்
சர்க்கரை - 3/4 கப் பொடித்தது
உப்பு - 1/2 டீஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - 1 1/2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
சாக்லேட் குக்கீஸ் செய்ய தே.பொருட்கள்
மைதா மாவு - 1 1/4 கப்
வெண்ணெய் - 3/4 கப் அறை வெப்ப நிலை
தயிர் -1/4 கப்
சர்க்கரை - 3/4 கப் பொடித்தது
உப்பு - 1/2 டீஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - 1 1/2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
கோகோ பவுடர் -2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
*வெனிலா குக்கீஸ் செய்ய மைதா+பேக்கிங் பவுடர்+உப்பு கலந்து 2 முறை சலிக்கவும்.வெண்ணெய்+சர்க்கரை+தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
*சர்க்கரை கரைந்ததும் எசன்ஸ் சேர்த்து கலந்து,மைதா கலவையை சேர்த்து கெட்டியாக பிசையவும்.பிசைந்த மாவை 2 சம உருண்டைகளாக எடுக்கவும்.
*சாக்லேட் குக்கீஸ் செய்ய மைதா+பேக்கிங் பவுடர்+உப்பு+கோகோ பவுடர் கலந்து 2 முறை சலிக்கவும்.வெண்ணெய்+சர்க்கரை+தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
*சர்க்கரை கரைந்ததும் எசன்ஸ் சேர்த்து கலந்து,மைதா கலவையை சேர்த்து கெட்டியாக பிசையவும்.பிசைந்த மாவை 2 சம உருண்டைகளாக எடுக்கவும்.
செக்கர்போர்ட் குக்கீஸ் செய்ய
*வெனிலா மற்றும் சாக்லேட் கலவையின் 1 உருண்டையை எடுத்து Rectangle ஷேப்பில் உருட்டி க்ளியர் ராப் கவரில் சுருட்டி ப்ரிட்ஜில் 2 மணிநேரம் வைக்கவும்.
*பின் வெனிலா கலவையின் மீது சாக்லேட் கலவையை வைத்து 2 சம பாதியாக வெட்டவும்.
*வெட்டிய பாதியை ஆல்டர்னேட்டாக அதன் மேல் வைத்து 1 இஞ்ச் அளவில் வெட்டவும்.
*ஒவ்வொரு 4 இஞ்சும் ஆல்டர்னேட்டாக இருக்கும்.மேலே உள்ள படத்தில் உள்ளவாறு ஆல்டர்னேட்டாக,பால் தடவி ஒட்டி மீண்டும் க்ளியர் ராப் கவரில் சுருட்டி ப்ரிட்ஜில் 1 மணிநேரம் வைக்கவும்.
*பின் ப்ரிட்ஜிலிருந்து எடுத்து 1 இஞ்ச் அளவில் குறுக்கே வெட்டினால் அழகான செக்கர்போர்ட் குக்கீஸ் ரெடி.
ஜூப்ரா குக்கீஸ் செய்ய
*வெனிலா மற்றும் சாக்லேட் கலவையின் இன்னொரு உருண்டையை Rectangle ஷேப்பில் உருட்டவும்.ஏதாவது ஒன்று,மற்றொன்றை விட அதிகளவில் உருட்டவும்.
*நான் சாக்லேட் கலவையை ,வெனிலா கலவையை விட நீண்ட அளவில் உருட்டியுள்ளேன்.
*உருட்டிய சாக்லேட் கலவையின் உள்ளே வெனிலா கலவையை வைத்து மெதுவாக பாய் சுருட்டுவது போல சுருட்டி கடைசியாக பால் தடவி ஒட்டி கிளியர் ராப் கவரில் சுருட்டி ப்ரிட்ஜில் 1 மணிநேரம் வைத்திருந்து 1 இஞ்ச் அளவில் வெட்டினால் ஜூப்ரா குக்கீஸ் ரெடி.
*அவன் டிரேயில் அலுமினியம் பாயில் வைத்து 2 வகை குக்கீஸ்களை இடைவெளி விட்டு அடுக்கவும்.
*அவனை 170°C டிகிரிக்கு 10 நிமிடம் முற்சூடு செய்யவும்.
*முற்சூடு செய்த அவனில் வைத்து 10-15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

31 பேர் ருசி பார்த்தவர்கள்:
Wow.. Romba nalla iruku.. Seiyanum endra aasai varukerathu
மேனகா,கலர் கலரா பார்க்கவே சூப்பர் ரா இருக்கு குக்கீஸ்.... ஷேப் ரொம்ப அழகா வந்து இருக்கு.... ரொம்ப பொறுமை உங்களுக்கு...
Looks yum...nice pictures...
Wow awesome..Lovely cookies :)
Christmas Pops | Star Pops | Biscuit Pops | Christmas Recipes
Its tooo perfect... Admired ur clicks...
http://recipe-excavator.blogspot.com
Menaga, superaa irruku rendu cookiesum..Yennaku oru parcel venum christmasku, yeppo anupuringa?
tremendous menaga..Looks very neat and perfect..
wow, super cookies.. bookmarked :)thnx for sharing !
ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு குக்கீஸ் .
நானும் செய்யப்போறேன் உங்க ரெசிப்பியை பார்த்து .
1. வெண்ணெயின் அளவையும் “கப்” கணக்கில் கொடுத்திருக்கீங்க்ளேப்பா, எப்படி அளக்கறது அதை? கிராம் கணக்கில் கொடுத்தா வசதியா இருக்கும். அல்லது, உருக்கி நெய்யாக்கி, அளந்துகொள்ளலாமா?
2. செக்கர் போர்ட் செய்முறை சரியாப் புரியலை எனக்கு. இருந்தாலும், செய்து பாத்தா எப்படியாவது கொண்டுவந்திடலாம்னு நினைக்கீறேன்.
@ஹூசைனம்மா
வெண்ணெயை ஒருபோதும் உருக்கி செய்யக்கூடாது.
வெண்ணெய் அளவு
1/2 கப் = 115 கிராம் = 120 மிலி = 1 Stick
உங்களுக்கு செக்கர்போர்ட் விளக்கபடம் புரியவில்லையெனில் யூடிபில் நிறைய வீடியோக்கள் இருக்கு.அதில் பார்த்து செய்து பாருங்க,ரொம்ப ஈஸிதான்.செய்யும்போது ஈசியா வந்துவிடும்...
உடன் பதிலுக்கு ரொம்ப நன்றி மேனகா. எனக்கு எந்த ரெஸிப்பி செஞ்சாலும், அளவுகள்தான் குழப்பும் அல்லது பிரச்னையாகும். அதான் கேட்டுகிட்டேன். நன்றிப்பா.
//வெண்ணெயை ஒருபோதும் உருக்கி செய்யக்கூடாது.//
எப்பவும் வெண்ணெய் வச்சுத்தான் பட்டர் பிஸ்கட் செய்றது. ஆனா, பதிவர் அஸ்மா ஒருமுறை நெய் வச்சு பட்டர் குக்கீஸ் செய்றதுக்கு ரெஸிப்பி கொடுத்திருந்தாங்க. முதல் முறை நெய் யூஸ் பண்ற ரெஸிப்பி பார்த்ததினால், சந்தேகத்தோடுதான் செஞ்சேன், ஆனா நல்லாவே வந்துச்சு. அதனாலத்தான் கேட்டேன்.
இப்ப அளவு கொடுத்திட்டீங்க, அதனால வெண்ணெயிலேயே செஞ்சு பாக்கிறேன்.
checkerboard cookies are in my to-do list for long time. Have bookmarked one recipe already. As yours is the eggless one, I first prepare this. looking good.
@ஹூசைனம்மா
இந்த குக்கீஸ்க்கு நான் முட்டைக்கு பதில் தயிர் சேர்த்து செய்துள்ளதால் வெண்ணெயைஉருக்காமல் அறைவெப்பநிலையில் எடுத்து செய்யவேண்டும்.
நெய் பிஸ்கட் மொத்தமே 3 பொருட்கள் மட்டும் செர்த்து உபயோகப்படுத்துவதால் நன்றாக வரும்.நானும் இந்த ரெசிபியை ஏற்கனவே போட்டுள்ளேன்.
ஓக்கே.. ஓக்கே, புரியுதுப்பா, ஓக்கே!! நன்றி.
parkave supera irruku menaga :)
wow....delicious cookies dear :)beautiful clicks.
அருமையாக வந்திருக்கு.
பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Beautiful cake and that too eggless i very interesting..Thanks for the recipe..
They look simply gorgeous..
படத்தோடு விளக்கம் அருமையா இருக்கு.
ம்... என்ன பண்றது போட்டோ பார்த்து ரசிச்சிக்க வேண்டியதுதான் அக்கா.
Superb explanation!
இன்னொரு சந்தேகம்... ஹி. ஹி.. ஸாரி, கோச்சுக்காதீங்க.
அதாவது பட்டர் 1 கப் என்பது 115 கிராம்னு சொல்றீங்க. அப்ப மைதா, தயிர், சீனிக்கு? ஏன்னா, பொதுவா ஒரு கப்னா, 200 கிராம்னுதான் ரெஸிப்பி ஸ்டாண்டர்ட்.
idhu romba romba sooperr...
@ ஹூசைனம்மா
நான் வெண்ணெயை அரைகப் அளவுக்குதன் கிராமில் கொடுத்துள்ளேன்.நார்மலாக solid &unsolid பொருட்களுக்கு கிராம் கணக்கில் வேறுப்படும்.
உங்களுக்கு இந்த லிங்க் உதனும்னு நினைக்கிறேன்,பாருங்கள்..
http://www.exploratorium.edu/cooking/convert/measurements.html
நல்ல ஒரு சமையல் குறிப்பு.
போட்டோவும் அருமை.
மிக்க நன்றி.
Tamil News Service
சாரிப்பா, உங்களை ஒரு வழி பண்ணிட்டேன் போல. :-))
காலையில் வேறு தளங்களில் இதே ரெஸிப்பிகளைத் தேடியதில், கிராமில் அளவுகள் கிடைத்தது. (தயிருக்குப் பதிலா முட்டை சேர்த்து) பார்த்துச் செய்திட்டேன்!! தேடும்போது, “ஸ்மைலி ஃபேஸ் குக்கீ” முறையும் கிடைச்சுது. அதையும் சேத்தே செஞ்சுட்டேன். ஒரே கல்லில் மூணு மாங்காய்!!! :-D
எந்த ரெஸிப்பியும் இவ்வளவு ஸ்பீடாச் செஞ்சதில்லை நான். ஆர்வத்தைத் தூண்டியதற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மேனகா!!
@ஹூசைனம்மா
ஆஹா ஸ்மைலி பேஸ் குக்கீஸூம் செய்தாச்சா ,சபாஷ்பா உங்க ஆர்வத்தை தூண்டியதில் மிக்க மகிழ்ச்சி,உடனடியாக செய்ததில் சந்தோஷமும் நன்றியும் கூட....ஸ்மைலி பேஸ் குக்கீஸ் கூட செய்யனும்னு ரொம்ப நாளா ஆசை,செய்துடுவோம்.
ரொம்ப நன்றாக இருக்கின்றது.
Checker biscuit romba nallavum alzhagavum irukkuthu.
Post a Comment