Friday, 18 October 2013 | By: Menaga Sathia

அக்காரவடிசல் / Akkaravadisal



அக்காரவடிசல்  = அக்காரை+வடிசல்.அக்காரை என்றால் சர்க்கரை,வடிசல் என்றால் நன்றாக குழைந்து வெந்த சாதம்.சர்க்கரை பொங்கல் போலதான் என்றாலும் இதற்கும் சர்க்கரை பொங்கலுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

இதில் பாலும்+நெய்யும் தான் அதிகம் சேர்க்க வேண்டும்.பாரம்பரியமாக செய்யபடும் அக்காரவடிசலில் முந்திரி திராட்சை  சேர்ப்பதில்லை.இதனை செய்யும் போது அடுப்பை ஒரே சீராக எரியவிட்டு சமைக்கவேண்டும்,இல்லையெனில் அடிப்பிடிக்கும்.

பச்சை கற்பூரத்தை சிறிதளவே சேர்க்கவும்,இல்லையெனில் கசக்கும்.

புரட்டாசி+மார்கழியில் பெருமாளுக்கும்,அம்பாளுக்கும்  நிவேதனம் செய்வது சிறப்பு.நவராத்தியின் 9ஆம் நாளன்று நிவேதனம் செய்வது மிகசிறப்பு!!

தே.பொருட்கள்

பாஸ்மதி - 1/4 கப்
பாசிப்பருப்பு -1/8 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
பச்சை கற்பூரம்-சிறிதளவு
பால் - 3 கப்+மேலும்..
நெய் - 1/4 கப்
வெல்லம் - 1/4 கப்

செய்முறை

*அரிசி+பருப்பு இவ்விரண்டையும் கழுவி சிறிதுநேரம் துணியில் உலர்த்தவும்.

*பின் குக்கரில் 1 டீஸ்பூன் நெய்விட்டு உலர்ந்த அரிசி+பருப்பை வாசனை வரும் வரை வறுத்து 2 கப் பால் சேர்த்து வேகவிடவும்.

*பால் சுண்ட சுண்ட மேலும் பால்+நெய் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.

*மற்றொரு பாத்திரத்தில் வெல்லம்+சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிக்கட்டவும்.

*நன்கு குழைய வெந்த இளஞ்சூடான பொங்கலில் வெல்லகரைசலை சேர்த்து மேலும் சிறிதுநேரம் விடாமல் கிளறவும்.

*சூடான பொங்கலில் வெல்லத்தை ஊற்றினால் திரிந்துவிடும்,அதனால் சிறிது ஆறியபிறகு ஊற்றவும்.
*பின் ஏலக்காய்த்தூள்+பச்சை கற்பூரம் சேர்த்து இறக்கவும்.
*சுவையான அக்காரவடிசல் ரெடி!!

12 பேர் ருசி பார்த்தவர்கள்:

Yaathoramani.blogspot.com said...

எனக்கு மிகவும் பிடித்த உணவு
செய்முறைத் தெரியாமல்தான்
உறவினர் வீட்டில் எப்போதாவது
கிடைக்கும்போது சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்
இனி செய்து பார்த்துவிடுவோம்
பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

அறியாதன அறிந்தோம்
படங்களுடன் பதிவு மிக மிக அருமை
நாங்களும் உடன் பயணிப்பதைப்போல் உணர்ந்தோம்
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

கொஞ்சம் (அதிகமாகவே) பொறுமையாக செய்ய வேண்டும் போல... படத்துடன் கூடிய விளக்கத்திற்கு நன்றி சகோதரி...

Avainayagan said...

அக்கார வடிசல் மிக மிக சுவையாக இருக்கும். செய்முறைக் குறிப்பு பார்க்கும் போது எளிதாகத்தான் தோன்றுகிறது. செய்து சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். பதிவிற்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அக்காடவடிசல் படங்களும் செய்முறையும் நாக்கில் நீரை வரவழைக்கின்றன.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

hotpotcooking said...

Looks so delicious, I too love this.

உஷா அன்பரசு said...

ம்ம்.. இது போன்ற சமையல் ரெசிப்பிக்களை பார்த்து ஏங்க வேண்டியதுதான்... எனக்கு உண்மையிலேயே நல்லா சமைக்கறவங்களை ரொம்ப பிடிக்குங்க.. என்ன பண்றது இது போலல்லாம் வித விதமாய் சமைக்கிறவங்க தூரமா போய்ட்டிங்க.. இல்லன்னா வீடு தேடி வந்துடுவேன்... இந்த ரெசிப்பி எல்லாம் கத்துக்க இல்ல... இந்த ரெசிப்பி எல்லாம் செய்யும் போது சாப்பிட... ஹா.. ஹா.. சரி பரவாயில்லை கொரியராவது அனுப்பி வைங்க...!

great-secret-of-life said...

my fav rice.. very nice

'பரிவை' சே.குமார் said...

செய்து பார்த்திடலாம்..
அக்காரவடிசல் புதுமையாக இருக்கு.

Priya Anandakumar said...

very very delicious and made very nicely.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

சகோ வணக்கம்,

தினமணி தீபாவளி மலருக்கு தங்களது வலைத்தளத்திலிருந்து பதிவுகளை எடுக்க முடியவில்லை. அதனால் இரண்டு விதமான ஸ்வீட் செய்முறைகளை (சிறிய அளவில்) எனது மெயிலில் அனுப்பவும்.
நன்றி!

-தோழன் மபா.
greatmaba@gmail.com

Asiya Omar said...

மிக அருமை.

01 09 10