மைசூர் பாகை 4-5 முறை செய்து பார்த்து,ஒருமுறைகூட சரியாக வரவில்லை.நானும் விடாது கறுப்பு போல, கடைசி முறை செய்து பார்ப்போம்னு செய்து பார்த்ததில் சரியாக வந்துவிட்டது.
கடலைமாவும்,நெய்யும் புதுசா இருந்தால் மைசூர் பாகு நன்றாக இருக்கும்.நெய்யை சூடு படுத்தி செய்தால் தான் மைசூர் பாகு கலராக வரும்.
அக்காவின் நிச்சயதார்த்ததின் போது வீட்டிலேயே சமையல்காரர் வரவைத்து மைசூர்பாக் செய்தாங்க,அதன் செய்முறை ஒரளவுக்கு ஞாபகம் வைத்து செய்து பார்த்தேன்.
எனக்கு நெய் மைசுர் பாக் விட க்ரிஸ்பியாக இருக்கும் மைசூர் பாக் தான் பிடிக்கும்.இதனை கைவிடாமல் கிளறிட்டே இருக்கனும்.கூடுபோல் வரும் போது அதவது நிறைய புள்ளிகள் போல சேர்ந்து வரும் போது இறக்கி சமப்படுதத வேண்டும்.அந்தளவுக்கு வரவில்லை எனினும் அடுத்த முறை செய்யும் போது நிச்சயம் வந்துவிடும் என நம்பிக்கை வந்துவிட்டது.
தட்டில் வைத்து சமப்படுத்தி எடுக்கும் படத்தினை எடுக்க மறந்துவிட்டேன்...
தே.பொருட்கள்
கடலைமாவு - 1/2 கப்
நெய் - 1 கப்
சமையல் எண்ணெய் -1/2 கப்
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை
*கடலைமாவுன் 1/2 கப் எண்ணெய் கலந்து கட்டியில்லாமல் கலக்கவும்.
*1 கம்பி பதம் என்பது கட்டை விரலுக்கும்,ஆள்காட்டி விரலுக்கும் 1 இழை போல வரும்.அதுதான் சரியான பதம்.
*இன்னொரு அடுப்பில் சிறுதீயில் நெய்யை சூடு படுத்தவும்.
*கொஞ்ச கொஞ்சமாக சூடுபடுத்திய நெய்யை ஊற்றவும்.மாவு நல்லா பொங்கி வரும்.கவனமாக செய்யவும்.
*கடைசியாக மாவு ஓரங்களில் ஒட்டாமல் கூடு போல வரும் போதும் ,நெய் பிரிந்து வரும் போதும், இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி இளஞ்சூடாக இருக்கும்போது துண்டுகள் போடவும்.
Sending to Asiya akka's WTML event By Gayathri & Diwali Delicacies Event By Priya and Sangee & Diwal Announcement By Gayathri
15 பேர் ருசி பார்த்தவர்கள்:
மைசூர்பாக் செய்வது ஒன்றும் கஷ்டமாகத் தெரியவில்லை, அதை சாப்பிடுவதுதான்... ஹி ஹி ...
ம்..ம்...தீபாவளி பலகாரம் எல்லாம் ரெடியாகுது போல... நானும் காலையில் ஆபிசுல உட்கார்ந்துகிட்டு யோசிச்சிட்டே இருந்தேன்.. எனக்கு நிறைய ப்ரெண்ட்ஸ் தீபாவளி அப்ப வருஷா வருஷம் கடையிலேயே ஸ்வீட்ஸ் வாங்கி கொடுத்துடுவேன்.. ஆனா எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் நிறைவா இருக்காது. இந்த வருஷம் வீட்டிலயே ட்ரை செய்து எதாவது செய்யலாம்னு நினைக்கிறேன். ஈசியா டேஸ்ட்டியா முறுக்கு,அப்புறம் வேற எதாவது ஸ்வீட் பதிவு போடுங்க...
அன்புள்ள மேனகா,
வணக்கம்.
மைசூர்ப்பாகு படமும் செய்முறைகளும் அருமையோ அருமை.
மிக மிக இனிப்பாக உள்ளது.
அதைவிட அந்த முதல் படத்தில் டைமன் ஷேப்பில் ஆறு மைசூர் பாகுகளை ஒட்டி வைத்து ஒரு இனிப்பான கோலம் வரைந்துள்ளீர்களே, அடடா ... அதுதான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
இதுவரை எங்களுக்கும் சரியாக வந்ததில்லை...! (பல்வலி உண்டு... ஹிஹி...)
நன்றி சகோதரி...
Mysore Pak supera vandu irukku, even I like this Mysore Pak better than the ghee one..
Diwali bayangar a busy a pogudhu pola. kalakkunga.How z ur son ?
wow awesome sweet and perfectly made...
"BCAM" - Breast Cancer Awareness Month - FUND Raising EVENT - Oct 1st to Nov 15th
"BCAM" - Breast Cancer Awareness Month -Submit Pink Recipes- Oct 1st to Oct 31st
lovely and tempting mysore pakku...
மைசூர் பாக் சூப்பராக வந்திருக்கு.காயத்திரியின் WTML Event டிற்கு இணைத்தமைக்கு நன்றி.
Super Menaga, neenga nijamaavey vidadhu karuppu pola try panni super a seidhurukeega, thanks for the tips. I usually ask my sis to make it, she's like you makes perfect Mysore pak...
இந்தத் தீபாவளிக்குச் செய்து பார்த்துட வேண்டியதுதான்....
supera irukku.. parcel anuppunga pls..
very very delicious and soft mysore pak :) looks yummm !!
yummy...looks perfect
super classic treat for
diwali, lovely diamonds...
Post a Comment