Thursday 13 March 2014 | By: Menaga Sathia

அகத்தி கீரை சாம்பார் / Agathi Keerai Sambhar


*இந்த கீரையின் ஸ்பெஷல் காய்ந்த பிறகும் சமைக்கலாம். 

*கொழுந்தாக இருக்கும் அகத்தி கீரையை அப்படியே காயவைத்தால் நன்கு உலர்ந்துவிடும்,அதனை  சாம்பார் மற்றும் தண்ணீசாறு செய்யலாம்.

*ப்ரெஷ் கீரையாக இருந்தால் மட்டும் வதக்கி சேர்க்கவும்,காய்ந்த கீரையாக இருந்தால் சாம்பார் கொதிக்கும் போது கடைசியாக சேர்க்கலாம்.

*கீரை சாம்பாரில் மட்டும் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்க்க கூடாது,சேர்த்தால் சாம்பாரின் சுவை மாறிவிடும்.

தே.பொருட்கள்

துவரம்பருப்பு - 1/3 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
புளிகரைசல் - 1/4 கப்
கீறிய பச்சை மிளகாய் -2
காய்ந்த அகத்தி கீரை - 1/4 கப்
சாம்பார் பொடி - 1 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

வடகம் - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/2 டீஸ்பூன்

செய்முறை
*பருப்பை மஞ்சள்தூள்+1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+தக்காளி+கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
*பின் வேகவைத்த துவரம்பருப்பு+சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
*கீரையை  நன்கு அலசி நீரை வடிகட்டவும்.
*சாம்பார் பொடி வாசனை போனதும் புளிகரைசல் +உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
*பின் கீரையை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும்.
*எண்ணெய் காயத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.
பி.கு

*ப்ரெஷ் கீரையாக இருந்தால் 1/2 கப்பினை வெங்காயம் தக்காளி வதக்கும் போதே வதக்கி செய்யவும்.

15 பேர் ருசி பார்த்தவர்கள்:

nandoos kitchen said...

super healthy and tasty sambar.

Shama Nagarajan said...

love it

Priya Suresh said...

I do often this sambhar, superaa irruku Menaga.

'பரிவை' சே.குமார் said...

நல்ல சமையல் குறிப்பு.
அகத்தீக் கீரை காய்ந்தாலும் சமைக்கலாம் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன்....

'பரிவை' சே.குமார் said...

நல்ல சமையல் குறிப்பு.
அகத்தீக் கீரை காய்ந்தாலும் சமைக்கலாம் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன்....

Priya said...

Agathu keerai ellam kedaikutha unga oorula .Migavum arumai menaga akka.

Priya said...

I am ready with the post can i send it to you ?How is ur new house ,r u busy settlig up..

Priya Anandakumar said...

Super Menaga, agathi keerai ellam ungallukku kidaikudhu. Its been ages after I had them, very tempting sambar

திண்டுக்கல் தனபாலன் said...

அகத்திக்கீரை பொரியல் செய்வார்கள்... இது புது முறை...

நன்றி...

great-secret-of-life said...

healthy sambar

Gita Jaishankar said...

I did not know that you can use the dried leaves too, this is very useful to know, delicious looking sambar, healthy one too :)

”தளிர் சுரேஷ்” said...

அருமையான குறிப்பு! நன்றி!

மாதேவி said...

அகத்திக் கீரை சாம்பார் நன்றாக இருக்கிறது.

great-secret-of-life said...

healthy sambar.. love it

Unknown said...

Healthy and tasty sambhar...yummy dear :)

01 09 10