Monday 20 April 2015 | By: Menaga Sathia

சோள முட்டை ஆப்பம்/ Jowar (Sorghum ) Egg Appam | Millet Recipes

print this page PRINT IT
அரிசிக்கு பதில் சிறுதானியத்தில் செய்துள்ளேன்.இதில் முட்டை+ஆப்பமாவு இரண்டையும் கலந்து ஆப்பம் செய்துருக்கேன்.இல்லையெனில் ஒவ்வொரு ஆப்பத்திலும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி மிளகுத்தூள் தூவி செய்யலாம்.

தே.பொருட்கள்

சோளம் -1 கப்
வரகரிசி- 1 கப்
வேகவைத்த வரகு சாதம் -1/4 கப்
உப்பு -தேவைக்கு

ஆப்பமாவில் கலக்க‌

கெட்டி தேங்காய்ப்பால் -1/4 கப்
சர்க்கரை- 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா -1/4 டீஸ்பூன்

முட்டை ஆப்பத்திற்கு

முட்டை- 2
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
உப்பு- 1 சிட்டிகை
சோம்புத்தூள்- 1/2 டீஸ்பூன்

செய்முறை

*சோளம்+வரகரிசி இரண்டையும் ஒன்றாக குறைந்தது 6 மணிநேரம் ஊறவைக்கவும்.சோளம் ஊற நேரமாகும்.


*ஊறியதும் உப்பு+வரகரிசி சாதத்துடன் மிக நைசாக அரைத்து புளிக்கவைக்கவும்.

*மாவு புளித்ததும் தேவையான ஆப்பமாவில் தேங்காய்ப்பால்+பேக்கிங் சோடா+சர்க்கரை கலந்து 5 நிமிடம் வைக்கவும்.

*வேறொரு பாத்திரத்தில் முட்டை+மஞ்சள்தூள்+உப்பு+சோம்புத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
*இதனுடன் தேங்காய்ப்பால் கலந்த ஆப்பமாவை சேர்த்து நன்கு கலக்கவும்.


*ஆப்பசட்டியில் ஒருகுழிக்கரண்டி மாவை ஊற்றி,ஆப்பசட்டியை லேசாக சுற்றவும்.பின் மூடி போட்டு வேகவைக்கவும்.


*வெந்ததும் அதன் மீது சர்க்கரை தூவி தேங்காய்பாலுடன் பரிமாறலாம்.

*அல்லது சர்க்கரை தூவாமல் இடியாப்ப குருமாவுடன் பரிமாறலாம்.

*இது முட்டை சேர்க்காமல் செய்த சாதா ஆப்பம்.

பி.கு

*தேங்காய்ப்பாலை ஒரேடியாக மாவில் ஊற்றிவிட்டால் அதை உடனே சுட்டிவிடவேண்டும்.

*இதே ஆப்பமாவில் சர்க்கரை(அ) வெல்லம் சேர்த்து ஒலையாப்பம் செய்யலாம்.

4 பேர் ருசி பார்த்தவர்கள்:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சாப்பிட்டால் நிச்சயம் சுவையாக இருக்கும் கடையில் இருக்கும் என்றால் வேண்டியாவது சாப்பிடலாம்... சிலகாலம் போகட்டும்...
செய்முறை விளக்கத்துடன் அசத்தல்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Priya said...

Super appam menaga.Muttai smell varatha apathil?enaku muttai endal alargi athan keten.

Menaga Sathia said...

@Sathyapriya

சோம்புதூள்,மஞ்சள்தூள் சேர்ப்பதால் முட்டை வாடை நிச்சயம் வராது.

Mullai Madavan said...

Ennaku rendu plate parcel!

01 09 10