Thursday, 4 June 2015 | By: Menaga Sathia

பாவ் பாஜி / Pav Bhaji | Authenthic Pav Bhaji Recipe From Mumbai Juhu Beach

print this page PRINT IT 

நானும் பாவ் பாஜி செய்து போஸ்ட் செய்துருக்கேன்,ஆனால் அதை  விட இந்த குறிப்பு பிள்ளைகளிடம் செம ஹிட் .

இந்த குறிப்பு மும்மை ஜுஹு பீச் பகுதியில் செய்யப்படும் ரெசிபி.

இதில் உருளை,பட்டாணி மட்டும் சேர்த்தால் போதும்.அதேபோல் அதிக அளவு வெண்ணெய் சேர்க்க வேண்டும்.

நாம் பன்னை வெறும் வெண்ணெய் மட்டும் சேர்த்து டோஸ்ட் செய்வோம்,ஆனால் இதில் சில மசாலாக்க‌ளை சேர்த்து டோஸ்ட் செய்ததில் செம சுவை.

பின் இதில் மிக முக்கியமானது பாவ் பாஜி மசாலா பொடி.

தே.பொருட்கள்

பொடியாக நறுக்கிய குடமிளகாய் -1/4 கப்
நறுக்கிய தக்காளி- 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
வேகவைத்த உருளை- 2 பெரியது
வேகவைத்த பச்சை பட்டாணி- 1/2 கப்
பாவ் பாஜி மசாலா- 2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
தனியாத்தூள்- 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிதளவு
உப்பு -தேவைக்கு
எலுமிச்சை சாறு -1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய்- 1/2 கப்

செய்முறை

*கடாயில் குடமிளகாய்+நீர் சேர்த்து வேகவைக்கவும்.


*பின் அதனுடன் நறுக்கிய தக்காளி+வேக வைத்த உருளை (கையால் மசித்து சேர்க்கவும்)+பச்சை பட்டாணி+இஞ்சி பூண்டு விழுது+மஞ்சள்தூள்+சிறிது வெண்ணெய் சேர்த்து மேலும் நீர் ஊற்றி வேகவைக்கவும்.

*இதனை Potato Masher நன்றாக மசித்து விடவும்.தேவைக்கு சிறிது நீர் சேர்க்கவும்.

*இப்போழுது பாவ் பாஜி மசாலா+உப்பு+சிறிது கொத்தமல்லிதழை சேர்க்கவும்.

*மேலும் சிறிது நீர் ஊற்றி Potato Masher நன்றாக மசித்து விட்டு,வெண்ணெய் மற்றும் வெங்காயம் சிறிது சேர்க்கவும்.

*சிறிது இஞ்சி பூண்டு விழுது+வரமிளகாய்த்தூள்+பாவ் பாஜி மசாலா+உப்பு சிறிது சேர்க்கவும்.


*பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

*இவை அனைத்தையும் ஒன்றாக சேரும்படி கலந்து மீண்டும் Potato Masher மசித்து விடவும்.

*கலவை  நன்றாக கெட்டியாக வரும் போது இறக்கவும்.

பன் டோஸ்ட் செய்ய‌

பாவ் பன்- 4
வெண்ணெய்- 1/4 கப்
வரமிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா- 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லிதழை -சிறிது

செய்முறை

*கடாயில் பன்னை தவிர மேற்கூறிய பொருட்களை சேர்த்து லேசாக வதக்கி,பன்னை 2 ஆக வெட்டி டோஸ்ட் செய்யவும்.


பரிமாறும் முறை

*தட்டில் பாவ் மாசாலா ஊற்றி அதன் மேல் கொத்தமல்லிதழை+சிறிது வெண்ணை சேர்க்கவும்.

*சிறியதுண்டு எலுமிச்சை பழம் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் டோஸ்ட் செய்த பன்னை வைத்து பரிமாறவும்.

*இதே முறையில் செய்து பாருங்கள்,சுவை மிக அருமையாக இருக்கும்.

பி.கு

இதில் கேரட்+காலிபிளவர் என மற்ற காய்களை சேர்க்க வேண்டாம்.சுவை மாறிவிடும்.

6 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya said...

pudhumai ya iruku, seithu parka vendiyathuthan

Anuprem said...

Tasty.....

மனோ சாமிநாதன் said...

வித்தியாசமாக ஆனால் மிக அருமையாக இருக்கும்போலத்தெரிகிறது உங்கள் குறிப்பு! விளக்கமும் படங்களும் மிக அருமை! விரைவில் செய்து பார்க்கிறேன் மேனகா!

மனோ சாமிநாதன் said...

மேனகா! இதில் இரண்டு முறை இஞ்சி பூன்டு பேஸ்ட்டும் பாவ் பாஜி மசாலாவும் சேர்க்கச் சொல்லியுள்ளீர்கள்! அப்படித்தான் செய்ய வேண்டுமா? பாவ் பாஜி மசாலா செய்யும் முறையை எழுதவில்லையே?,

Menaga Sathia said...

ஆமாம் மனோம்மா,இரண்டு முறையும் சேர்க்க வேண்டும்.பாவ் பாஜி மசாலா என்ற வார்த்தையை ஹைலைட் செய்துருக்கேன், க்ளிக் செய்தால் ரெசிபி வரும்.

மனோ சாமிநாதன் said...

விபரம் எழுதியதற்கு அன்பு நன்றி மேனகா!

01 09 10