Wednesday, 17 August 2016 | By: Menaga Sathia

குட்டி உருளை வறுவல்/BABY POTATO MASALA | MADURAI MASALA RECIPE

வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த உருளை மசாலா.குட்டி உருளைக்கு பதில் பெரிய உருளையிலும் இதே போல் வேகவைத்து சதுரமாக வெட்டி செய்யலாம்.நன்றி சித்ரா !!

தே.பொருட்கள்

குட்டி உருளை -1/4 கிலோ
பொடியாக நருக்கிய வெங்காயம்- 1
நசுக்கிய இஞ்சி பூண்டு- 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு

அரைக்க‌
பொட்டுக்கடலை -11/2 டேபிள்ஸ்பூன்
புளி -ப்ளுபெர்ரி அளவு
வரமிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்
கரம் மசாலா- 1/4 டீஸ்பூன்
சோம்பு- 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்

தாளிக்க‌
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
கடுகு +உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை
* உருளையை வேகவைத்து தோலுரிக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.



*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம்+நசுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி உருளை 2 நிமிடங்கள் சேர்த்து வதக்கவும்.

*பின் அரைத்த மசாலா சேர்த்து நன்கு பொன்னிறமாக் வரும் வரை சிறுதீயில் கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


பி.கு
*என்னிடம் கொத்தமல்லிதழை இல்லாததால் நான் சேர்க்கவில்லை.

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

great-secret-of-life said...

Looks yum and perfect for curd rice

'பரிவை' சே.குமார் said...

ம்...
உருளைக் கிழங்கு அடிக்கடி செய்வோம்...
இந்த முறையில் செய்து பார்க்கலாம்...

'பரிவை' சே.குமார் said...

ஆஹா... உருளைக்கிழங்குன்னா நமக்கு ரொம்ப இஷ்டம்...
குட்டி உருளை கிடைப்பது சிரமம்... பெரிய உருளையில் செய்து பார்ப்போம்...

01 09 10