Thursday 1 June 2017 | By: Menaga Sathia

கத்திரிக்காய் கடையல் /Brinjal Kadaiyal | Side Dish For Idli& Dosa

தே.பொருட்கள்
சிறிய கத்திரிக்காய் -1/4 கிலோ
வெங்காயம் -1
தக்காளி -1
பச்சை மிளகாய் -3
புளி - பெரிய நெல்லிக்காயளவு
உப்பு - தேவைக்கு
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்

தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
காய்ந்த மிளகாய் -1

செய்முறை
*கத்திரிக்காயை பொடியாகவும்,வெங்காயம்+தக்காளியும் நறுக்கி வைக்கவும்.
*பாத்திரத்தில் அனைத்தும் சேர்த்து உப்பை தவிர நீர் ஊற்றி வேகவைக்கவும்.

 *வெந்ததும் சட்டி அல்லது மிக்ஸியில் வேகவைத்த நீரை வடிகட்டி கடைந்துக் கொள்ளவும்.

*கெட்டியாக இருந்தால் தேவைக்கு வேகவைத்த நீரை சேர்த்து கலக்கவும்.
*பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் உப்பு சேர்த்து கலந்து இட்லி/தோசையுடன் பரிமாறவும்.

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

Yaathoramani.blogspot.com said...

புதிய வகை ஐட்டமாக உள்ளதே
இதுவரை முயன்றதில்லை
அவசியம் செய்து ருசித்து விடுவோம்
படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை
வாழ்த்துக்களுடன்

ஸ்ரீராம். said...

பலமுறைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருமுறையாவது செய்து பார்க்க வேண்டும்.

ராஜி said...

எனக்கு பிடிச்ச சட்னி

01 09 10