Friday, 11 October 2013 | By: Menaga Sathia

பீச் ஸ்டைல் சுண்டல்/Beach Style Sundal


தே.பொருட்கள்

காய்ந்த வெள்ளை பட்டாணி - 1/2 கப்
மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன்
துருவிய கேரட் -1/8 கப்
துருவிய மாங்காய் -1/4 கப்
உப்பு -தேவைக்கு

அரைக்க
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் -1
இஞ்சித்துறுவல் - 1/2 டீஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்

செய்முறை

*பட்டாணியை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு+மஞ்சள்தூள்+மூழ்குமளவு நீர் ஊற்றி வேகவைத்து நீரை வடிக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை கொரகொரப்பாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வேகவைத்த பட்டாணியை சேர்க்கவும்.
*பின் கேரட் துறுவல்+மாங்காய்த்துறுவல்+அரைத்த தேங்காய் கலவை சேர்த்து 2-3 நிமிடங்கள் கிளறவும்.


*அனைத்தும் ஒன்றாக கலந்ததும் இறக்கவும்.


Sending to asiya akka's WTML event by Gayathri
Tuesday, 8 October 2013 | By: Menaga Sathia

கவுனி அரிசி இனிப்பு பொங்கல் /Kavuni Arisi(Black Rice) Sweet Pongal | Traditional Chettinad Spl!!

கவுனி அரிசி(Black Rice)  ப்ரவுன் அரிசியை(Brown Rice) விட அதிகளவில் Antioxidants  இருக்கு. பார்ப்பதற்க்கு கறுப்பு கலரில் இருக்கும்,சமைக்கும் போது ஊதா(Purple colour) நிறத்தில் மாறும்.சமைக்கும் போது வரும் வாசனையும் தூக்கலா இருக்கும்.

கவுனி அரிசியில் இருக்கு ஊதா(Purple) மற்றும் கருஞ்சிவப்பு(Dark Red) நிறங்கள் ப்ளுபெர்ரி,கறுப்பு திராட்சை,ராஸ்பெர்ரி,ப்ளாக்பெர்ரி,செர்ரி பழங்களை விட  அதிகளவு சத்துக்கள் நிறைந்தது.

Antthocyanin Antioxidants அதிகளவில் இருப்பதால் மாரடைப்பு,கேன்சர்,ஞாபகசக்தி,நீரிழிவு  இவற்றிற்க்கு மிகசிறந்தது.ப்ரோட்டீன்,இரும்புச்சத்து மற்றும் அதிகளவு நார்சத்து கொண்டது.

இதனை வாங்கும் போது முழுஅரிசியாகவே வாங்கி பயன்படுத்தவும்.செட்டிநாடு விருந்துகளில் இந்த இனிப்பு இல்லாமல் விருந்து நிறைவடையாது...

இது வேக அதிகநேரம் ஆகும்,அதனால் சமைக்கும் போது குறைந்தது 4-5 மணிநேரம் ஊறவைத்து சமைக்கவும்.இந்த இனிப்பினை உடனே சாப்பிடுவதை விட மறுநாள் சாப்பிட இன்னும் நன்றாக இருக்கும்.

இதில் பொங்கல் செய்வதை பார்க்கலாம்..

தே.பொருட்கள்

கவுனி அரிசி -1/2 கப்
நீர் - 2 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் -1/4 கப்

செய்முறை

*அரிசியை கழுவி குறைந்தது 4-5 மணிநேரங்கள் ஊறவைக்கவும்.


*குக்கரில் அரிசி+2 கப் நீர் சேர்த்து 15 நிமிடங்கள் வேகவிடவும்.ப்ரெஷர் அடங்கியதும் நன்றாக மசிக்கவும்.


*வேகவில்லையெனில் மேலும் நீர் சேர்த்து வேகவிடவும்.அதனுடன் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.

Sending to asiya akka's WTML event By Gayathri
Monday, 7 October 2013 | By: Menaga Sathia

வெங்காய வடக சட்னி/Vengaya Vadaga Chutney | Side dish for Idli N Dosa


தே.பொருட்கள்
நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
தாளிப்பு வடகம்  - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -4
புளி -1 ப்ளுபெர்ரி பழளவு
உப்பு -தேவைக்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

*காடாயில் எண்ணெய் விட்டு  வடகம் சேர்த்து பொரிந்ததும் மிளகாய்+வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் புளி சேர்த்து லேசாக வதக்கி ஆறியதும் உப்பு சேர்த்து  நைசாக அரைக்கவும்.

பி.கு
*விரும்பினால் தாளிக்கலாம்.வடகத்தில் உப்பு இருப்பதால் அரைக்கும் போது உப்பு சரிபார்த்தபின் சேர்க்கவும்.

Sending to asiya akka's WTML event by Gayathri
Saturday, 5 October 2013 | By: Menaga Sathia

முழு கறுப்பு உளுந்து சுண்டல்/Whole Black Urad Dal Sundal

தே.பொருட்கள்

முழு கறுப்பு உளுந்து சுண்டல் -1 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
பொடியாக நறுக்கிய இஞ்சி  -1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல்  - 1/4 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க‌

கடுகு+உளுத்தம்பருப்பு தலா - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

*உளுந்தினை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து பச்சை மிளகாய் +இஞ்சித்துறுவல் சேர்த்து வதக்கி வேகவைத்த சுண்டலை சேர்த்து வதக்கி தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.

Sending to Asiya  akka's WTML Event by Gayathri.
Friday, 4 October 2013 | By: Menaga Sathia

மல்டிக்ரெயின் சுண்டல் /Multigrain Sundal

தே.பொருட்கள்

பொடித்த ஒட்ஸ்,பார்லி மாவு - தலா 1/4 கப்
கோதுமை மாவு,ராகி,சோயா மாவு - தலா 1/4 கப்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு தலா - 1/4 டீஸ்பூன்

செய்முறை
*கொடுத்துள்ள அனைத்து மாவுகளைகளையும் ஒன்றாக உப்பு சேர்த்து கலந்து சிறிது நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசையவும்.

*அதனை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*பின் தேங்காய்த்துறுவல்+தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சுண்டலில் சேர்க்கவும்.

Monday, 23 September 2013 | By: Menaga Sathia

ஸ்டப்டு பாகற்காய/Stuffed Bitter Gourd

Recipe Source: 4thsensecooking

தே.பொருட்கள்

பெரிய பாகற்காய் -2
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
வெல்லம் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

ஸ்டப்பிங் செய்ய

துவரம்பருப்பு - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*துவரம்பருப்பை 1 மணிநேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய்+சோம்பு+உப்பு+தேங்காய்துறுவல் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

*பாகற்காயை நடுவில் கீறி விதைகளை நீக்கி கொதிக்கும் நீரில் 5 நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.

*இப்படி செய்வதால் கசப்புத்தன்மை நீங்கும்.

*மீண்டும் பாத்திரத்தில் புளிவிழுது+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள்+வெல்லம்+உப்பு+ சிறிது நீர்+ பாகற்காய் சேர்த்து வேகும் வரை வைத்து நீரை வடிகட்டவும்.

*அதனுள் அரைத்த கலவையை ஸ்டப்பிங் செய்து நூலால் கட்டவும்.இதனால் ஸ்டப்பிங் வெளியே வராது.

*இதனை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.தயிர் சாதத்திற்க்கு மிக நன்றாக இருக்கும்.

Friday, 20 September 2013 | By: Menaga Sathia

பலாக்கொட்டை பொடிமாஸ்/Jackfruit Seeds Podimas


பலாக்கொட்டையை பிடிக்காதவர்களும் இந்த பொடிமாஸை விரும்புவார்கள்...

தே.பொருட்கள்

பலாக்கொட்டை - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டுப்பல் - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க‌

எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

*இஞ்சி+பூண்டு+சோம்பு இவற்றை ஒன்றும் பாதியுமாக நசுக்கிக் கொள்ளவும்.

*பலாக்கொட்டையின் மேல் தோலை எடுத்து 2ஆகா நறுக்கி உப்பு சேர்த்து நீரில் வேகவைத்து வெந்ததும் நீரை வடிக்கவும்.


*ஆறியதும் கொரகொரப்பாக மிக்ஸியில் அரைக்கவும் அல்லது விப்பர் மோடில் ஒன்றிரண்டாக சுற்றி எடுக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாலிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து நசுக்கிய இஞ்சி பூண்டினை சேர்த்து வதக்கி வெங்காயம்+பச்சை மிளகாய்+மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் அரைத்த பலாக்கொட்டையை சேர்த்து 5நிமிடங்கள் கிளறவும்.

பின் தேங்காய்த்துறுவல் சேர்த்து இற‌க்கவும்.

01 09 10