கவுனி அரிசி(Black Rice) ப்ரவுன் அரிசியை(Brown Rice) விட
அதிகளவில் Antioxidants இருக்கு. பார்ப்பதற்க்கு கறுப்பு கலரில் இருக்கும்,சமைக்கும் போது
ஊதா(Purple colour) நிறத்தில் மாறும்.சமைக்கும் போது வரும் வாசனையும் தூக்கலா இருக்கும்.
கவுனி அரிசியில் இருக்கு ஊதா(Purple) மற்றும் கருஞ்சிவப்பு(Dark Red) நிறங்கள் ப்ளுபெர்ரி,கறுப்பு திராட்சை,ராஸ்பெர்ரி,ப்ளாக்பெர்ரி,செர்ரி பழங்களை விட அதிகளவு சத்துக்கள் நிறைந்தது.
Antthocyanin Antioxidants அதிகளவில் இருப்பதால்
மாரடைப்பு,கேன்சர்,ஞாபகசக்தி,நீரிழிவு இவற்றிற்க்கு மிகசிறந்தது.ப்ரோட்டீன்,இரும்புச்சத்து மற்றும் அதிகளவு நார்சத்து கொண்டது.
இதனை வாங்கும் போது முழுஅரிசியாகவே வாங்கி பயன்படுத்தவும்.செட்டிநாடு விருந்துகளில் இந்த இனிப்பு இல்லாமல் விருந்து நிறைவடையாது...
இது வேக அதிகநேரம் ஆகும்,அதனால் சமைக்கும் போது குறைந்தது 4-5 மணிநேரம் ஊறவைத்து சமைக்கவும்.இந்த இனிப்பினை உடனே சாப்பிடுவதை விட மறுநாள் சாப்பிட இன்னும் நன்றாக இருக்கும்.
இதில் பொங்கல் செய்வதை பார்க்கலாம்..
தே.பொருட்கள்
கவுனி அரிசி -1/2 கப்
நீர் - 2 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் -1/4 கப்
செய்முறை
*அரிசியை கழுவி குறைந்தது 4-5 மணிநேரங்கள் ஊறவைக்கவும்.
*குக்கரில் அரிசி+2 கப் நீர் சேர்த்து 15 நிமிடங்கள் வேகவிடவும்.ப்ரெஷர் அடங்கியதும் நன்றாக மசிக்கவும்.
*வேகவில்லையெனில் மேலும் நீர் சேர்த்து வேகவிடவும்.அதனுடன் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.
Sending to asiya akka's
WTML event By
Gayathri