தே.பொருட்கள்:
பீன்ஸ் - 1/4 கிலோ
வெங்காயம் - 2 சிறியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
உசிலிக்கு:
கொள்ளு -1/2 கப்
காய்ந்த மிளகாய் -3
மிளகு - 6
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் -3
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
*பீன்ஸ்+வெங்காயம் பொடியாக நறுக்கவும்.
*கொள்ளை 5 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் உப்பு+காய்ந்த மிளகாய்+மிளகு+சோம்பு+பூண்டுப்பல் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சிறிது வெங்காயம் சேர்த்து வதக்கி பீன்ஸ்+உப்பு சேர்த்து தேவையான நீர் சேர்த்து வேக விடவும்.
*மற்றொரு நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு மீதமுள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்த கொள்ளினை சேர்த்து பொலபொலவென வரும் வரை வதக்கவும்.
*பீன்ஸ் வெந்ததும் வதக்கிய கொள்ளினை சேர்த்து கிளறி இறக்கவும்.
பி.கு:
*விருப்பப்பட்டால் தேங்காய் துறுவல் சேர்க்கலாம்.
*உசிலி துவரம்பருப்பில் செய்து போரடித்துவிட்டால் கொள்ளு,காராமணி சேர்த்து செய்யலாம்.
21 பேர் ருசி பார்த்தவர்கள்:
Wow such a healthy usili Menaga..kalakuringa pa..
உசிலியா புதுப்பேரா இருக்கு
ஓட்டு போட முடியலை என்னன்னு பாருங்க மேடம்
உசிலின்னா நம்ம உசிலைமணி இல்லயா?
பீன்ஸ் பருப்பு உசிலி செய்வோம்.பீன்ஸ் கொள்ளு உசிலி செய்து காட்டி அசத்தி இருக்கின்றீர்கள்.நல்ல சத்தான சைட் டிஷ் கூட.
நன்றாக இருக்கின்றது...அருமை...
உசிலி - பெயரே இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.
நல்ல ஹெல்த்தியானதுதான்
நன்றி ப்ரியா!!
நன்றி வசந்த்!! எப்படி சரி பண்றதுன்னு தெரில வசந்த்..
//உசிலின்னா நம்ம உசிலைமணி இல்லயா?//உசிலைமணி மட்டும் இத பார்த்தார்னா உங்களை ஒரு வழி பண்ணிடுவார்.நன்றி ராஜ்!!
நன்றி ஸாதிகா அக்கா!!
நன்றி கீதா!!
நன்றாக இருக்கும் உசிலி.செய்து பாருங்கள்.நன்றி நவாஸ் ப்ரதர்!!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ப்ரியமானவள்!! உங்கள் பக்கம் வந்து படித்து கருத்து சொல்றேன் சகோதரி..
super diet recipe!!
menaga
thanks for the recipe
மேனகா பீன்ஸ் கொள்ளூ உசிலி ரொம்ப சூப்பர்,
நான் கொள்ளு இரசம், கொள்ளு மசியல் போட்டுள்ளேன் படிக்கவும். நன்றி.
நன்றி ஸ்ரீ!!
நன்றி அனிதா!!
நன்றி ஜலிலாக்கா!!
நன்றி பித்தன்!!
horse gram receipies arambamirucha
nice one MENAKAASATHIYA
வாவ் சூப்பர் மேனகா.
நன்றி தேனம்மை!!
நன்றி சுகந்தி!!
எல்லாமே கஷ்டமான அயிட்டங்களா சொல்றீங்களே???
எங்களை மாதிரி பேச்சலர்களுக்கு,பட்டுன்னு பண்ணி சட்டுன்னு சாப்பிடறமாதிரி ஏதாவது குறிப்புகள் தரக்கூடாதா?... எங்க வயிற்றை நிரப்புன புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்...
ஏற்கனவே பல குறிப்புகள் கொடுத்துள்ளேன்.அதெல்லாம் செய்வதற்க்கு ரொம்ப ஈஸியாக இருக்கும்.செய்து பாருங்கள்.
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நாஞ்சில் பிரதாப்!!
Post a Comment