Wednesday, 4 November 2009 | By: Menaga Sathia

முட்டை வேர்க்கடலை ப்ரை

நாம் சாதரணமாக வறுவல் வகைகளை எண்ணெய் விட்டு வறுப்போம்.அப்படி செய்யாமல் வேர்க்கடலையை மிக்ஸியில் மாவாக்கி அதில் செய்தால் எண்ணெய் விட்டு செய்யத் தேவையில்லை.வேர்க்கடலையில் விடும் எண்ணெயே போதும்.

என்ன இதற்க்கு கொஞ்சம் நேரமும்,பொறுமையும் வேணும்.நான் ஸ்டிக் கடாயில் செய்தால் நல்லது.முட்டையை எண்ணெய் விட்டு வறுக்கும் போது வெடிக்கும் ஆனால் வேர்க்கடலை மாவில் புரட்டி செய்தால் வெடிக்காது.கட்லட் கூட நிலக்கடலையில் பிரட்டி எண்ணெய் விடாமல் செய்யலாம்.நீங்களும் செய்து பாருங்களேன்.....


தே.பொருட்கள்:

வேக வைத்த முட்டை - 4
வேர்க்கடலை மாவு - 1/4 கப்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
நசுக்கிய பூண்டுப்பல் - 3
உப்பு - தேவைக்கு


செய்முறை :

* முட்டையை இரண்டாக கட் செய்யவும்.அதில் உப்பு+மிளகாய்த்தூள்+நசுக்கிய பூண்டு சேர்த்துக் கலக்கவும்.

*நான் ஸ்டிக் கடாயில் முட்டையை வேர்க்கடலை மாவில் புரட்டி இருபுறமும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

*இதற்க்கு கொஞ்சநேரம் ஆகும்.எண்ணெய்விடத்தேவையில்லை.வேர்க்கடலை விடும் எண்ணெயே போதுமானது.

20 பேர் ருசி பார்த்தவர்கள்:

ப்ரியமுடன் வசந்த் said...

என்னாச்சு முட்டை கருகுன மாதிரியிருக்கே மேம்...

Menaga Sathia said...

எண்ணெய் விடாமல் சிறுதீயில் செய்தால் லேசா கருகின மாதிரி ஆகும் வசந்த்.நன்றி தங்கள் கருத்துக்கு...

பிரபாகர் said...

ரொம்ப எளிமையா இருக்கு, சொன்னவிதம் மற்றும் செய்முறை. கண்டிப்பா செஞ்சு பாக்கணுங்க. தமிழ்மணத்துல சேத்து ஓட்டும் போட்டுட்டேன்.உங்களுடைய ஓட்டையும் போட்டுடுங்க...

பிரபாகர்.

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு. நான் கட்லெட்டை வேர்க்கடலையில் கண்டிப்பாய் பண்ணிப் பார்க்கின்றேன். நன்றி.

Malar Gandhi said...

Thats a new version, sure love eggs in all forms.

b/n ginger chicken curry is a very interesting recipe too.

ஸாதிகா said...

எண்ணெய் இல்லாமல் முட்டை பிரை.டிரை பண்ணி பார்க்கிறேன் மேனகா.

அன்புடன் மலிக்கா said...

சத்தான ரெசிபி,

மேனகா உங்களை பத்துக்கு பத்து தொடர் இடுகைக்கு அழைத்துள்ளேன்..
http://niroodai.blogspot.com/2009/11/blog-post_04.html..

my kitchen said...

different fry from egg,looks good

S.A. நவாஸுதீன் said...

அட, ரொம்ப சிம்ப்பிளாவும் நல்லாவும் இருக்கே

GEETHA ACHAL said...

என்னது எண்ணெய்விடாமால் முட்டை ப்ரையாக ..வித்தியசமாக இருக்கின்றது மேனகா..

கண்டிப்பாக செய்து பார்க்கின்றேன்...

Menaga Sathia said...

மிகவும் நன்றி சகோதரரே தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்.

தமிழ்மணத்தில் இணைத்து ஒட்டு போட்டதற்க்கும் மனமார்ந்த நன்றிகள்!!

Menaga Sathia said...

கட்லட்டில் செய்து பாருங்கள்.நன்றாகயிருக்கும் நன்றி பித்தன்!!

Menaga Sathia said...

நன்றி மலர் தங்கள் கருத்துக்கு!!

நிச்சயம் செய்து பாருங்கள்.நன்றி ஸாதிகாக்கா!!

Menaga Sathia said...

நன்றி மலிக்கா!!தங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டேன்.விரைவில் தொடர்கிறேன்.

Menaga Sathia said...

நன்றி செல்வி!!

நன்றி நவாஸ் ப்ரதர்!!

Menaga Sathia said...

ஆமாம் கீதா ரொம்ப நல்லாயிருந்தது.எண்ணெய்விட்டு செய்த மாதிரியே இருந்தது.செய்து பாருங்கள்.நன்றி கீதா!!

Unknown said...

வாசிக்க நல்லா இருக்கு..
நாளைக்கு சமைச்சுப் பார்த்து சொல்கிறேன்..
நன்றி..

லவ்சுகி

Priya Suresh said...

Wow Menaga, intha egg fry romba puthusavum puthumaiyum irruku...arumai!

Menaga Sathia said...

செய்து பார்த்து சொல்லுங்கள் சுகி.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

01 09 10