தே.பொருட்கள்:
கத்திரிக்காய் - 1 பெரியது
புளி - 1 எலுமிச்சை பழளவு
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லித்தழை - சிறிது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
கெட்டி தேங்காய்பால் - 1/2 கப்
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
*கத்திரிக்காய்+தக்காளி பொடியாக அரிந்து வேகவைத்து மசிக்கவும்.
*புளியை கெட்டியாக கரைக்கவும்.வெங்காயம்+பச்சை மிளகாய் பொடியாக அரைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+பச்சைமிளகாயை வதக்கவும்.
*பின் மசித்த கத்திரிக்காய்+உப்பு+மஞ்சள்தூள்+கெட்டியான புளிகரைசல்+தேங்காய்ப்பால் அனைத்தும் சேர்த்து கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
*இட்லி,தோசை,சாதம்,சப்பாத்தி அனைத்துக்கும் நன்றாகயிருக்கும்.
பி.கு:
விதையில்லாத பெரிய கத்திரிக்காயில் செய்தால் இந்த சட்னி நன்றாகயிருக்கும்.
கத்திரிக்காய் - 1 பெரியது
புளி - 1 எலுமிச்சை பழளவு
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லித்தழை - சிறிது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
கெட்டி தேங்காய்பால் - 1/2 கப்
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
*கத்திரிக்காய்+தக்காளி பொடியாக அரிந்து வேகவைத்து மசிக்கவும்.
*புளியை கெட்டியாக கரைக்கவும்.வெங்காயம்+பச்சை மிளகாய் பொடியாக அரைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+பச்சைமிளகாயை வதக்கவும்.
*பின் மசித்த கத்திரிக்காய்+உப்பு+மஞ்சள்தூள்+கெட்டியான புளிகரைசல்+தேங்காய்ப்பால் அனைத்தும் சேர்த்து கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
*இட்லி,தோசை,சாதம்,சப்பாத்தி அனைத்துக்கும் நன்றாகயிருக்கும்.
பி.கு:
விதையில்லாத பெரிய கத்திரிக்காயில் செய்தால் இந்த சட்னி நன்றாகயிருக்கும்.
20 பேர் ருசி பார்த்தவர்கள்:
NICE ONE..I TOO POSTED BRINJAL CHUTNEY LAST WEEK
kaaramaa irukkuma? super Menaga!
நன்றி. நாளைக்கு வீட்டில் சமைத்து பார்க்கணும் அப்படின்னு அண்ணி சொல்லச் சொன்னாங்க.
எப்படி இருக்குன்னு சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுகின்றேன்.
இதனையும் அம்மாவிடம் செய்யச் சொன்னால் போச்சுது.
Wow superb chutney, naan thenga paal ellam serthu chutney pannathu illa..sure will try soon..
நல்லா இருக்கு மேனகா..எங்க வீட்லே இதை கத்திரிகாய் கடைசல்ன்னு சொல்லுவோம்.
புதுமையாகவும் அருமையாகவும் உள்ளது கண்டிப்பாய் எங்கள் வீட்டில் செய்து பார்க்கின்றேம். நன்றி.
நன்றி ஷாமா!!
நன்றி சுஸ்ரீ!!காரமா இருக்காதுப்பா.வேண்டுமானால் மிளகாயை அதிகமா போட்டுக்கலாம் அல்லது குறைத்துக்கலாம்.
சாப்பிட்டு சொல்லுங்கள் அண்ணா.அண்ணி எப்படி செய்தாங்கன்னு சொல்லுங்க.தங்கள் கருத்துக்கு நன்றி!!
அம்மாகிட்ட சொல்லி செய்து தரசொல்லுங்கள்.நன்றி சந்ரு!!
தே.பால் சேர்த்து செய்தால் இன்னும் நல்லாயிருக்கும்.நன்றி ப்ரியா!!
நீங்களும் இதே மாதிரி தான் செய்வீங்களா?எங்க வீட்லயும் கடைசல்ன்னு தான் சொல்வோம்.எங்கம்மா தே.பால் சேர்க்கமாட்டாங்க.மாமியார் வீட்ல தே.பால் சேர்த்து தான் செய்வாங்க.இது மாமியார் குறிப்பு.நன்றி ஹர்ஷினி அம்மா!!
செய்து பாருங்கள் பித்தன்.நன்றி!!
Nice one almost i do the same but adding coconut milk is different and hope tastes rich with different flavour will try it out for sure.
நாங்களும் இதை கடைசல்னு சொல்லுவோம். பொருள்கள் சிறிது வேறாக இருக்கும்.
சகோதரி, ஒரு சின்ன சந்தேகம். சமையல் விஷயத்துல உங்களுக்கு தெரியாத ஒன்னுன்னு ஏதாவது இருக்கா?
சட்னி - நல்ல ருசி
தே.பால் சேர்த்தால் இன்னும் சுவை தரும்.நன்றி பவித்ரா!!
நன்றி சுகந்தி!!
தங்கள் வருகைக்கும்,கருத்தும் நன்றி சங்கர்!!உண்மை சம்பவங்கள் பத்தி தொடர்கதையா?சீக்கிரம் எழுதுங்கள்...நன்றி!!
//சகோதரி, ஒரு சின்ன சந்தேகம். சமையல் விஷயத்துல உங்களுக்கு தெரியாத ஒன்னுன்னு ஏதாவது இருக்கா?// நமக்கு தெரியாத வகைகள் இன்னும் நிறைய இருக்கு சகோதரரே.இதெல்லாம் சாதாரண மேட்டர்.கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு!!
தொடர்ந்து பின்னுட்டமளித்து என்னை உற்சாகமூட்டும் சகோதரற்க்கு என் மனமார்ந்த நன்றி!!
I will do in same way expect adding coconut milk.good one
Post a Comment