Tuesday 10 November 2009 | By: Menaga Sathia

தக்காளி குருமா/Tomato Kurma


தே.பொருட்கள்:

வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிது
தனியாத்தூள் - 1டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு

அரைக்க:

தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு -2
கசகசா -1/2 டீஸ்பூன்

செய்முறை :

*ஒரு தக்காளியை வெந்நீரில் போட்டு தோலெடுத்து அரைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை மைய அரைக்கவும்.வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய் பொடியாக அரியவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+அரைத்த தக்காளி விழுது+பச்சை மிளகாய்+தனியாத்தூள்+மஞ்சள்தூள் அனித்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் தேவையான நீர்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*கொதித்ததும் தேங்காய்விழுது சேர்த்து 5 நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*இட்லி,தோசை,சப்பாத்தி அனைத்துக்கும் இந்த குருமா நன்றாக இருக்கும்.

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

M.S.R. கோபிநாத் said...

சூப்பர் மேனகா.

thiyaa said...

நான் என் மனைவிக்கு இந்த பதிவை காட்டலை காரணம் புரியுதா?

my kitchen said...

அருமையாக உள்ளது

Admin said...

எனக்கு தக்காளி ரொம்பவே பிடிக்கும்
இப்படி செய்து சாப்பிட்டால் இன்னும் சுவை அதிகமாக இருக்குமென்று நினைக்கின்றேன்

suvaiyaana suvai said...

super Menaga!! enga viddilum inRu intha kurmaa thaan!! same pinch

Priya Suresh said...

My favourite kurma, intha kurma samacha extra rendu idli ulla pogum yennaku:)..just love this kurma..

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க. இதுல வடைப் பருப்பு உருண்டை பண்ணிப் போட்டா இன்னமும் சூப்பரா இருக்கும். இப்ப நான் சாப்பிடும் ஓட்டலில் ஞாயிறன்று செய்வார்கள். குருமாவில் ஊறிய வடை அருமையாக இருக்கும். நன்றி.

மேனகா உங்கள் பதிவில் படங்கள் அருமை. பார்த்தாலே பரவசமும் வயிற்றில் அமிலமும் சுரக்கின்றது. படம் யாரு ரங்கமணி சார் உபயமா?. அவருக்கும் நன்றி.

S.A. நவாஸுதீன் said...

தக்காளி குருமா - நீங்க சொன்னமாதிரி இட்லி தோசை சப்பாத்திக்கு ரொம்ப டேஸ்ட்டாத்தான் இருக்கும்.

Menaga Sathia said...

நன்றி கோபிநாத்!!

Menaga Sathia said...

//நான் என் மனைவிக்கு இந்த பதிவை காட்டலை காரணம் புரியுதா?//ஏங்க என்ன காரணம்னு புரியலை.ஒருவேளை இந்த குறிப்பை உங்களை செய்ய சொல்வாங்கன்னு காட்டலையா?நன்றி தியா!!

Menaga Sathia said...

நன்றி செல்வி!!

நிசயம் ரொம்ப நல்லாயிருக்கும் புளிப்பு சுவையுடன்.நன்றி சந்ரு!!

Menaga Sathia said...

நீங்களும் இதே மாதிரி தான் செய்வீங்களா?நன்றி சுஸ்ரீ!!


ஆமாம் ப்ரியா நீங்கள் சொல்வது உண்மைதான் இன்னும் 2 இட்லி சாப்பிடத் தோனும்.நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

ஆமாம் பித்தன் இதுல வடை பருப்பு போட்டா இன்னும் சூப்பராயிருக்கும்.பருப்பு உருண்டைக்குழம்புன்னு சொல்வோம்.ஏற்கனவே அந்த குறிப்பும் கொடுத்துள்ளேன்.

//மேனகா உங்கள் பதிவில் படங்கள் அருமை. பார்த்தாலே பரவசமும் வயிற்றில் அமிலமும் சுரக்கின்றது. படம் யாரு ரங்கமணி சார் உபயமா?. அவருக்கும் நன்றி.// அடடா நன்றி அவருக்கு போகுதா.கஷ்டப்பட்டு சமையல் செய்து அதை நானே போட்டோவும் எடுத்து போட்டால் எவ்வளவு ஈஸியா ரங்கமணிக்கு சொல்லிட்டீங்க.பரவாயில்லை அவருக்கு சொன்னால் எனக்கு சொன்ன மாதிரின்னு நினைச்சுக்குறேன் ப்ரதர்.நன்றி பித்தன்!!

Menaga Sathia said...

ஆமாம் சகோ இந்த குருமா இருந்தால் இன்னும் அதிகமா சாப்பிடலாம்.நன்றி ப்ரதர்!!

நித்தி said...

Nice one...my favorite one thanks v prepare the same way as u teached thanks for sharing....Mrs.menaga...

GEETHA ACHAL said...

சூப்பராக் இருக்கின்றது குருமா..

எங்க பாட்டி வீட்டில் செய்வாங்க...சூப்பராக இருக்கும்..அது என்னமே எங்க பாட்டி செய்தால் தான் அது சுவையாக இருப்பது போல தெரிகின்றது.. அம்மாவும் அதே மாதிரி தான் செய்வாங்க ..ஆனால் அந்த டேஸ்ட் வருவதில்லை..

நானும் பல முறை எங்க பாட்டி செய்முறையில் தக்காளி குருமா செய்தால் எங்க பாட்டி செய்வது போல வருவதில்லை...

உங்கள் செய்முறையும் செய்து பார்க்கிறேன். நன்றி.

ஸாதிகா said...

ஃபிரிட்ஜ்ஜில் காய் இல்லாவிட்டால்,இன்னிக்கு சப்பாத்திக்கு என்ன சைட் டிஷ் என்று குழம்பிக்கொண்டு இருக்கும் போது இனிமேல் சட்டென்று உங்கள் தக்காளிகுருமா நினைவுக்கு வந்து விடும்.

Menaga Sathia said...

நன்றி நித்தியானந்தம்!!

செய்து பாருங்கப்பா.ஆனா உங்க பாட்டி செய்றமாதிரி சுவையா இருக்குமான்னு தெரியல.எங்கம்மா இப்படிதான் செய்வாங்க.எனக்கு இந்த குருமா புளிப்பு சுவையுடன் ரொம்ப பிடிக்கும்.நன்றி கீதா!!

Menaga Sathia said...

அப்போ காய்கறி இல்லன்னா நான் உங்க நினைவுக்கு வந்துடுவேன் இல்லையா அக்கா.நன்றி ஸாதிகா அக்கா!!

Thenammai Lakshmanan said...

tomato kuruma and parley kesari superb MENAKASATHIYA

Malini's Signature said...

சூப்பர் குருமா. என் அண்ணியோட அம்மா இதுலே கொஞ்சம் பட்டாணியும் சேர்ப்பாங்கபா நல்லா இருக்கும்.

சாருஸ்ரீராஜ் said...

இன்று எங்க வீட்ல இந்த குருமா தான் என் பசங்க விரும்பி சாப்பிடுவாங்க,ஆனால் நான் இஞ்சி பூண்டு சேர்க்க மாட்டேன் அடுத்த முறை செய்து பார்கிறேன்

Menaga Sathia said...

நன்றி தேனம்மை!!

அடுத்தமுறை செய்யும்போது நீங்க சொல்றமாதிரி பட்டாணி சேர்த்து செய்து பார்க்கிறேன்.நன்றி ஹர்ஷினி அம்மா!!

Menaga Sathia said...

இஞ்சி பூண்டு சேர்த்தால் நல்ல வாசனையா இருக்கும்.அடுத்த முறை செய்து பாருங்கள்.நன்றி சாரு!!

01 09 10