தே.பொருட்கள்:
கனிந்த வாழைப்பழம் - 1
ஏலக்காய்ப் பொடி - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம் - 1/4 கப்
ரவை - 2டேபிள்ஸ்பூன்
கோதுமைமாவு - 1/2 கப்
உப்பு -1 சிட்டிகை
எண்ணெய் -பொரிக்க
செய்முறை :
*வெல்லத்தை சிறிது நீர்விட்டு கரைத்து மண்ணில்லாமல் வடிக்கட்டவும்.
*ஒரு பாத்திரத்தில் வாழப்பழத்தைப் போட்டு மசிக்கவும்.
*அதனுடன் தேங்காய்த்துறுவல்+ஏலக்காய்ப் பொடி+ரவை+உப்பு+கோதுமைமாவு+வெல்லம் கரைத்த நீர் சேர்த்து இட்லிமாவு பதத்திற்க்கு கரைக்கவும்.
*கடாயில் எண்ணெய் காயவிட்டு மாவை ஒரு ஸ்பூனால் எடுத்து ஊற்றவும்.
*ஒரு அப்பம் மேலே எழும்பி வந்ததும் இன்னொன்று ஊற்றவும்.
*இப்படியாக மாவை அப்பங்களாக ஊற்றி எடுக்கவும்.
கவனிக்க:
மாவு ரொம்ப கெட்டியாக இல்லாமலும்,தண்ணியாக இல்லாமலும் இருக்கனும்.இந்த அப்பம் மிகவும் மென்மையானதாக இருக்கும்.
35 பேர் ருசி பார்த்தவர்கள்:
very different recipe!!
வாழைப்பழ அப்பம் இங்க வரைக்கும் மனக்குது.
எந்த வாழைப்பழம் உபயோகப் படுத்தப் படவேண்டும் என்று சொல்லவில்லையே?
Romba pidicha appam, adikadi seiven naanum..
புதுசா இருக்கே!!
சகோதரி...
எனக்கு மிகவும் பிடித்த பலகாரங்களில் இதுவும் ஒன்று... ஆனால் கோதுமை மாவுக்கு பதிலாக மைதாவினை போட்டு அம்மா செய்வார்கள். கோதுமை மாவுடன் செய்தால் இன்னும் அருமையாய் இருக்கும் என எண்ணுகிறேன். செய்து பார்க்கிறேன்(றோம்)...
பிரபாகர்.
வாழைப் பழ அப்பம் பிரமாதம் மேனகா
அதைவிட வாழைப்பூ கீரை துவட்டல் தான் ரொம்ப அருமை
ரொம்ப சூப்பர் மேனகா, இது நான் மாதம் ஒரு முறை காலை டிபனுக்கு செய்வது போன வாரம் கூட செய்தேன்.
நான் சிறிது அரிசிமாவும் சேர்த்து கொள்வேன், கலவையை தோசைபோல் சுட்டு பாருங்கள் இன்னும் சூப்பராக இருக்கும்.
நான் இதையாச்சும் செய்யனும்!!! ரொம்ப எளிமையா சொல்லி குடுக்க்றீங்க
வித விதமா வித்தியாசமா சொல்லிகிட்டே இருக்கீங்க.
இம்ம் அப்பம் நல்லா இருக்குங்க. ஆனா பாருங்க எங்க வீட்டுல கார்த்திகை, எல்லாப் பண்டிகைக்கும், சிரார்தத்திற்க்கும் இந்த அப்பதை பண்ணிப் பண்ணி பார்த்தாலே ஓட அளவுக்கு வெறுத்துப் போக வைத்து விட்டார்கள். ஆனா பழ அப்பம் கொஞ்சம் புளிப்புச் சுவையுடன் நல்லா இருக்கும். நன்றி.
super dish
நல்ல சுவையாக இருக்கும் போல் இருக்கிறது
மேனகா. வாழப்பழ அப்பம் சூப்பார இருக்கும்போல நானும் டிரைப்பண்ணுரேன்..
ரொம்ப லேட்டாகுதுபா பிளாக் ஓப்பனாக..
நன்றி சுஸ்ரீ!!
//வாழைப்பழ அப்பம் இங்க வரைக்கும் மனக்குது.//உண்மையாவா சொல்றீங்க.நன்றி கோபி ப்ரதர்!!
//எந்த வாழைப்பழம் உபயோகப் படுத்தப் படவேண்டும் என்று சொல்லவில்லையே?// மஞ்சள் வாழைப்பழம் தான் உபயோகபடித்தியிருக்கேன்.நன்றி அண்ணா!!
இதை நான் விரதநாளில் செய்வேன்.நன்றி ப்ரியா!!
//புதுசா இருக்கே!!//சூப்பரகவும் இருக்கும்.நன்றி ஜெட்லி!!
மைதாவை விட கோதுமையில் ரொம்ப நல்லாயிருக்கும்.நல்லதும் கூட.செய்து பாருங்கள் வித்தியாசம் தெரியும்.நன்றி சகோதரரே!!
//வாழைப் பழ அப்பம் பிரமாதம் மேனகா
அதைவிட வாழைப்பூ கீரை துவட்டல் தான் ரொம்ப அருமை// நன்றி அக்கா!!
//நான் சிறிது அரிசிமாவும் சேர்த்து கொள்வேன், கலவையை தோசைபோல் சுட்டு பாருங்கள் இன்னும் சூப்பராக இருக்கும்.// அரிசி மாவு சேர்த்து அடுத்தமுறை செய்து பார்க்கிறேன் அக்கா.
தோசைபோல் ஊற்றுவதும் நல்ல ஐடியா,எண்ணெயும் செலவாகாது.நன்றி ஜலிலாக்கா!!
நன்றி நாஸியா!!ரொம்ப ஈஸிதான்.செய்து பாருங்கள்.
நன்றி நவாஸ் அண்ணா!!
//ஆனா பழ அப்பம் கொஞ்சம் புளிப்புச் சுவையுடன் நல்லா இருக்கும்//நானும் இதை விரதநாளில் தான் செய்வேன்.பழம் சேர்ப்பதால் சுவை நல்லாயிருக்கும்.நன்றி சுதாகர் அண்ணா!!
நன்றி ஸ்ரீ கிருஷ்ணா தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்...
//நல்ல சுவையாக இருக்கும் போல் இருக்கிறது//ஆமாம் ரொம்ப நல்லாயிருக்கும்.நன்றி சந்ரு!!
செய்து பாருங்கள்.நன்றி மலிக்கா!!
//ரொம்ப லேட்டாகுதுபா பிளாக் ஓப்பனாக..//பொதுவாகவே ப்ளாக் ஒப்பனாக லேட்டாகுதா அல்லது என் ப்ளாக் ஒப்பன் ஆக லேட்டாகுதாப்பா?
சூப்பராக இருக்கின்றது...
மேனகா வாழைப்பழ அப்பம் சூப்பரா இருக்கும்...இந்த இனிப்பையெல்லாம் நியாபகபடுத்தியதர்கு ரொம்ப நன்றிங்க...நியாபகம் வந்து என்ன பயன் செய்ய தெரிலையே என முழிக்க வைக்காமல் கூடவே செய்யும் முரையையும் கொடுத்துட்டீங்க ரொம்ப நன்றி.செய்து பாக்கவேண்டியதுதான்..இன்று.
ரவைக்கு பதிலாக நாங்கள் மைதா சேர்ப்போம்.மிகவும் சுவையாக இருக்கும்.நீங்கள் குறிப்பிட்டதுபோல் ரவை சேர்த்தால் மொறுமொறுப்பாக வரும்.நல்ல ரெஸிப்பிமேனகா
நன்றி கீதா!!
செய்து பார்த்தீங்களா கினோ,மிக்க நன்றிப்பா!!
ரவி சேர்த்தால் மொருகலாக தான் இருக்கும்.நன்றி ஸாதிகா அக்கா!!
எனக்கு பிடித்த ஒன்று.அம்மா செய்வார்கள்.பிரமாதம் மேனகா
நன்றி செல்வி!!
வெள்ளி கிழமை இந்த அப்பம் செய்தேன் மேனகா நல்லா இருந்தது... நான் எப்போதும் ரவை , தேங்காய் சேர்த்தது இல்லை...வித்தியாசமா நல்லா இருந்துச்சு... ஸ்ட்ப்பை ஸ்ட்ப் போட்டோ எடுத்து இருக்கேன் சீக்கிரமா(ஒரு மாதத்தில்) போடரேன்... நன்றி மேனகா :-)
நன்றாக வ்ந்ததில் ரொம்ப சந்தோஷம்ப்பா.ரவை சேர்த்தால் க்ரிஸ்பியா இருக்கும்.
ஸ்டெப் பை ஸ்டெப் படம் எடுத்திருக்கிங்க.சந்தோஷமா இருக்கு.சீக்கிரம் போடுங்க.குறிப்புக்காக வெயிட்டிங்.
செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மிக்க நன்றி ஹர்ஷினி அம்மா!!
நானும் உங்க கொத்து பரோட்டா செய்து போட்டோ எடுத்துள்ளேன்.ஆனா ஸ்டெப் பை ஸ்டெப் எடுக்கல.
Post a Comment