Tuesday 5 January 2010 | By: Menaga Sathia

வாழைத்தண்டு கூட்டு

தே.பொருட்கள்:

வாழைத்தண்டு - 1 சிறியது
பாசிப்பருப்பு - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது
கீறிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*வாழைத்தண்டை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு சுத்தம் செய்து வைக்கவும்.

*குக்கரில் பாசிப்பருப்பு+மஞ்சள்தூள் போட்டு வேகவைக்கவும்.

*வெந்ததும் வாழைத்தண்டு+உப்பு சேர்த்து 1 விசில் வைத்து வேக வைக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெந்த கூட்டில் சேர்க்கவும்.

11 பேர் ருசி பார்த்தவர்கள்:

Henry J said...
This comment has been removed by the author.
அண்ணாமலையான் said...

உடலுக்கு ஆரோக்யமான ஒன்று..
உங்கள் குறிப்புகள் நன்று...

நட்புடன் ஜமால் said...

நல்ல மருத்துவ குணமுடையது

இந்த விதித்தில் நல்லா உள்ளே போகும்.


நன்றிங்கோ...

பித்தனின் வாக்கு said...

சிறுனீரக கல் கரைக்கும் வாழைத்தண்டில், பொறியல் செய்வார்கள். ஆனால் உங்கள் கூட்டு வித்தியாசமாகவும்,பிரமாதமாகவும் உள்ளது. நாங்களும் முயற்ச்சி செய்கின்றேன். நன்றி மேனகா சத்தியா. நான் வெள்ளியங்கிரி தொடரின் நிறைவுப் பகுதியாக இன்று பல அரிய புகைப்படங்களுடன் ஒரு பதிவு இட்டுள்ளேன். பார்க்கவும் நன்றி.

S.A. நவாஸுதீன் said...

வாழைத்தண்டு கல்லடைப்புக்கு நல்லது. மருந்துக்கு மருந்தும் ஆச்சு, நல்ல டேஸ்ட்டான கூட்டும்.

SUFFIX said...

வாழைத்தண்டு வயிற்றுக்கு நல்லதுன்னு சொல்வாங்க. ஏதாவது புளிக்குழம்பு வச்சு, சாதத்துடன் இந்த கூட்டையும் வச்சா.....அம்மாடியோவ்!!

சிங்கக்குட்டி said...

பதிவு அருமை.

ஆனால் இது மேனகாவா அல்லது ஜலீலாவா?

Shama Nagarajan said...

nice yummy kootu

Henry J said...

very nice.


தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

Priya Suresh said...

Healthy and nutritious kootu..

Angel said...

மேனகா ..இன்னிக்கு எனக்கு வாழைத்தண்டு கடையில் கிடைச்சுது

வெளிநாட்டு வாழ்க்கைல முதன்முறையா பார்த்தேன் ...எப்படி சமைப்பதின்னு யோசிச்சிட்டே உங்க பக்கம் வந்தேன் ..ரெசிப்பி பார்த்து அப்படியே சமைதேன் ..சூப்பர் அருமையோ அருமை டேஸ்ட் ...பதிவு பிறகுதான் போடுவேன் .

01 09 10