தே.பொருட்கள்:
வேகவைத்த முட்டை - 4
முட்டை - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1 டீஸ்பூன்
புட்கலர் - 1 சிட்டிகை
மிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன்
ப்ரெட் க்ரம்ஸ் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை :
*வேக வைத்த முட்டையை 2 கட் செய்து அதில் உப்பு+கலர்+மிளகாய்த்தூள்+தயிர்+இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் கலந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
*முட்டையை உடைத்து நன்கு அடித்து வைக்கவும்.
*மசாலா தடவிய முட்டைகளை ஒவ்வொன்றாக அடித்த முட்டையில் தோய்து ப்ரெட் க்ரம்ப்ஸில் புரட்டி ப்ரிட்ஜில் 1/2 மணிநேரம் வைக்கவும்.
*பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
38 பேர் ருசி பார்த்தவர்கள்:
அருமை.
முட்டையையே முட்டையில் பிரட்டணுமா.. ஹி.. ஹி.. சும்மா..
முட்டை பஜ்ஜி செய்வதுண்டு; இது புதுசு; செஞ்சு பாக்கணும்.
muttai 65 .. naan kelvi paatathe illa ... romba arputhama vandhirukku ..
Pramaathamana thinpandam! Romba Puthusu!
நன்றி மன்னார்குடி!!
//முட்டையையே முட்டையில் பிரட்டணுமா.. ஹி.. ஹி.. சும்மா..// வேறு வழியில்லை பிரட்டிதான் ஆகனும்.ஹி..ஹி..அப்படி இல்லைன்னா மைதா கரைசலிலும் புரட்டலாம்.நன்றி ஹூசைனம்மா!!
நன்றி பவித்ரா!!சிக்கன் 65 செய்கிறோமே முட்டையில் செய்தால் என்ன என்று செய்து பார்த்தேன்.நினைத்ததை விட ரொம்ப நல்லா வந்தது.
ஆசியாக்கா உங்க கமெண்ட் மாடரேட் செய்ய முடியலை.எரர் வருது.அதனால் காப்பி செய்து போடுகிறேன்
//புதுசாக இருக்கு மேனு.கோட்டிங் எண்ணெய் குடிக்குமா?மைதாவும் கலக்கலாம் தானே.நல்ல முயற்சி//
எண்ணெய் அதிகம் குடிக்காது.மைதாவும் கலக்கலாம்.நன்றி ஆசியாக்கா!!
சிக்கன் 65 சாப்பிடதுண்டு, ஹூஸைனம்மா சொன்னது போல் முட்டை பஜ்ஜி சாப்பிடதுண்டு, இது ரொம்ப புதுமையா இருக்கே
நாளைக்கே செய்து தாறேன்னு சொல்லிக்கிறாங்க தங்ஸ் பார்ப்போம் ...
நன்றி. நல்ல சுவையான முட்டை .
ரொம்ப வித்தியாசமாய் இருக்கு மேனு இந்த குறிப்பு.
பார்க்கலாம் முதலில் கொஞ்சமாய் செய்து பார்க்கனும்.
இந்த ஐட்டம் புதுசா இருக்கே..! ட்ரை பண்ணி பாக்குறேன்..!
-
DREAMER
நன்கு அடித்த முட்டையில், அவித்த முட்டையை பிரட்டி அடித்து வறுத்து, முட்ட முட்ட சாப்பிட வேண்டியதுதான்..... :-)
உண்மையில், சில திராவை பதிவுகளை படித்து எரிச்சலாகி, சற்று பசி எடுக்கும் போதுதான் உங்களின் பக்கம் நினைவு வரும். ஆஹா ..என்று வாயில் நீர் ஊற வந்தால் நிச்சயம் ஏதாவது இருக்கும். பின்னர் என்ன ? வழக்கம் போல Tissue paper தான்.
நன்றி சகோ,நாளைக்கு செய்து பார்த்து சொல்லுங்கள் எப்படியிருந்ததுன்னு...
நன்றி சரவணன்!!
செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி கீதா!!
நன்றி டீரீம்மர்!!
உங்க கமெண்ட் படித்து சிரித்துவிட்டேன்.நன்றி சித்ரா!!
நன்றி சகோ!!செய்து பாருங்கள்,ரொம்ப ஈஸிதான்...
நன்றி கூல் லஸ்ஸி!!
very new very creative,.
மூணு இங்க இருக்கு, மீதி 62 எங்க?....:))
போங்க மேனகா, வர வர நீங்க ரொம்ப பொய் சொல்றீங்க. நான் சின்னப்பையன் பொய் சொன்னாத் தெரியாது நினைச்சிங்களா?. நான் ரொம்ப புத்திசாலி. கரீட்டா பட்ச்சிப் பார்த்தேன். ஜந்து முட்டைதான் இருக்கு. மீதி 60 எங்க?.
இப்படி பண்ணீனா என்னை மாதிரி ஆளுக எல்லாம் எப்படி நம்புறது. ஹா ஹா ஹா
ஏங்க பேச்சு பேச்சாதான் இருக்கனும், அதுக்காக இப்படி கை எல்லாம் தூக்கக்கூடாது.
பித்தா விடு ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்
// உண்மையில், சில திராவை பதிவுகளை படித்து எரிச்சலாகி, சற்று பசி எடுக்கும் போதுதான் உங்களின் பக்கம் நினைவு வரும். //
தம்பி மாணிக்கம் இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன், நீ எழுதி அதை நீயே படிக்காதேன்னு. இப்ப பாரு புலம்பற அளவுக்கு ஆயிடுச்சு.
ஹா ஹா ஹா....
// நன்கு அடித்த முட்டையில், அவித்த முட்டையை பிரட்டி அடித்து வறுத்து, முட்ட முட்ட சாப்பிட வேண்டியதுதான்..... :-) //
சித்ரா முட்டயை முட்ட முட்ட சாப்பிட்டால் காஸ்டிக் டிரபிள்தான் வரும், எங்கனயாது புடிச்சுக்கிச்சுன்னா, அப்புறம் சாலமன் அண்ணாவிடம் சொல்லி உங்களை மொத்து மொத்துன்னு மொத்தனும், பரவாயில்லையா?
அட..வித்தியாசமாக இருக்கே!(ஏற்கனவே பின்னூட்டம் போட்டேன்.ஏன் பப்லிஷ் கொடுக்கவில்லை??)
ரெண்டு நாள் அக்கா பக்கம் வரல அதுக்குள்ள அக்கா இதுபோல எத்தனை அயிட்டம் போட்டுடாங்கன்னே தெரியலையே. அக்கா முட்டை65 பார்பதற்க்கே அருமையாக இருக்கிறது. பிரிண்ட் அவுட் எடுத்தாச்சு. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
முட்டை சமையல் அருமை
வாழ்க வளமுடன் தகவலுக்கு நன்றி
இது ரொம்ப புதுமையா இருக்கே.
நன்றி Trendsetters!!
//மூணு இங்க இருக்கு, மீதி 62 எங்க?....:))// ஏதோ முட்டை 65ன்னு பெயர் வைத்தால் இப்படி கலாய்க்கிறீங்களே...நன்றி சகோ!!
//போங்க மேனகா, வர வர நீங்க ரொம்ப பொய் சொல்றீங்க. நான் சின்னப்பையன் பொய் சொன்னாத் தெரியாது நினைச்சிங்களா?. நான் ரொம்ப புத்திசாலி. கரீட்டா பட்ச்சிப் பார்த்தேன். ஜந்து முட்டைதான் இருக்கு. மீதி 60 எங்க?. // ஹி..ஹி.. நீங்க எவ்வளோ சின்ன பிள்ளைன்னு இப்பதான் புரியுது...மீதி 60 முட்டை இனிதான் வாங்கனும்..
நன்றி சகோ!!
//அட..வித்தியாசமாக இருக்கே!(ஏற்கனவே பின்னூட்டம் போட்டேன்.ஏன் பப்லிஷ் கொடுக்கவில்லை??)// இப்போழுது கொடுத்த பின்னூட்டம்தான் பப்ளீஷ் செய்துள்ளேன்.ஏற்கனவே நீங்க கொடுத்த பிண்ணுட்டம் வரலையே வந்திருந்தால் பப்ளீஷ் செய்திருப்பேனே...நன்றி ஸாதிகா அக்கா!!
2நாள்தானே,பொறுமையா பாருங்க..நன்றி சசி!!
நன்றி கார்த்திக்!!
நன்றி குமார்!!
delicious egg recipe
முட்டை 65 சூப்பர்...........கிட்டதட்ட முட்டை பஜ்ஜி போன்றே இருக்கின்றது......என்னவோ போங்க என்னோட பிரண்டுகூட உட்கார்ந்துகிட்டு இன்னைக்கு உங்க தளத்துக்கு வந்து இந்த கருத்துரையையும் போடரேன்.......பாவம் அவரு முகம் வாடி போச்சி!!! இந்த டிஷ் ஐ பற்றி வர்னித்ததும். அவரு பிராமணர்....சுத்த சைவமாம்...
அதுசரி கழுதைக்கு தெரியுமா கருவாட்டு வாசனை......
Egg 65 summa athiradiya irruku Menaga..asathuringa ponga..
நன்றி ஷாமா!!
//அதுசரி கழுதைக்கு தெரியுமா கருவாட்டு வாசனை......// பின்னூட்டம் போடும் போது நண்பர் இந்த வார்த்தையை கவனித்தாரா...ஹி...ஹி..நன்றி சகோ!!
நன்றி ப்ரியா!!
ஆஹா.. சூப்பர்! சிக்கன் 65 செய்ததிற்கே வீட்டில் ஓர புகழாரம். இப்பொழுது முட்டை 65 செஞ்சு பாக்க வேண்டியதுதான்.
உங்கள் ப்ளோக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தலத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
முட்டை 65 செய்து தூள் கிளப்புங்க.நன்றி புனிதா!!
Hi Punitha,
I am new to cooking... i dont know how to mix the eggs in the bread crumbs... Can you pls let me know? Do we need to break the bread into pieces or soak in water? what does bread crumbs mean? Suganya.
சுகன்யா,ப்ரெட் க்ரம்ஸ் கடையில் கிடைக்கும் அல்லது ப்ரெட்டை பெரெட் டேஸ்ட்டில் கருகாமல் டோஸ்ட் செய்து ஆறியதும் மிக்ஸியில் போட்டும் பொடித்துக் கொள்ளலாம்....
Post a Comment