தே.பொருட்கள்:
பாஸ்மதி - 2 கப்
ஸ்வீட் கார்ன்,பச்சை பட்டாணி - தலா 1/4 கப்
காய்ந்த வெந்தயக் கீரை - 1/4 கப்
நீளமாக அரிந்த வெங்காயம் - 1பெரியது
அரிந்த தக்காளி - 1 பெரியது
கீறிய பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1/2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
செய்முறை :
*காய்ந்த வெந்தயக்கீரை சிறிது வெந்நீரில் உப்பு சேர்த்து ஊறவைத்து அலசி வைக்கவும்.
*கார்னையும் நீரில் அலசி வைக்கவும்.பாஸ்மதியை ஊறவைத்து கழுவி வைக்கவும்.
*குக்கரில் சிறிது நெய் விட்டு பாஸ்மதியை லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.
*மீதமிருக்கும் நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய்+தக்காளி+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*பின் கீரை+கார்ன்+பட்டாணி+உப்பு+3 கப் நீர்+அரிசி +எலுமிச்சை சாறு சேர்த்து 3 விசில் வரை வைக்கவும்.
*வெந்ததும் எடுத்து ராய்த்தா அல்லது வறுவலுடன் பரிமாறவும்.
20 பேர் ருசி பார்த்தவர்கள்:
மேத்தி - ஆஹா! மிக நல்லது
கார்னை - ???
மிக நல்லது
very nice pulav tempting to eat
Nice combo pulao dear...yummy.
delicious recipe.....
healthy pulav
delicious pulao..
இன்றைய தினமலர் நாளிதழில் டாட்காம் பகுதியில் உங்கள் இந்த வலைப்பூ ...!
வாழ்த்துக்கள் ...!
delicious one
wow.. parkavey supera irukke.. sapita varalama??
wow.. parkavey supera irukke.. sapita varalama??
கர்ப்பப்பையில் உள்ள அழுக்குக்களை வெளியேற்ற பிள்ளை பெற்றவர்களுக்கும், கருகலைப்பானவர்களுக்கு இதை செய்து கொடுத்தால் நல்லது
சூப்பர் பதிவுங்க, உங்கள் பதிவிற்கு கீழே உள்ள கையெழுத்தை பார்க்கும் போது மனதிற்கு சந்தோசமாக உள்ளது. தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
super pulao thanks MENAKA
நல்ல ரெசிப்பி மேனகா! காய்ஞ்ச மேத்தியை வச்சு என்ன செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். காலியாக்க ஒரு ரெசிப்பி கிடைச்சாச்சு
மேனகா நல்ல இன்னோவெடிவ்வாக இருக்கு உங்க சமையல்.சூப்பர்.
nalla pathivu
புது விதமாவும் இருக்கு, நல்லாவும் இருக்கும் போல. செய்து பார்த்துடுறோம்.
Pulao looks fantastic...romba healthyana dish..
அனைவரின் கருத்துக்கும் மிக்க நன்றி!!
ஜீவன் அண்ணா நீங்கள் சொல்லிதான் எனக்குத் தெரியும் என் வலைப்பூ தினமலரில் வந்திருக்கு என்று.தெரியபடுத்தியதற்க்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி!!
Post a Comment