Friday 2 April 2010 | By: Menaga Sathia

காரட் அல்வா


இன்றைய தினம் எனக்கு 2 ஸ்பெஷல் தினம்.ஒன்று போன வருடம் இந்த தினத்திலிருந்து தான் ப்ளாக்கில் நிறைய குறிப்புகள் கொடுக்க ஆரம்பித்தேன்.இன்னொன்று அது ரொம்ப ஸ்பெஷல் .........தெரியாதவர்கள் மட்டும் கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு இந்த அல்வா பார்சல் அனுப்படும்.
 
நாம் கேரட் அல்வா செய்யும் போது நெய்யிலே வதக்கி செய்வோம்.ஆனால் அப்படி செய்யாமல் ஆவியில் வேகவைத்து செய்வதால் நெய்யும் குறைவாக செலவாகும்.டேஸ்ட்டும் நல்லாயிருக்கும்....


தே.பொருட்கள்:

துருவிய கேரட் - 3 கப்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி,திராட்சை - தேவைக்கு
நெய் - 1/4 கப்
 
செய்முறை :
*துருவிய கேரட்டை ஆவியில் வேக வைக்கவும்.

*கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி,திராட்சையை வதக்கவும்.அதே கடாயில் வெந்த கேரட்டை சேர்த்து நன்கு வதக்கவும்.

*இடையிடையே நெய் சேர்க்கவும்.கேரட் நன்கு வெந்து சுருண்டு வரும் போது சர்க்கரை சேர்த்து கிளறவும்.நன்கு சுருண்டு வரும் போது ஏலக்காய்த்தூள்+முந்திரி திராட்சை+மீதமிருக்கும் நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.

Sending this recipe to Vegetable Marathon - Carrot by PJ.

56 பேர் ருசி பார்த்தவர்கள்:

Chitra said...

Congratulations - Blog's First Anniversary!

Is it your wedding anniversary too?

GEETHA ACHAL said...

சூப்பர்ப் மேனகா...எனக்கு கண்டிப்பாக கேரட் அல்வா பார்சல்...நிச்சயம்..இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மேனகா உங்களுக்கும், உங்கள் ப்ளாகுக்கும்...

சாருஸ்ரீராஜ் said...

hai very nice Halwa , parkum pothe sapidanum pola irukku .

MANY MOIRE HAPPY RETURNS OF THE DAY
nan kandupuduchuten parcel anupidunga enna dont forget ...

சூர்யா ௧ண்ணன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Unknown said...

Hi menaga ,Happy day today.....ennannu kandupudikka mudiyalai...but Geetha sonna maadhiri Unga Birthday vaa irunthaal Happy Birthday....vaalhukkal.Carrot Halwa mmm yummy...Thanks.

சூர்யா ௧ண்ணன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Asiya Omar said...

superb halwa,have a great and nice day.

மன்னார்குடி said...

வாழ்த்துக்கள்.

Shama Nagarajan said...

Congrats dear...many more happy returns of the day

நித்தி said...

"இன்னொன்று அது ரொம்ப ஸ்பெஷல் .........தெரியாதவர்கள் மட்டும் கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு இந்த அல்வா பார்சல் அனுப்படும்".

என்னவாக இருக்கும் என்றெல்லாம் என்னால் யூகிக்க முடியவில்லை.....அது உங்களது சொந்த விஷயம்...இனிப்பு செய்கின்றீர்கள் என்றால் கண்டிப்பாக நல்ல நாளாக தான் இருக்கும்.....

வாழ்க வளமுடன்........

எப்படி உங்க அல்லாவிலிருந்து escape ஆனேன்னு பாருங்க...ஏன் உங்களுக்கு வீண் பார்சல் செலவு....

நன்றி....

நித்தி said...

ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்

சாராம்மா said...

dear menaga

wish u a very happy birthday to u.

and a nice recipe.

anita

Pavithra Srihari said...

Happy birthday !!! Nambaren geetha va..

Milk podama .. steam panni halwa ... superb ..

Kanchana Radhakrishnan said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மேனகா உங்களுக்கும், உங்கள் ப்ளாகுக்கும்...

Priya Suresh said...

Happy blog anniversary Menaga,onnu onga birthday illana unga marriage birthday, yethuvaga irrunthalum yen vaazhuthukkal..Carrot halwa kanna parikuthu..yumm!!

my kitchen said...

colorful & delicious halwa,B'day wishes dear

my kitchen said...

Don't forget to parcel halwa.I don't want to miss

செந்தமிழ் செல்வி said...

மேனகா,
அல்வா கண்களை கவருகிறது.
பிறந்த நாள் என்றால் பிறந்த நாள் வாழ்த்துக்கள். திருமண நாள் என்றால் உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

காரட் அல்வா, பார்க்கவே அசத்தலா இருக்குங்க.. கண்டிப்பா ட்ரை பண்ணனும்..

உங்க திருமண நாள், அல்லது உங்க குழந்தை பிறந்த நாள்..?? என்ன ஸ்பெஷல் என்றாலும்,
உங்களுக்கு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.. :D :D

puduvaisiva said...

வாழ்த்துகள் சகோதரி

உங்கள் உணவு முறை பல முறை செய்யமல் போனாலும் அவைகளை கண்களால் பார்தலே பார்தால் பசிதீரும். ( நாக்கு டேய் என்டா பொய் சொல்லர)

"அது உங்களது சொந்த விஷயம்...இனிப்பு செய்கின்றீர்கள் என்றால் கண்டிப்பாக நல்ல நாளாக தான் இருக்கும்"

இந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு இதுவாகதான் இருக்கும்.

:-))

Jaleela Kamal said...

ஆவியில் வேக வைத்த கேரட் ஹல்வா சூப்பர்.

அம்மா இப்படி தான் செய்வார்கள் நாங்க 3 கிலோ கிட்ட செய்வோம்.

நானும் போன வருடம் இதே நாள் போய் தரோவா பார்த்துட்டு வந்தேன்.

குறிப்பு ஆரம்பித்த நாள் என்ற் நினைக்கிரேன்.

இது உங்கள் 250 ஆவது குறிப்பு

எதுவா இருந்தாலும் வாழ்த்துக்கள்.

thirsaaa said...

when will you add sugar?

Jaleela Kamal said...

இது உங்கள் 250 ஆவது குறிப்பு

மொத்தத்தில் கேரட் ஹல்வா சூப்பர் இன்று எங்க வீட்டிலும் விஷேஷம் தான்.

மின்மினி RS said...

அருமையான அல்வா.. புதிருக்கு விடை என்ன அக்கா..

Cool Lassi(e) said...

Sashiga,
Halwa is simple, easy and elegant! Happy First Blog anniversary. I just crossed my 6-month blog annivesary quite recently. Feels splendid, doesn't it?

I love your version of steamed ones. I made it like that as well. Cook them under pressure with Milk.

Is the other anniversary, wedding day? Birthday? Come on, sollunga seekaram!

Menaga Sathia said...

முதல்ல என்ன சஸ்பென்ஸ்ன்னு சொல்லிடுறேன்.இன்னிக்கு என் பிறந்தநாள்...அப்புறம் முதல்ல என்ன ஸ்பெஷல்ன்னு சொல்றவங்களுக்கு அல்வா பார்சல்ன்னு சொல்லிருந்தேன்.கிட்டதக்க எல்லோருமே ஒரளவுக்கு சரியா சொல்லிருந்ததால் அனைவருக்குமே அல்வா இன்னும் 1 வாரங்களில் பார்சல் அனுப்பபடும்....

Menaga Sathia said...

திருமணநாள் ஜனவரியிலேயே முடிந்துவிட்டது.இன்னிக்கு பிறந்தநாள்.இதுக்கு இந்த பில்டப்பான்னு கேட்ககூடாது.ஹி..ஹி...நன்றி சித்ரா!!

அல்வா பார்சல் வரும்.வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி கீதா!!

Menaga Sathia said...

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி சாரு அக்கா!!.உங்களுக்கும் பார்சல் வரும்.தபால்காரரிடம் சொல்லி வைங்க...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோ!!

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி கினோ!!

Menaga Sathia said...

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா!!

வாழ்த்துக்கு நன்றி சகோ!!

வாழ்த்துக்கு நன்றி ஷாமா!!

Menaga Sathia said...

என் அல்வா சாப்பிடுவதற்கு பயந்து அழகா சொல்லி எஸ்கேப் ஆகிட்டீங்க.தங்கள் 2 வாழ்த்துக்கும் நன்றி சகோ!!

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி சாராம்மா!!

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி பவித்ரா!!

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி காஞ்சனா!!

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி ப்ரியா!!


வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்ரி இசைச்செல்வி!! பார்சல் உங்களுக்கும் நிச்சயம் வரும்...

Menaga Sathia said...

முதன்முதலில் இப்பதான் என் ப்ளாக் வருகிறீர்கள்.வருகைக்கும்,வாழ்த்துக்கும்,கருத்துக்கும்நன்றி செல்விம்மா!!


வருகைக்கும்,வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி ஆனந்தி!!

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ!!

Menaga Sathia said...

நான் கூட கவனிக்கவில்லை இது என் 250 குறிப்புன்னு நீங்க சொல்லிதான் நானே பார்த்தேன்.வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி ஜலிலாக்கா!! உங்க வீட்லயும் இன்னிக்கு விசேஷமா அதற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

நீங்கள் சொல்லிய பிறகுதான் என் தவறை திருத்தினேன்.இப்போ சரியாக எழுதிருக்கேன்.நன்றி திர்சா!!

Menaga Sathia said...

புதிருக்கு விடை என் பிறந்தநாள்.நன்றி மின்மினி!!

இன்று என் பிறந்தநாள்.வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி கூல் லஸ்ஸி!!

Anonymous said...

மேனகா கலக்கலா இருக்கு.congrats menaka.

Sashi said...

Hi Menaga, first time here. Congrats on ur blog first anniversary, since it was something similar to my name just peeked in to see ur blog. Also, B'day wishes to you. tamil type panninathey illa, sekkram will pick up.

Malini's Signature said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மேனகா :-)

வேலன். said...

உங்களுக்கும் பதிவிற்கும் இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள் சகோதரி...இங்கு மின்தடை ஏற்பட்டதால் சாரி...கொஞ்சம் லேட்டாகிவிட்டது....எல்லா வளமும் எல்லா நலங்களும் பெற்று வாழ்க வளமுடன் என்று வாழத்தும் சகோதரன் வேலன்.

சசிகுமார் said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சஷிகா, இதே போல் இனிவரும் பிறந்த நாட்களையும் மகிழ்ச்சியாக கொண்டாட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Vijiskitchencreations said...

MANY MOIRE HAPPY RETURNS OF THE DAY Menaga.

Congrats Blog's Ist Anniversary.

The yummy halwa looks tekpting.

geetha said...

மேனு!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். உங்கள் ப்ளாக் மென்மேலும் புகழ்பெற வாழ்த்துக்கள்!
கேரட் அல்வா சூப்பர். ஆவியில் வேகவைத்து செய்வது புதிய முறை.
கண்டிப்பாய் செய்து பார்க்கனும்!

மனோ சாமிநாதன் said...

அன்பு மேனகா!

பிறந்த நாளுக்கும் வலைத்தளத்தின் முதலாவது பிறந்த நாளுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்!!

SANKAR PUNITHAM said...

HAPPY BIRTHDAY MENAGA AND NICE HALWA

Ahamed irshad said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் ப்ளாக்கிற்கும்.....

Menaga Sathia said...

கருத்துக்கு நன்றி தலைவன்.காம்!!

வாழ்த்துக்கு நன்றி அம்மு!!

வாழ்த்துக்கு நன்றி சசி,ஹர்ஷினி அம்மா!!

Menaga Sathia said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ!!

வாழ்த்துக்கு நன்றி சசி!!

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி விஜி!!

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி கீதா!!

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி அம்மா!!

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி அக்கா!!

வாழ்த்துக்கும்,வருகைக்கும் நன்றி அஹமது!!

Unknown said...

Congrats -halwa looks really yummy & delicious.

Nithu Bala said...

Congrats on your Blog anniversary and Many more happy returns of the day..hope you had a very great day..

Ms.Chitchat said...

Superb halwa preparation,very nice click. Congratulations on Blog's First Ann. Best wishes on ur B'day too.

SUFFIX said...

மிக்க மகிழ்ச்சி, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

ஆவியில் எவ்வளவு நேரம் வேக வைக்கணும்? நெய்யில் போடும்போது, கேரட்டின் தண்ணீர் இருக்குமே, அதை வடித்துவிட்டுப் போடணுமா அல்லது அதனோடா?

இரண்டு சிறப்புகளுக்கும் வாழ்த்துக்கள் மேனகா.

Menaga Sathia said...

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி ஸ்ரீப்ரியா!!

வாழ்த்துக்கு நன்றி நிது!!

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி சிட்சாட்!!

Menaga Sathia said...

வாழ்த்துக்கு நன்றி சகோ!!

கேரட்டை ஆவியில் வேகும்வரை வேகவைக்கவும்.சுமார் 15 நிமிடமாகும்.நெய்யில் வதக்கும் போது வேகவைத்த கேரட்டை அப்படியே போட்டு வதக்கவும்.வாழ்த்துக்கு நன்றி ஹூசைனம்மா!!

ஸாதிகா said...

மேனகா வாழ்த்துக்கள்.இப்பொழுதுதான் பார்க்கிறேன்.லேட்டாக வாழ்த்தினாலும் உளமார இந்த அக்கா நீங்கள் எல்லா வள,நலன்களுடன் வாழ வாழ்த்துகின்றேன்.

Menaga Sathia said...

லேட்டாக வாழ்த்து சொன்னாலும் வாழ்த்துதான் அக்கா.உங்க வாழ்த்துக்கு நன்றியும்,எனக்கு சந்தோஷமும் தருகிறது...

01 09 10