நான் இருக்கும் இடத்தில் ப்ரெட் கடைகள் தூரம்.அதனால் இந்த ப்ரெட் ரெசிபியை கூகிளாண்டவரிடம் தேடி பார்த்து செய்த ரெசிபி.முதல் முயற்சியில் நன்றாக வந்ததில் ரொம்ப சந்தோஷம் எனக்கு.
தே.பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
ஈஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
வெதுவெதுப்பான பால் - 1/4 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
மைதாமாவு - மேலே தூவ
உப்பு - தேவைக்கு
செய்முறை :
*கோதுமை மாவில் உப்பு+சர்க்கரையைக் கலக்கவும்.சிறிது வெதுவெதுப்பான நீரில் ஈஸ்டைக் கலக்கி 5 நிமிடம் வைத்தால் பொங்கி வரும்.
*மாவில் பால்+ஈஸ்ட் நீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.அதை ஒரு ஈரமான மெல்லியதுணியில் 2 மணிநேரம் மூடி வெப்பமான இடத்தில் வைக்கவும்.
*2 மணிநேரம் கழித்து 2 மடங்காக மாவு உப்பி இருக்கும்.மறுபடியும் நன்கு மிருதுவாக பிசைந்து ஈரத்துணியில் மூடி 1 மணிநேரம் வைக்கவும்.
* 1 மணிநேரம் கழித்து அவனை 190 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.
*கேக் செய்யும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி மாவை வைத்து கையால் வட்டமாக தட்டி மைதாவை மேலே தூவி 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
*சுவையான ப்ரெட் ரெடி.
31 பேர் ருசி பார்த்தவர்கள்:
சுலபமா ஒரு குறிப்பு...அதுவும் கோதுமை மாவில்!
Thanks for sharing!!!
ப்ரெட்டுமா!!!!!! மேனகா கிரேட்.... Nice :-)
Very healthy bread.
Bread looks good dear...I have to try my hand on this...thanks for sharing this healthy recipe :)
menaka bread supera iruku.
very easy ,but very healthy.homemade bread very nice...
நன்றி,மேனகா.நல்ல பதார்த்தம்.விரைவில் செய்து பார்க்கிறேன்.பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
aha, arumai arumai..
bread super ... . very healthy too and hats off to ur guts to try this on your own and am happy that it came perfect at the first time. not many will get it right at the first try. :)
வீட்டுகுள்ளே பேக்கரியா!
:)
You have made it sound so simple. :-)
அன்புள்ள மேனகா!
முதல் முயற்சியிலேயே அருமையாக வந்திருக்கிறது கோதுமை ரொட்டி. வாழ்த்துக்கள்!
eppadi unggalala eppadi mudiyuthu...nan en wifekidda unggala patti atigama pesuven...
நம்ம பேக்கரி ஆரம்பிச்சா முதலில் போட்டுட வேண்டியது தான்.
நன்றி ப்ரியா!!
நன்றி ஹர்ஷினி அம்மா!!
நன்றி பத்மா!!
நன்றி ஸ்ரீவிஜி!!
நன்றி கீதா!! செய்து பாருங்கள் மிகவும் சுலபம்...
நன்றி அம்மு!!
நன்றி பிரேமலதா!!
நன்றி மலர்விழி!! செய்து பாருங்கள்...
நன்றி நிது!!
நன்றி பவித்ரா!! உண்மைதான் முதல்முறையே சரியாக வந்ததில் சந்தோஷமும்,வெற்றியும் கூட...
ஆமாம் இனி நாமளும் பேக்கரி ஆரம்பிக்கலாம்.நன்றி சகோ!!
தங்கள் வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி அம்மா!!
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கணேசன்!! ஆர்வமிருந்தால் எதையும் செய்யலாம் தானே...
எப்போ பேக்கரி ஆரம்பிக்கப்போறீங்க..நன்றி சசி!!
"கோதுமை ப்ரெட்" ஆஹா புதுமையான ஒன்றுதான் .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
ப்ரெட் பார்க்க புசு புசுன்னு அருமையாக இருக்கு,கட் செய்து கொஞ்சம் தரலாம்ல மேனு.
arumai
முதல் முயர்ச்சியே பெரிய வெற்றி தான் மேனகா...சூப்பர்ப்...பிரெட் அருமை...
nice tips.....
ஆகா மேனகா உங்க ஊரைக் கண்டுபிடித்தால் வெஜ் தருவதாக கூறியிருக்கின்றீர்கள். எனக்கு ஏற்கனவே உங்க ஊர் எது என்று தெரியும். நானும் காந்தி சிலைக் கிட்ட சுண்டலும், பொரியும் விற்ப்பான் சாப்பிட்டு இருக்கீங்களான்னு கேட்டது உண்டு. நான் சும்மா ஏன் சொல்ல வேண்டும் என்று சென்னை என்று குறிப்பிட்டேன். சரி ஒரு போட்டி. சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் எங்க ஊரைத்தாண்டிதான் உங்க ஊருக்குப் போக முடியும். அப்படின்னா எங்க ஊர் எது?.
கேதுமை பிரட் அருமை, ஜாம்,சாஸ் எல்லாம் கிடையாதா?
சுலபமா ஒரு குறிப்பு...அதுவும் கோதுமை மாவில்!
Unga bread supera irruku Menaga..
மேனகா வீட்டு பக்கம் பேக்கரி கிடையாது அப்ப வெளியில போட மாட்டிடுங்கள். தமாசுக்கு இல்ல நெசமாதான்.
சரி சோயான்னு போட்டு இருக்கீங்க இதில் சோயா சேர்த்து இருக்கீங்கலா?
நன்றி சங்கர்!!
உங்களுக்கு இல்லாததா,கட் செய்து தருகிறேன்.நன்றி ஆசியாக்கா!!
நன்றி காஞ்சனா!!
நன்றி கீதா!!
நன்றி கிருஷ்ணா!!
ஜாம்,வெண்ணெயுடன் இந்தாங்க ப்ரெட்,சாப்பிடுங்க.அப்போ என் ஊர் தெரியுமா உங்களுக்கு.ஒ.கே..
//சரி ஒரு போட்டி. சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் எங்க ஊரைத்தாண்டிதான் உங்க ஊருக்குப் போக முடியும். அப்படின்னா எங்க ஊர் எது?. //செங்கல்பட்டு,மாமல்லபுரம் ந்னு நினைக்கிறேன்.சரியாண்ணா.நான் இந்த ஊர்விஷயத்தில் அந்தளவுக்கு புலியில்லை அண்ணா.நன்றி!!
நன்றி சகோ!!
நன்றி ப்ரியா!!
போர்டு மாட்டிட்டா போச்சு,இதில் சோயா சேர்க்கவில்லை.லேபிளில் சோயா/ப்ரெட் ரெசிபின்னு போட்டிருக்கேன்.அதை க்ளிக் செய்தால் 2 ரெசிபிகளும் வரும்.நன்றி ஜலிலாக்கா!!
மாமல்லபுரம் தாண்டி வந்தால் புதுப்பட்டினம் என்ற ஊர் வரும், கல்பாக்கம் புதுப்பட்டினம் எல்லாம் ஒரே ஊர்தான். அதுதான் கடந்த 10 ஆண்டுகளாக வசித்த ஊர்.
இனி அந்த பக்கம் போகும்போது அந்த ஊரைப்பார்த்தால் உங்க ஞாபகம் வரும்..ஏதோ அப்போ ஒரளவுக்கு உங்க ஊர் பெயரை கிட்டதக்க சொல்லியிருக்கேன்..
Post a Comment