Monday 16 July 2012 | By: Menaga Sathia

பலாப்பழ பாயாசம் /Jackfruit Payasam | Onam Sadya Recipes


தே.பொருட்கள்

பலாச்சுளைகள் - 10
வெல்லம் - 1/2 கப் (அ) இனிப்பிற்கேற்ப
பால் - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு
பொடியாக அரிந்த தேங்காய்ப்பல் - 1 டேபிள்ஸ்பூ்ன்
நெய் -1/4 கப்

செய்முறை
*சிறிது நெய்யில் தேங்காய்ப்பல்லை முறுகலாக வதக்கவும்.

*பலாச்சுளைகளை பொடியாக அரிந்து ,கடாயில் நெய் விட்டு நன்கு  வதக்கவும்.

*வதங்கியதும் பால் சேர்த்து வேகவிடவும்.வெல்லத்தில் சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து மண்ணில்லாமல் வடிகட்டவும்.

* பலாச்சுளைகள் நன்கு வெந்ததும் வெல்லக்கரைசல்+ஏலக்காய்த்தூள் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கும்போது முந்திரி,திராட்சை சேர்க்கவும்.

பி.கு

*பாலிற்கு பதில் 1 கப் 2ஆம் தேங்காய்பாலில் பலாச்சுளைகளை வேகவைத்து வெல்லகரைசல் சேர்த்து இறக்கும் போது 1/2 கப் 1ஆம் தேங்காய்ப்பாலை சேர்த்து இறக்கவும்.1ஆம் தேங்காய்ப்பாலை சேர்த்ததும் கொதிக்கவிடக்கூடாது.

16 பேர் ருசி பார்த்தவர்கள்:

hotpotcooking said...

Delicious pala pazha payasam.

Angel said...

நலமா மேனகா .நேற்று இங்கே வந்தேன் உங்களை காணவில்லைன்னு .
இன்னிக்கு ஸ்வீட் பலாபழ பாயசம் ....ஃப்ரஸா கிடைச்சா செய்துடறேன் .

MARI The Great said...

புதுசா இருக்கு.., சுவையாவும் இருக்கும் போலிருக்கே :)

Hema said...

Paarkarathukke supera irukku..

MANO நாஞ்சில் மனோ said...

ஊரைவிட்டு வந்துட்டேனே.....ஆஹா பாயாசம் போச்சே.....!

Unknown said...

very nice never heard of this!
"SYF&HWS - Cook With SPICES" Series
"South Indian Cooking" (SIC) # 1 (July 15th to Sep 15th)
"Cooking with Whole Foods" - BROWN RICE (June 10th to Aug 10th)

Unknown said...

Appadiye kudikkalam.romba nalla irukku pa.

மனோ சாமிநாதன் said...

பலாப்பழ பாயசம் அருமை மேனகா!

சி.பி.செந்தில்குமார் said...

>>>சிறிது நெய்யில் தேங்காய்ப்பல்லை முறுகலாக வதக்கவும்.

தேங்காய்க்கு 3 கண் இருக்கும், பல்லும் இருக்கா? அவ்வ்வ்வ்

Rekha said...

mouthwatering and delicious payasam..
http://indiantastyfoodrecipes.blogspot.in

Shama Nagarajan said...

inviting dear

ராமலக்ஷ்மி said...

நல்ல ட்ரீட் மேனகா:)! ரோஹித் பேரைச் சொல்லி சந்தோஷமாய் செய்து சாப்பிடுகிறோம்!

Priya Suresh said...

Wow irresistible payasam,kalakal ponga.

தெய்வசுகந்தி said...

பலாப்பழத்துல என்ன செய்தாலும் பிடிக்கும். ஆனா இங்கே கிடைக்கறது இல்லை:((

RajalakshmiParamasivam said...

பலாப்பழ பாயசம் பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது.

பலாக்காயில் கூட்டு செய்யலாம் தெரியும். ஆனால் பலாப்பழத்தில் சுளைகள் மட்டுமே சமைக்க உதவுமா? அல்லது பலாச்சுளையை சுற்றியுள்ள நார் போன்றவற்றையும் சமைக்கலாமா? விருந்து ஒன்றில் பலாச்சுளையை சுற்றியிருக்கும் நாரில் செய்த சற்றே இனிப்பாக செய்திருந்தார்கள். பலாக்காயாக இருக்கும் என்று விவரம் கேட்டதற்கு அழுத்தம் திருத்தமாக பலாச்சுளையை சுற்றி இருப்பதிலிருந்து செய்தது என்று சொன்னார்கள்.

உங்களுக்கு அது போன்ற சமையல் குறிப்புத் தெரிந்தால், தெரிவித்தால் நலம்.
நன்றி

Menaga Sathia said...

@Rajalakshmi Paramasivam

பலாப்பழத்தில் தான் பாயாசம் செய்வாங்க...அதனை சுற்றியிருக்கும் நாரினை நீக்கிவிட்டுதான் சமைப்பாங்க..நீங்கள் சொல்வது புதுசா இருக்குங்க.நான் இதுவரை அப்படி செய்ததில்லை.அடுத்தமுறை நீங்கள் சொன்னதுப்போல செய்து பார்க்கிறேன்.மிக்க நன்றிங்க!!

01 09 10