Monday 7 January 2013 | By: Menaga Sathia

க்ரோசண்ட்/ Croissant

Recipe Source: Julia Child

கொடுத்துள்ள அளவில் நான் பாதி அளவில்  சேர்த்து செய்துள்ளேன்.இந்த அளவில் 6 க்ரோசண்ட் வரும்.

தே.பொருட்கள்

ஈஸ்ட் கலவை

டிரை ஈஸ்ட் -1/2 டீஸ்பூன்
உப்பு - 1/8 டீஸ்பூன்
சர்க்கரை - 1/4 டேபிள்ஸ்பூன்
வெதுப்வெதுப்பான நீர் - 1/8 கப் (100°F/38°C)

வெதுப்பான நீரில் மேற்கூறிய பொருட்களை ஒன்றாக கலந்து 5 நிமிடம் வைக்கவும்.

க்ரோசண்ட் கலவைக்கு

மைதா மாவு - 1 கப்
சர்க்கரை - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
பால் - 1/3 கப்
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் -1/4 கப் (= 60 கிராம் /Half Stick = 1/8 lb)
முட்டை - 1 / பால் -மேலே தடவ

செய்முறை

*பாலில் உப்பு+சர்க்கரை+எண்ணெய்+பொங்கிய ஈஸ்ட் கலவை இவறை ஒன்றாக கலந்து மாவில் சேர்த்து பிசையவும்.

*இந்த அளவே மாவு பிசைவதற்கு சரியாக இருக்கும்.தேவையானால் மட்டும் நீர் சேர்த்து பிசையவும்.

*மிருதுவாக 10 நிமிடங்கள் பிசையவும்.
*ஈரத்துணியால் மூடி வெப்பமான இடத்தில் வைக்கவும்.

*2 மணிநேரம் கழித்து இருமடங்காக உப்பியிருக்கும் மாவை பிசைந்து மீண்டும் வெப்பமான இடத்தில் 1 மணிநேரம் வைத்து எடுக்கவும்.
*வெண்ணெயை அறைவெப்பநிலையில் வைத்து நன்றாக பிசையவும்.
*உப்பியிருக்கும் மாவை Rectangle வடிவில்  உருட்டில் மேல்பாகத்தில் வெண்ணெயை வைக்கவும்.

*வெண்ணெய் தடவாத பகுதியை உள்பக்கமாகவும்,தடவிய பக்கத்தை மேல்பக்கமாகவும் மடிக்கவும்.
*இவற்றை க்ளியர் ராப் கவரில் மடித்து ப்ரிட்ஜில் 1/2 மணிநேரம் வைக்கவும்.
*ப்ரிட்ஜிலிருந்து எடுத்து வடிவில் வெண்ணெய் கலவை வெளியவராதபடி உருட்டி இப்பொழுது மடிப்பு பக்கத்தை மாற்றி முன்பு கூரியதை போலவே அல்லது படத்தில் காட்டியள்ளதுபோல் மடிக்கவும்.

*இது போல் 3 அல்லது 4 முறை செய்யவும்.ஒவ்வொரு மடிப்புக்கு பிறகும் க்ளியர் ராப் கவரில் சுற்றி 1/2 மணிநேரத்துக்கொருமுறை செய்யவும்.

*மீண்டும் Rectangle வடிவில் உருட்டி 3 பாகமாக வெட்டி ஒரு பாகத்தை உபயோகபடுத்தவும்,மற்ற இரண்டியும் ப்ரிட்ஜில் வைக்கவும்.
*வெட்டிய பக்கத்தை ஒன்றை Square வடிவில் உருட்டி Diagonale ஆக வெட்டவும்.
*வெட்டியதில் ஒன்றை எடுத்து அடியிலிருது உருட்டினால் படத்தில் உள்ளது போல் வரும்.

*இதுபோல் அனைத்தையும் செய்து பேக்கிங் டிரேயில் இடைவெளி வைத்து அடுக்கி 2மடங்காக உப்பும்வரை வைக்கவும்.

*உப்பியதும் பால்/முட்டையில் சிறிது நீர் கலந்து ப்ரெஷ்ஷால் க்ரோசண்ட் மேல் தடவவும்.
*240 °C முற்சூடு செய்த அவனில் 10-12 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.

பி.கு

*இதனை செய்ய எனக்கு 2 நாளானது.

*முதல்நாள் வெண்ணெய் கலவையை மாவில் வைத்து மடித்ததும் ஒர் இரவு முழுவதும் ப்ரிட்ஜில் வைத்து மறுநாள் மீதியுள்ள ஸ்டெப்படி செய்தேன்.

* எத்தனை முறை மடிக்கிறமோ அத்தனை லேயர்கள் வரும்.நான் 5-6 தடவை மடித்து செய்தேன்.அதனால் அதிக அளவில் லேயருடன் மிருதுவாக இருந்தது.

15 பேர் ருசி பார்த்தவர்கள்:

Lifewithspices said...

loks xactly like bakery made.. so good..

Sangeetha Nambi said...

yummy :)
http://recipe-excavator.blogspot.com

Angel said...


க்ரோசான்ட் பார்க்க மிக அருமையா வந்திருக்கு மேனகா .பகிர்வுக்கு நன்றி .

Unknown said...

Lovely croissants.

Jaleela Kamal said...

mika arumai

divya said...

looks delicious n yummy...

Hema said...

The croissants look amazing..

divyagcp said...

Love these croissants.. They look perfect..

Shylaja said...

I made this loong time back. It is a lot of work but delicious, right?

Romba nalla iruku unga croissant

Easy (EZ) Editorial Calendar said...

ரொம்ப நல்லா இருக்கு....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

ஹுஸைனம்மா said...

க்ரோய்ஸண்ட் ரொம்பப் பிடிச்சது என்பதால், ஆர்வமாப் பார்த்தேன். ஆனா ரொம்பப் பெரிய வேலை பொலருக்கு.... எனக்கில்லை.. எனக்கில்லை.. :-))))

Rekha said...

looks yummy and perfect..
\http://www.indiantastyfoodrecipes.com/

Asiya Omar said...

சூப்பர்.மேனு..அசத்தறீங்க.

அஸ்மா said...

க்ரோசான் அழகா வந்திருக்கு மேனகா! நான் முன்பு அறுசுவையில் கொடுத்திருந்தேனே.. ஞாபகம் உள்ளதா? :) அந்த ஃபோட்டோஸ் இப்போது இல்லை என்னிடம். மீண்டும் செய்தால்தான் போடணும் என்றிருந்தேன்.

//*இதனை செய்ய எனக்கு 2 நாளானது//

எனக்கு 2 நாட்கள் ஆகலயே மேனகா?!

Anonymous said...

Wow, romba poruma than ponga!!

01 09 10