Wednesday 2 January 2013 | By: Menaga Sathia

அசோகா அல்வா /Asoka Halwa

தே.பொருட்கள்

பாசிப்பருப்பு - 1/4 கப்
சர்க்கரை - 1/2 கப்
கோதுமைமாவு - 1 டேபிள்ஸ்பூன்
மைதா  - 1/2 டேபிள்ஸ்பூன்
நெய் -1/2  கப்
வெஜிடேபிள் எண்ணெய் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் + கேசரி கலர் - தலா 1/4 டீஸ்பூன்
முந்திரி - 6

செய்முறை

*குக்கரில் சிறிது நெய்விட்டு பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவும்.

*பின் முழ்குமளவு நீர் விட்டு நன்கு குழைய வேகவிடவும்.
*வெந்ததும் மிக்ஸியில் மைய அரைக்கவும்.
*கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும்.

*அதே கடாயில் மைதா+கோதுமைமாவு போட்டு வறுக்கவும்.
*பின் அரைத்த பாசிபருப்பு விழுது+சர்க்கரை சேர்த்து கிளறவும்.

*இடையிடையே நெய் +எண்ணெய் சேர்த்து கிளறி விடவும்.
*இடையே கேசரி கலர்+ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
* நெய் பிரிந்து வரும் போது முந்திரி சேர்த்து இறக்கவும்.
*இதனை இளஞ்சூடாக இருக்கும்போது சாப்பிட சுவையாக இருக்கும்.

பி.கு

*இதில் மைதா சேர்த்து செய்தால்தான் அல்வா போல மினுமினுப்பாக இருக்கும்.

16 பேர் ருசி பார்த்தவர்கள்:

hotpotcooking said...

Happy new year. Halwa looks delicious

Swanavalli Suresh said...

Yummy Halwa

divya said...

Very tempting and irresistible..

Priya Suresh said...

Appadiye rendu spoon yeduthukalama? superaa irruku halwa.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஹல்வா பார்க்கவே அருமையாகவும் கண்களுக்கு ருசியாகவும் உள்ளது.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

[புத்தாண்டு பிறந்ததுமே எல்லோருக்கும் அல்வா கொடுத்து அசத்தியுள்ளது தங்களின் தனிச்சிறப்பு ;)))))]

Easy (EZ) Editorial Calendar said...

பார்க்கும் போதே செய்ய வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்துகிறது......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Vimitha Durai said...

Beautifully decorated dear... Yummy cake

Lifewithspices said...

puthaandu vazthukkal.. arumayanaa sweet..

Hema said...

Very delicious, love this..

Nasar said...

அட...இந்த அல்வாவும் ருசியாகத்தான் இருக்கு ...
அட்டகாசமா என்னென்னமோ புதுசு புதுசாக செய்து அசத்துறீங்க ..
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி .....

Kitchen Chronicles said...

Halwa romba supera irukku.

Shanavi said...

My district delicacy..LOOOve it, am a great great fan of this sweet. U r trigerring my sweet tooth Menaga..Slurp

Asiya Omar said...

halwa supero super.mouth watering.

Mahi said...

Delicious halwa!

swaminathan said...

very nice dish. easy to prepare.

swaminathan said...

very nice dish. very easy to prepare. tasty and healthy.

01 09 10