Thursday 10 January 2013 | By: Menaga Sathia

தென்னிந்திய சைவ உணவு/South Indian Veg Thali

நீண்ட நாட்களாக சைவ ஒட்டல்களில் உணவு பரிமாறுவதுப்போல் செய்ய வேண்டும் என்று ஆசை.கடைசியாக கிறிஸ்துமஸ் முதல்நாளன்று செய்தேன்.

இடமிருந்து வலமாக  

ஆரஞ்சுப்பழ கேசரி, கத்திரிக்காய் சாம்பார்,தக்காளி ரசம்,தயிர், உருளை வறுவல், பச்சைப் பட்டாணி கோஸ் பொரியல்,கேரட் பீன்ஸ் பொரியல்,அப்பளம்,மோர் மிளகாய் மற்றும் சாதம்..

பச்சைப் பட்டாணி கோஸ் பொரியல்

தே.பொருட்கள்

பச்சைப் பட்டாணி - 1/2 கப்
பொடியாக நறுக்கிய கோஸ் -1 கப்
நறுக்கிய வெங்காயம் -1
கீறிய பச்சை மிளகாய் -2
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

தாளிக்க

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

*பச்சை பட்டாணியை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிக்கவும். அந்த நீரை கீழே ஊற்றவேண்டாம்

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+மஞ்சள்தூள்+கோஸ்+உப்பு என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி பட்டாணி வேகவைத்த நீரை ஊற்றி வேகவிடவும்.

*கோஸ் வெந்ததும் வேகவைத்த பட்டாணி+தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

பி.கு
*இதற்கு ப்ரோசன் பட்டாணி மற்றும் ப்ரெஷ் பட்டாணியை விட காய்ந்த பட்டாணியை ஊறவைத்து செய்தால்தான் நன்றாக இருக்கும்.

*இதே போல் கோஸ் பதிலாக பீட்ரூட்டிலும் செய்யலாம்.


21 பேர் ருசி பார்த்தவர்கள்:

Kitchen Chronicles said...

South Indian Thali super. looks very good.

சி.பி.செந்தில்குமார் said...

;-))) உங்க வீட்ல சாப்பாட்டு பிளேட் இவ்ளவ் சின்னதா இருக்கு? கி கி கி

ராஜி said...

கைவசம் நல்ல தொழில் இருக்கு போல. ஹோட்டல் தொழிலைத்தான் சொல்றேன். நிஜமாவே ஏதோ ஹோட்டல் பிளேட்டை ஃபோட்டொ எடுத்த மாதிரியே இருக்கு.

Priya Suresh said...

Evalo varieties,paathathume pasikuthu.

Unknown said...

Awww. Romba nalla irukku. Idhuve Vazhai la iruntha innum nalla irukkum. Besh besh.. romba nanna irukku :-)

divya said...

yummy n delicious..

Divya A said...

Looks like a vegetarian hotel plate :) Awesome :)
Eeral Milagu | Mutton Liver Pepper Fry

Hema said...

Aaha, solli irundha saapida vandhu iruppane Menaga..

Sangeetha M said...

wow...super tempting thaali...virunthukku varalama?!next time will try adding peas to cabbage poriyal, looks so yumm!

hotpotcooking said...

Evalavu varieties, parkavae nalla irukku

divyagcp said...

Awesome spread.. Just seeing the pictures makes me hungry..

ஸாதிகா said...

ஆஹா...சூப்பர்.இதை இலையில் பறிமாறி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

Lifewithspices said...

sooperr spread..

Unknown said...

அந்த தட்டை இந்த பக்கம் அனுப்புங்க மேனகா... பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு.... ஆசையை தூண்டிட்டீங்க....

My World My Home said...

Wow...super. Solli iruntha naanum vanthu irupen :-)

Helen
http://myworldmyhome2012.blogspot.in

வை.கோபாலகிருஷ்ணன் said...

தென்னிந்திய சைவ சாப்பாடு பற்றி ருசிகரமான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.

என் தளத்தில் இன்று அடை சாப்பிட வந்ததற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Asiya Omar said...

சூப்பர் சமையல்.அப்படியே அந்த தட்டை இங்கே தள்ளுங்க. பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

Mahi said...

Nice spread Menaga!

Pongal nalvazhthukkal!

Anonymous said...

adengappa.. kekave naaku uruthu!

'பரிவை' சே.குமார் said...

வாவ்... அருமை... படம் பார்த்ததும் பசிக்குது அக்கா.

meena said...

Oh Menaga I love those thalis u have served.I have to read all of those glad there is Google translator. Love love tamizh food.

01 09 10