Thursday, 13 June 2013 | By: Menaga Sathia

சாட் பூரி /How To Make Puri For Chaat


தே.பொருட்கள்

ரவை - 1/2 கப்
உப்பு - தேவைக்கு
பேக்கிங் பவுடர் -1/4 டீஸ்பூன்
நீர் -1/4 கப்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*பவுலில் நீர் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
*நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திதிற்க்கு பிசைந்து ஈரத்துணியால் மூடி 20 நிமிடங்கள் வைக்கவும்.
*20 நிமிடங்கள் கழித்து மாவை நன்கு பிசைந்து எலுமிச்சை பழளவு உருண்டை எடுத்து நன்கு மெலிதாக  உருட்டி குக்கீ கட்டரால் வெட்டு எடுக்கவும்.

*உருட்டும் போது மாவு ஒட்டினால் நெய் தடவி உருட்டவும்.
*பூரிகளை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*உப்பிய பூரிகளை பானி பூரி ,தஹி பூரிக்கும்,உப்பாத பூரிகளை பேல்பூரிக்கும் பயன்படுத்தலாம்.

பி.கு

*விரும்பினால் பூரி பொன்னிறமாக வேண்டுமானால் மாவு பிசையும் 1 டேபிள்ஸ்பூன் உளுத்தமாவு சேர்த்து பிசையலாம்.

*பூரிகளை காற்றுபுகாத டப்பாவில் 10 நாள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

*இந்த அளவில் 16 பூரிகள் வரும்.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ப்டமும் பக்குவமும் அருமையாக உள்ளன. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

சாட் பூரி வெளியில் சாப்பிடுவதோடு சரி... ம்... செய்யச் சொல்லுவோம்... நன்றி...

Poornimacookbook said...

very useful post.

ராமலக்ஷ்மி said...

குறிப்பு அருமை மேனகா.

Priya Anandakumar said...

Cute and perfect little pooris... Very lovely Menega...

GEETHA ACHAL said...

Super yummy cute little pooris...

வை.கோபாலகிருஷ்ணன் said...

பூரியைப் படத்தில் பார்த்ததும் பசியெடுக்கும் விதமாக அருமையாக உள்ளது. உப்பலாக சூடாக கோதுமை மாவியில் செய்த பூரி + உருளைக்கிழங்கு, வெங்காயம் போட்ட மஞ்சள் நிற மஸால் இருந்தால் போதும் எனக்கு. வேறு எதுவுமே வேண்டாம்.

அழகான பதிவுக்குப்பாராட்டுக்கள்.

divya said...

looks sooo perfect..

Asiya Omar said...

பூரி பார்க்கவே சூப்பர்.

Mahi said...

நல்லாஇருக்கு மேனகா! நான் சாட் ஐட்டம்ஸ் செய்து வருஷக் கணக்காச்சு, இன்னிக்கே பூரி செய்யப் போறேன்! :)

இராஜராஜேஸ்வரி said...

அருமையான ருசியான பூரிகள்...

great-secret-of-life said...

my kids fav poori

Hema said...

Perfectly done, nicely puffed up..

Hema said...

Perfectly done, nicely puffed up..

Sangeetha M said...

perfectly puffed puris..i used to add lil' APF but u got nice puffed puris without it...well done!

ராஜி said...

ரவையில் பூரியா?! செய்து பார்க்குறேன்

Saras said...

Perfectly made chat pooris..We used to make this in batches and store.. time consuming but worth making it..

Unknown said...

puri looks so cute and crispy..

Akila said...

Love these chat pooris

ஸாதிகா said...

வெறும் ரவை மட்டுமா?மைதா இல்லையா?

Menaga Sathia said...

@ஸாதிகா அக்கா

மைதா சேர்க்க தேவையில்லை,வெறும் ரவையிலேயே செய்யலாம்..

01 09 10