Saturday, 14 September 2013 | By: Menaga Sathia

எரிசேரி /Erissery With Yam | Onam Sadya Recipes

தே.பொருட்கள்

சேனைக்கிழங்கு துண்டுகள் - 1 1/2 கப்
வாழைக்காய் - 1
மஞ்சள் தூள்  -1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
நீர் - 1 கப்
துருவிய தேங்காய் -  1/4 கப் + 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கு

செய்முறை

*வாழைக்காயை தோல் சீவாமல் சிறு துண்டுகளாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் வாழைக்காய் துண்டுகள்+சேனைக்கிழங்கு துண்டுகள்+உப்பு+நீர்+மிளகுத்தூள் சேர்த்து வேகவிடவும்.

*1/4 கப் தேங்காய்துறுவலுடன் சீரகம் சேர்த்து மைய அரைத்து காய்கள் வெந்ததும் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

*வேறொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+கறிவேப்பிலை சேர்த்து தாலித்து மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்துறுவலை பொன்முறுவலாக வறுத்து சேர்க்கவும்.

பி.கு

வாழைக்காயை தோல் சீவினால் காய் குழைந்துவிடும்.


11 பேர் ருசி பார்த்தவர்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

செய்முறை குறிப்பிற்கு நன்றி...

Jaleela Kamal said...

எரிசேரி மிக அருமை

Jaleela Kamal said...

எரிசேரி மிக அருமை

ராஜி said...

குறிப்புக்கு நன்றிங்க

ADHI VENKAT said...

சுவையான குறிப்பு. எனக்கு மிகவும் பிடித்தது.

Asiya Omar said...

வரிசையாக ஓணம் ரெசிப்பியா? அசத்துங்க.

Unknown said...

erissery with pumpkins is most often made but yam is something new and looks delicious dear !!

Sangeetha Priya said...

delicious curry dear...

great-secret-of-life said...

nice combo.. Love it

வை.கோபாலகிருஷ்ணன் said...

செய்முறை குறிப்புகள் அருமை.

ஏனோ இந்த கிழங்கு வகைகளில் உருளைக்கிழங்கு தவிர வேறு எதுவும் நான் தொடுவதே இல்லை.

எரிச்சேரி பெயரே புதுமையாக உள்ளது. பாராட்டுக்கள், மேனகா.

'பரிவை' சே.குமார் said...

நல்ல குறிப்பு அக்கா...

01 09 10