Monday, 2 December 2013 | By: Menaga Sathia

காரட் அல்வா -2 / Carrot Halwa - 2


இது என்னுடைய 800 வது பதிவு!!

காரட் அல்வாவினை நான் சிலநேரம் நெய்யில் வதக்கி செய்வதை விட ஆவியில் வேகவைத்து செய்வேன்.இந்த குறிப்பு அதன் செய்முறை விட முற்றிலும் வேறு.

* இந்த அல்வாவினை நெய்யில் செய்வதைவிட வெண்ணையில் செய்ய வேண்டும்.எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது.

*கேரட்டினை கேரட் துருவியில் துருவுவதைவிட சீஸ் துருவுவதில் துருவி செய்யவேண்டும்.சுவை மிக நன்றாக இருக்கும்.

*கொடுத்துள்ள அளவுபடி செய்தால்  சுவை நன்றாக இருக்கும்.

*முந்திரி மற்றும் திராட்சையினை தனியாக நெய்யில் வதக்கி சேர்ப்பதற்கு பதில் கேரட் வதக்கும் போதே சேர்த்தால் நன்றாக் இருக்கும்


தே.பொருட்கள்

துருவிய காரட் -2 கப்
சர்க்கரை - 1/4 கப்+1/8 கப்
பால் -1 கப்
முந்திரி -1/8 கப்
திராட்சை - 1 1/2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் -1/2 டீஸ்பூன்
வெண்ணைய் - 1/4 கப் + 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் துருவிய காரட் சேர்த்து  5 நிமிடங்கள் வதக்கவும்.

*காரட் சிறிது வதங்கியதும் முந்திரி+திராட்சை  சேர்த்து  தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.

*நன்றாக வதங்கிய பிறகு பால் சேர்த்து வேகவிடவும்.

*ஏலக்காய்த்தூள் சேர்த்து பால் வற்றும் வரை நன்கு வதக்கவும்.

*பின் சர்க்கரை  சேர்த்து   7-8 நிமிடங்கள் வரை கிளறி இறக்கவும்.

*இதனை சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறவும்.

*இதனுடன் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து சாப்பிட சூப்பர் சுவை...



22 பேர் ருசி பார்த்தவர்கள்:

Akila said...

Hhhmmmm simply superb....

Shama Nagarajan said...

yummy tempting halwa

இராஜராஜேஸ்வரி said...

800 வது பதிவுக்கு நிறைவான வாழ்த்துகள்..

அசத்தலான காரட் அல்வாவுக்கு பாராட்டுக்கள்..!

ராமலக்ஷ்மி said...

இனிப்புடன் வழங்கியிருக்கும் எண்ணூறாவது பதிவுக்கு நல்வாழ்த்துகள் மேனகா:)! மேலும் சிறக்கட்டும் உங்கள் பயனுள்ள பணி!

Asiya Omar said...

800 வது பகிர்வுக்கு பாராட்டுக்கள்.நல்வாழ்த்துக்கள்.தொடர்ந்து வெற்றி நடை போடுங்கள்.கேரட் ஹல்வா சூப்பர்.

ADHI VENKAT said...

800வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்...

அருமையான காரட் அல்வா...

http://kovai2delhi.blogspot.in/2011/12/g.html

முன்பு என்னுடைய பக்கத்தில் பகிர்ந்த குறிப்பு இதோ...

உஷா அன்பரசு said...

இனிப்பான 800 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..!

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர்ப் ருசி......

எண்ணூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்....!

வை.கோபாலகிருஷ்ணன் said...

800 வது பதிவுக்கு பாராட்டுக்கள்.

மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

கேரட் அல்வா சூப்பர்.

எல்லோருக்கும் இன்று அல்வா கொடுத்து விட்டீர்கள்.

மிக்க மகிழ்ச்சி ! ;)

>>>>>

hotpotcooking said...

Delicious halwa.

வை.கோபாலகிருஷ்ணன் said...

என் தொடருக்கு கடந்த ஐந்து பகுதிகளாக நீங்க வரவே இல்லையென என் கணக்குப் பிள்ளை கிளி சொல்லச் சொன்னார்.

நேரம் கிடைக்கும்போது வாங்கோ, ப்ளீஸ்.

அன்புடன் கோபு

Priya Anandakumar said...

Carrot halwa looks delicious and very well prepared, very beautiful clicks...

Priya Anandakumar said...

Super 800th post and congrats Menaga, wish you many many more successful and wonderful years to come...

'பரிவை' சே.குமார் said...

ஆஹா...
அல்வா...
சூப்பரு...

Unknown said...

Delicious Halwa...

great-secret-of-life said...

one of my fav dessert

ஸாதிகா said...

800 ஆவது பதிவாக கேரட் அல்வாவை விருந்தாக்கி மகிழ்வித்த மேனகாவுக்கு வாழ்த்துக்கள்.

sivanes said...

800 வது பதிப்புக்கு அல்வா கொடுத்தா தோழி சசிகாவிற்கு பாராட்டுக்கள், இப்டியே 8000 பதிப்பு 80000 பதிப்பு என தொடர நல்வாழ்த்துகள்

Aruna Manikandan said...

congrats and wishing u many more akka, carrot halwa looks rich and delicious :)

Unknown said...

super delicious and yummy carrot halwa :)

Hema said...

Carrot Halwa superb, must try with butter..

01 09 10