*மாங்காயை கடைசியாக தான் சேர்க்கவேண்டும்.முதலிலேயே சேர்த்தால் குழைந்துவிடும்.
*மாங்காயின் புளிப்பிற்கேற்ப புளிகரைசலை சேர்க்கவும்.
*நான் பெரிய கத்திரிக்காய் சேர்த்து செய்துள்ளேன்.சிறிய வயலட் கத்திரிக்காய் 2 சேர்த்து செய்தால் நல்ல சுவையாக இருக்கும்.
தே.பொருட்கள்
துவரம்பருப்பு - 1/3 கப்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
நறுக்கிய தக்காளி -1 சிறியது
கீறிய பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி -2 டீஸ்பூன்
முருங்கைகாய் -1
கத்திரிக்காய் - 1 சிறியது
மாங்காய் - 1
புளிகரைசல் -1/2 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க
வடகம் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத்தூள் -1/2 டீஸ்பூன்
செய்முறை
*முருங்கை+கத்திரிக்காய் இவற்றை நடுத்தர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.மாங்காயை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
*பருப்பை மஞ்சள்தூள்+சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
*பின் தக்காளி+உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.
*கத்திரிக்காய்+முருங்கை சேர்த்து வதக்கி 1 கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.
*காய் வெந்ததும் சாம்பார் பொடி+புளிகரைசல் செர்த்து மேலும் கொதிக்கவிடவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் மாங்காய் துண்டுகள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து வேகவைத்த பருப்பினை சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.
*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து சேர்க்கவும்.கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
This is off to Priya's Vegan Thursday
10 பேர் ருசி பார்த்தவர்கள்:
பாட்டாவே பாடிட்டீங்களா...? ஹா... ஹா... தலைப்பும் சூப்பர்...!
நாளை செய்து பார்க்கிறோம்... நன்றி...
Oh God! nothing can beat this combination...remembering amma she makes this combo often...
வடகம் தாளித்து செய்யும் சாம்பார் சேலம் பக்கம் செய்வார்கள். குறிப்பு அருமை!!
nice flavorful sambar. Lovely post dear.
எனக்கு ரொம்ப புடிச்ச சாம்பார். சூப்பரா இருக்கு
drooling dear
Intha sambhar naan yethana naal aanalum vachi saapiduven, classical combo.
சாம்பார் ஜோர்..
tis s a wonderful combo sambar..
Manga potale oru thani suvaithan.Enaku romba pidicha sambhar .
Post a Comment