Monday, 23 February 2015 | By: Menaga Sathia

தர்மபுரி ஸ்பெஷல் மிளகாய் வடை / DHARMAPURI SPL MILAGAA VADAI OR KAARA DOSA | GUEST POST BY SRIVIDHYA NAVIN


print this page PRINT IT
தோழி வித்யா நவீன் அவர்கள் முகநூல் குரூப்பில் அறிமுகமானவங்க.எப்போதவாது சாட்டிங் செய்வதும் உண்டு.அவர்களிடம் அவர் ஊரின் ஸ்பெஷல் மிளகாய் வடை / கார தோசை குருப்பினை கெஸ்ட் போடுமாறு கேட்ட போது உடனே சம்மதித்து குறிப்பினை 3 நாட்களுக்குள் அனுப்பிவிட்டாங்க.உங்கள் ஊரின் சுவையான மாலை நேர சிற்றுண்டியை பகிர்ந்து கொண்டதற்காக நன்றி வித்யா!!

இந்த மிளகாய் வடையின் செய்முறையில் தோசையும் சுடலாம்.மாவினை உடனே அரைத்து செய்யலாம்.

தே.பொருட்கள்

பச்சரிசி -1.5 கப்
துவரம்பருப்பு -1 கப்
சின்ன வெங்காயம் -3/4 கப்
இஞ்சி -1 சிறு துண்டு
பூண்டுப்பல் -5
தனியா -2 டீஸ்பூன்
வரமிளகாய் -10(அ)12
கிராம்பு -4
சோம்பு -2 டீஸ்பூன்
பட்டை -சிறுதுண்டு
கறிவேப்பிலை -1 கொத்து
கொத்தமல்லித்தழை -சிறிதளவு
உப்பு -தேவைக்கு
எண்ணெய் -பொரிக்க‌

செய்முறை

*அரிசி+பருப்பினை ஒன்றாக 1 மணிநேரம் உறவைக்கவும்.


*முதலில் பட்டை+கிராம்பு+சோம்பு+தனியா இவற்றை பொடித்த அதனுடன் பின் இஞ்சி +பூண்டு+காய்ந்த மிளகாய்+சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்த பின் அரிசி மற்றும் பருப்பினை உப்பு சேர்த்து கொரகொரப்பாகவும் கெட்டியாகவும் அரைக்கவும்.

*பின் அதனுடன் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

*எண்ணெய் காயவைத்து சிறு கரண்டி மாவினை எடுத்து ஊற்றி இருபக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இதனையே தோசை போல் செய்ய‌

*மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து மெல்லிய தோசைகளாக சுட்டெடுக்கவும்.

சுவையான மாலை நேர சிற்றுண்டி தயார்!!

12 பேர் ருசி பார்த்தவர்கள்:

vidhyanavin said...

Wow..... Thanks for honoring me Dear...

”தளிர் சுரேஷ்” said...

அருமை! பகிர்வுக்கு நன்றி!

great-secret-of-life said...

this is new to me looks so tempting

Hema said...

enga irundu pidikkiringa Menaga indha item ellam, semma super..

Jaleela Kamal said...

மிக அருமை

வல்லிசிம்ஹன் said...

எனக்கு வடைதான் வேணும். அருமையோ அருமை. இங்கெயே வாசனை வருதே ஹப்பா. நன்றி

shameeskitchen said...

மொறுமொறுப்பான வடை பார்க்கவே நல்லா இருக்கு.

Unknown said...

This is my place special... its taste was soooo yummy...

sri said...

Wow ..super vidya ....

Unknown said...

Hello Madam,

This is one of my favorite snack.. And I tried your recipe as mentioned above... The taste was awesome..but somehow I am unable to get the shape..when I pour the mixture into oil using ladle...it comes out as bonda...and not in the usual shape of Molaga vadai...any suggestions on this please ?

Unknown said...

Hi mam...i got the taste right but shape is somewhat like bonda... But Molaga vadai shape I am not getting... How to pour the mixture so that it forms Molaga vadai?

Menaga Sathia said...

@ Gayu Nagarajan
First thxs a lot for trying this recipe...batter should be pourable consistency.at a time add 1 or 2 tbsp water and try it.

01 09 10