Monday, 21 December 2015 | By: Menaga Sathia

மங்களூர் பன்/ வாழைப்பழ பூரி | Mangalore Buns / Banana Poori

print this page PRINT IT
வாழைப்பழம் நன்கு கனிந்துவிட்டால் மில்க் ஷேக்,கேக் ,மஃபின்ஸ் என செய்வோம்.அதே போல் இதில் பூரியும் செய்யலாம்.மங்களூரில் மிக பிரசித்தி பெற்ற டிபன் இது.

பொதுவாக இதனை மைதா மாவில் செய்வார்கள்,அதற்கு பதில் கோதுமைமாவில் செய்துருக்கேன்

இதற்கு நன்கு கனிந்த வாழைப்பழமே தேவைப்படும்.

தே.பொருட்கள்
கோதுமைமாவு -2 கப்
கனிந்த வாழைப்பழம்- 2
சர்க்கரை- 2 டேபிள்ஸ்பூன்
தயிர் -1/4 கப்
பேக்கிங் சோடா- 1 சிட்டிகை
சீரகம்- 1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்+பொரிக்க‌

செய்முறை

*மிக்ஸியில் வாழைப்பழம்+சர்க்கரை+தயிர் சேர்த்து நன்கு அடிக்கவும்.

*பாத்திரத்தில் கோதுமைமாவு+உப்பு+பேக்கிங் சோடா+சீரகம்+1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து,மசித்த வாழைப்பழ கலவையும் சேர்த்து பிசையவும்.


*நீர் சேர்த்து பிசைய தேவையில்லை.வாழைப்பழம்+தயிரில் உள்ள
 நீரே போதுமானது.

*பிசைந்த மாவினை குறைந்தது  4- 5 மணிநேரங்கள் ஊறவைக்கவும்.

*பின் சிறு உருண்டைகளாக எடுத்து பூரியாக தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*இதனை தேங்காய் சட்னி/சாம்பாருடன் பரிமாறலாம் அல்லது அப்படியே கூட சாப்பிடலாம்.

பி.கு

*மாவினை எவ்வளவு நேரம் ஊறவைக்கிறோமோ அந்த அளவுக்கு பூரி உப்பி,மிருதுவாக இருக்கும்.

*முதல்நாளே மாவினை பிசைந்து ப்ரிட்ஜில் வைத்து,மறுநாள் காலையில் கூட பூரியாக சுடலாம்.

*கோதுமைக்கு பதில் மைதாவிலும் செய்யலாம்.

*மாவு பிசையும் போது தண்ணீர் அவசியமில்லை.

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

great-secret-of-life said...

Perfectly done.. looks good

'பரிவை' சே.குமார் said...

ஆஹா...
பார்த்ததும் சாப்பிடணுமின்னு தோணுது.

balaamagi said...

சூப்பப்,,, செய்து பார்க்கிறேன்.

01 09 10