PRINT IT
ஒரிஜினல் ரெசிபியில் கொடுத்துள்ள அளவில் நான் பாதி அளவு போட்டு செய்துள்ளேன்.
ஏற்கனவே ஆல்கோல் சேர்க்காமல் கிறிஸ்துமஸ் கேக் செய்துள்ளேன்,அதை விட இந்த கேக் மிக சுவையாக இருக்கும்.
Recipe Source : Manjuseatingdelights
பழங்களை ஊறவைக்க
டிரை ப்ருட்ஸ்- 1 1/2 கப் ( டுட்டி ப்ருட்டி,முந்திரி,கோல்டன் மற்றும் கறுப்பு திராட்சை)
ரம்- 15 Cl (டிரை ப்ரூட்ஸ் முழ்குமளவு)
கேரமல் சிரப்- 2 டேபிள்ஸ்பூன் (2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை+1 டேபிள்ஸ்பூன் நீர்)
கேரமல் செய்ய
சர்க்கரை -3/4 கப்
நீர்- 1/2 டேபிள்ஸ்பூன்
சுடு நீர் -1/4 கப்+1/8 கப்
ஸ்பைஸ் மிக்ஸ்
பட்டை தூள்- 1/4 டீஸ்பூன்
கிராம்புதூள் -1/4 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
ஜாதிக்காய்த்தூள்- 1/4 டீஸ்பூன்
கேக் விதை அல்லது கேரவே சீட்ஸ்(Caraway Seeds) -1/4 டீஸ்பூன்
சுக்குதூள்- 1/4 டீஸ்பூன்
கேக் செய்ய
வெண்ணெய் -1/2 கப்
பொடித்த சர்க்கரை- 1 1/4 கப் + 1 டேபிள்ஸ்பூன்
முட்டை- 2
மைதா- 1 1/4 கப்
பேக்கிங் பவுடர்- 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா- 1/2 டீஸ்பூன்
உப்பு- 1 சிட்டிகை
வெனிலா எசன்ஸ்- 1டீஸ்பூன்
கேரமல் சிரப் -மேலே சொன்ன அளவில்
ஸ்பைஸ் மிக்ஸ் -மேலே சொன்ன அளவில்
ரம்மில் ஊறவைத்த டிரைப்ருட்ஸ் -மேலே சொன்ன அளவில்
செய்முறை
*டிரை ப்ருட்ஸினை ரம்மில் கேக் செய்வதர்க்கு 3 வாரங்களுக்கு முன்பாக ஊறவைக்கவும்.
*எவ்வளவு நாள் டிரைப்ருட்ஸ் ரம்மில் ஊறுகிறதோ அவ்வளவுக்கும் கேக் நன்றாக இருக்கும்.
*முதலில் டிரை ப்ருட்ஸில் ஊறவைக்க கேரமல் சிரப் செய்யவேண்டும்.
*2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையை பாத்திரத்தில் போட்டு உருகி நிறும் மாறும் போது 1 டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து கலக்கி ஆறவைக்கவும்.
*ஒரு பவுலில் டிரைப்ருட்ஸ்+கேரமல் சிரப்+ரம் சேர்த்து கலக்கி குறைந்தது 3 வாரங்கள் வரை ஊறவைக்கவும்.
இப்போழுது கேக் செய்வதற்கு கேரமல் செய்ய வேண்டும்.
*பாத்திரத்தில் சர்க்கரை+நீர் சேர்த்து மிதமான தீயில் சர்க்கரை கரையும் வரை கலக்கவும்.
*இப்போழுது சர்க்கரை கரைந்து கலர் மாறும்,பின் திக்கான கலராக மாரும் வெந்நீர் ஊற்றி (கவனமாக ஊற்றவும்)கலக்கி இறக்கி ஆறவிடவும்.
*ஆறியதும் திக்கான சிரப் போல இருக்கும்.
இப்போழுது கேக் செய்ய
*ஊறவைத்த டிரை ப்ருட்ஸினை ரம்மிலிருந்து வடிகட்டி சிறிது மைதா கலந்து வைக்கவும்.
*மைதா+உப்பு+ஸ்பைஸ் மிக்ஸ்+பேக்கிங் சோடா+பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு 3 முறை சலித்து வைக்கவும்.
*கேக் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி பட்டர் பேப்பர் வைத்து அதன் மீது வெண்ணெய் தடவி வைக்கவும்.
*அவனை 180°C 10 நிமிடம் முற்சூடு செய்யவும்.
*முட்டையின் மஞ்சள்+வெள்ளை கருவினை தனியாக பிரிக்கவும்.
*வெள்ளை கருவுடன் 1 டேபிள்ஸ்பூன் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு நுரை பொங்கும் வரை பீட்டரால் அடிக்கவும்.
*வேறொரு பவுலில் வெண்ணெய்+சர்க்கரை சேர்த்து பீட்டரால் நன்கு கரையும் வரை கலக்கவும்.
*சர்க்கரை கரைந்ததும் மஞ்சள் கரு சேர்த்து அடிக்கவும்.
*பின் மைதா கலவை+ஆறவைத்த கேரமல் + வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
*கடைசியாக முட்டையின் வெள்ளைகருவினை சேர்த்து மிருதுவாக கலக்கவும்.
*பின் டிரை ப்ருட்ஸினை சேர்த்து கலக்கி கேக் பானில் ஊற்றி 50 -55 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.
*இடையே கேக் வேகும் போது மேல் பாகம் தீய்ந்து போகிறமாதிரி இருந்தால் அலுமினியம் பேப்பரால் மூடி பேக் செய்யவும்.
*கேக் வெந்த பிறகு டிரை ப்ருட்ஸில் ஊறிய ரம்மினை சிறிது பரவலாக ஊற்றவும்.
*கேக் நன்றாக ஆறிய பிறகு கேக்கினை எடுத்து அலுமினியம் பாயில் வைத்து மூடவும்.
கவனிக்க வேண்டியவை
*கேக் பாத்திரத்தில் கண்டிப்பாக பட்டர் பேப்பர் அடியிலும்,சுற்றிலும் வைத்து வெண்ணெய் தடவி கலவையை ஊற்றவும்.நான் பட்டர் பேப்பர் போட மறந்துவிட்டேன்,அதனால் கேக் ஆரிய பிறகும் சரியாக எடுக்கவரவில்லை.
*இந்த கேக்கினை நமக்கு தேவையான நாளுக்கு முன்பாக செய்வது நல்லது,எவ்வளவுக்கெவ்வளவு ரம்மில் ஊறுகிறதோ கேக் அவ்வளவு சுவையாக இருக்கும்.
*தினமும் கேக்கினை டிரை ப்ருட்ஸில் ஊறிய ரம்மில் ப்ரெஷ்ஷ்ஹால் தடவி விடவும்.
*டிரை ப்ருட்ஸினை ரம்மில் ஊறவைக்க மறந்துவிட்டால் பரவாயில்லை,2 அல்லது 3 நாட்கள் ஊறினாலும் போதும்.
*இதில் வேண்டுமானால் பொடித்த நட்ஸ்கலும் சேர்க்கலாம்.
* ரம்மிற்கு பதில் ப்ராந்தியும் பயன்படுத்தலாம்
*டிரை ப்ருட்ஸிலும் கேரமல் சேர்த்து ஊறவைப்பது நன்றாக இருக்கும்.
1 பேர் ருசி பார்த்தவர்கள்:
menaga cake arumai pa..Ipove sapidanum pola iruku
Post a Comment