PRINT IT
இந்த துவையல் 30 நாள் வெஜ் லஞ்ச் மெனு குறிப்பில் போட்டுள்ளேன்.செய்வதற்கு மிக சுலபமானது,சுவையானதும் கூட.காரகுழம்பிற்கு பெஸ்ட் காம்பினேஷன்.
தே.பொருட்கள்
தேங்காய்த்துறுவல்- 1/2 கப்
வெ.உ.பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -5
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
புளி -சிறிய நெல்லிக்காயளவு
உப்பு -தேவைக்கு
நல்லெண்ணெய் -1 டீஸ்பூன்
செய்முறை
*கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய்+பெருங்காயம்/பெருங்காயத்தூள்+உளுந்ததம்பருப்பு இவற்றை தனிதனியாக வறுத்தெடுத்து ஆறவைக்கவும்.
*மிக்ஸியில் காய்ந்த மிளகாய்+பெருங்காயம்+உளுத்தம்பருப்பு சேர்த்து முதலில் பொடித்த பின் தேங்காய்த்துறுவல்+புளி+உப்பு+ 1 டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
2 பேர் ருசி பார்த்தவர்கள்:
My favorite. I like it with lemon rice
நமக்கும் தேங்காய்க்கும் வெகு தூரம்...
தேங்காய் துவையல் இப்படிச் செய்தால் கொஞ்சமே கொஞ்சம் எடுப்பேன்....
குழந்தைகளும் அப்படியே நாந்தான்... இருவருக்கும் தேங்காய் துவையல் பிடிக்காது...
நல்ல பகிர்வு சகோதரி...
Post a Comment