Monday, 4 January 2016 | By: Menaga Sathia

நெய் பாயாசம் / Nei Payasam ( Sharkara Payasam ) /Aravana Payasam | Kerala Recipe

print this page PRINT IT
இதனை சர்க்கரை பாயாசம் / அரவனை பாயாசம் /பகவதி சேவை பாயாசம் எனவும் சொல்வார்கள்.

இது நாம் செய்யும் சர்க்கரை பொங்கல் தான்,ஆனால் இதில் அரிசியை மசிக்காமல் செய்வார்கள்,மேலும் இதில் விரும்பினால் மட்டும் முந்திரி திராட்சை சேர்க்கலாம்.

நெய் அதிகமாகவும்,தேங்காயை பல்லாக நறுக்கியும் சேர்ப்பார்கள்.மேலும் இதில் கேரளா பச்சரிசியில் செய்வார்கள்.

தே.பொருட்கள்

பச்ச‌ரிசி -1/2 கப்
நீர்- 1 கப்
நெய் -1/4 கப்
வெல்லம்- 1 கப்
ஏலக்காய்த்தூள்- 1/8 டீஸ்பூன்
சுக்குப்பொடி- 1/8 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய தேங்காய்ப்பல் -1/8 கப்

செய்முறை

*குக்கரில் அரிசி+நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவிடவும்.

*பாத்திரத்தில் வெல்லம்+சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் வெல்ல நீரை வேகவைத்த அரிசியில் சேர்த்து கொதிக்கவிடவும்.

*இடையே 1/8 கப் நெய்யினை சிறிது சிறிதாக  சேர்க்கவும்.

*பாயாசம் கெட்டியாக வரும் போது ஏலக்காய்த்தூள்+சுக்குப்பொடி சேர்த்து இறக்கவும்.

*மீதமுள்ள நெய்யில் தேங்காய்ப்பல்லினை பொன்னிறமாக வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.

பி.கு

*வெல்லம்+நெய் அதிகம் சேர்த்திருப்பதால் இதனை சிறிதளவே சாப்பிடமுடியும்.

*பாயாசம் ஆறிவிட்டால் லேசாக சூடு செய்து பரிமாறவும்.

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

Abi Raja said...

அக்கா சூப்பரா இருக்கு.. எனக்கு கொஞ்சம் பார்சல் ப்ளீஸ்..

Unknown said...

Delicious and tempting. Very easy to prepare.

'பரிவை' சே.குமார் said...

ஆஹா... நமக்கு ஒரு பாத்திரத்தில் வரட்டும்...
பாயாசம் பிடிக்காது என்றாலும் சகோதரி செய்ததாயிற்றே...

01 09 10