Sunday, 11 October 2009 | By: Menaga Sathia

கோதுமை மாவு சுண்டல் /Wheat Flour Sundal

தே.பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
கேரட் + மாங்காய்த் துறுவல் - 1 1/2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்


செய்முறை :

*கோதுமை மாவில் உப்பு+நெய்+கரம் மசாலா+மிளகாய்த்துள் சேர்த்து ஒன்றாக கலந்து நீர் விட்டு சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசையவும்.

* அதை சிறு உருண்டைகளாக உருட்டி பட்டன்போல் லேசாக தட்டிக் கொள்ளவும்.
*ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு அதில் பட்டன் உருண்டைகளைப் போட்டு,வெந்து லேசாக எழும்பி வரும்போது எடுத்து வடியவிடவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கேரட்+மாங்காய்த் துறுவல் சேர்த்து உருண்டையில் கொட்டவும்.

*ஈசி சுண்டல் ரெடி.

கவனிக்க:

*உருண்டையாக உருட்டி போட்டால் வேக லேட்டாகும்.அதனால் பட்டன்போல் தட்டிப் போட்டால் 5 நிமிடத்தில் அனைத்தும் உருண்டைகளும் மேலே எழும்பி வரும்.

*விருப்பப்பட்டால் தேங்காய்த்துறுவலும் சேர்க்கலாம்.
Thursday, 8 October 2009 | By: Menaga Sathia

பொங்கல் / Sweet Pongal

தே.பொருட்கள்:

பாஸ்மதி - 1 கப்
வெல்லம் -1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை
பால் - 1/2 கப்
முந்திரி,திராட்சை = தேவைக்கு
நெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 2

செய்முறை :

*அரிசியை கழுவி 1 1/2 கப் நீர்+பால் சேர்த்து வேக வைக்கவும்.


*வெல்லத்தை சிறிது நீர்விட்டு காய்ச்சி மண்ணில்லாமல் வடிகட்டவும்.

*முக்கால் பாகம் அரிசி வெந்தவுடன் காய்ச்சிய வெல்லம்+உப்பு சேர்த்து மேலும் குழைய வேகவைக்கவும்.


*வெந்ததும் இறக்கி ஏலக்காயை தட்டிப் போடவும்.

*நெய்யில் முந்திரி,திராட்சை வறுத்து பொங்கலில் போடவும்.மீதமுள்ள நெய்யையும் அதன்மேல் ஊற்றி இறக்கவும்.
Tuesday, 6 October 2009 | By: Menaga Sathia

வாழைப்பூ+வெள்ளரிக்காய் பச்சடி

தே.பொருட்கள்:

சுத்தம் செய்து பொடியாக அரிந்த வாழைப்பூ - 1/2 கப்
துருவிய வெள்ளரிக்காய் - 1/2 கப்
தயிர் - 125 கிராம்
சின்ன வெங்காயம் - 4
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை -சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு

செய்முறை :

*வெங்காயம்+கொத்தமல்லித்தழை+தக்காளி விதை நீக்கவும் பொடியாக நறுக்கவும்.

*வாழைப்பூவையும்,வெள்ளரிக்காயையும் கலக்கவும்.

*தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து வாழைப்பூ கலவையில் கொட்டவும்.

*பறிமாறும் போது உப்பு+தயிர்+மல்லித்தழை+வெங்காயம்+தக்காளி சேர்த்துக் கலக்கவும்.

கவனிக்க:

வாழைப்பூவை பச்சையாக சாப்பிடுவதால் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் மறையும்.கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல மருந்து.
Sunday, 4 October 2009 | By: Menaga Sathia

மாங்காய் இஞ்சி ஊறுகாய்

தே.பொருட்கள்:

மாங்காய் இஞ்சி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
வர மிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு

செய்முறை :

* மாங்காய் இஞ்சியை கழுவி தோல் சீவி நறுக்கவும்.

*அதனுடன் உப்பு+கீறிய பச்சை மிளகாய்+எலுமிச்சை சாறு சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பின் தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து மிளகாய்தூள் சேர்த்து உடனே ஊறுகாயில் கொட்டவும்.

*இதை உடனே செய்து சாப்பிடலாம்.

பி.கு:

மாங்காய் இஞ்சி பார்ப்பதற்க்கு இஞ்சி போலவே இருக்கும்,சுரண்டிப் பார்த்தால் மாங்காய் வாசனை வரும்.
Saturday, 3 October 2009 | By: Menaga Sathia

புரட்டாசி சனிக்கிழமை


இன்று புரட்டாசி 3வது சனிக்கிழமை.அனைவரும் பெருமாளுக்கு "தளியல்" போடுவது வழக்கம்.முடியாதவர்கள் 1வது,5வது சனிக்கிழமையில் போடுவாங்க.பெருமாள் பாயாசப் பிரியர் என்பதால் பாயாசம் செய்வது முக்கியமானதாகும்.
இன்று நான் செய்த தளியல் படையல்கள் :

உப்பு போடாத சாதத்தில் வெல்லம்,தயிர் சேர்த்த சாதம்,பொங்கல்,எலுமிச்சை சாதம்,புளி சாதம்,தயிர் சாதம் (படம் மிஸ்ஸிங் கொஞ்சமா செய்த்தால் காலியாயிடுச்சு), தேங்காய் சாதம்,காராமணி சுண்டல்,உருளை வறுவல்,பாசிப்பருப்பு பாயாசம்,முருங்கைக் கீரை பிரட்டல்,கொள்ளு வடை,அப்பளம்,சாம்பார்.
Thursday, 1 October 2009 | By: Menaga Sathia

முளைப்பயிறு பணியாரம்

தே.பொருட்கள்:

ப்ரவுன் ரைஸ் - 1/2 கப்
முளைக்கட்டிய சென்னா,பாசிப்பயறு - தலா 1/2 கப்
இஞ்சி - 1 சிறுதுண்டு
காய்ந்த மிளகாய் - 2
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்

செய்முறை :

*அரிசியை 2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*அதனுடன் காய்ந்த மிளகாய்+உப்பு+முளைப்பயறு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

*தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து மாவில் கலக்கவும்.
* பணியார குழியில் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

விருதுகள்.....

தோழி ப்ரியாராஜ் அவர்கள் எனக்கு 4 விருதினை கொடுத்து சந்தோஷப்படுத்திருக்காங்க.அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!

இந்த விருதினை சஞ்சய்காந்தி,ஷஃபிக்ஸ்,ஜமால்,பாயிஷா,நவாஸுதீன்,கோபி,இராகவன்,
ராஜ்,சிங்கக்குட்டி,சந்ரு,ஜலிலாக்கா,சாருஸ்ரீராஜ்
இவர்களுக்கு வழங்குகிறேன்
இந்த விருதினை பிரியமுடன் வசந்த்,மலிக்கா,சம்பத்குமார்,தேவன்மாயம்,சூர்யாகண்ணன்,திவ்யா விக்ரம்,சக்தி இவர்களுக்கு வழங்குகிறேன்.

இந்த விருதினை பிரியமுடன் வசந்த்,ஹர்ஷினி அம்மா,அம்மு,இயற்கை,சுரேஷ் குமார்,லஷ்மி வெங்கடேஷ்,ப்ரியா இவர்களுக்கு வழங்குகிறேன்
இந்த விருதினை ப்ளாக் பாலோவர்ஸ் அனைவருக்கும் கொடுக்கிறேன்
01 09 10