சமையலறை டிப்ஸ்
தோசை வார்க்கும் முன் ஒரு கரண்டி தேங்காய்ப்பால் கலந்து வார்த்தால் மிகவும் ஸாப்ட்டாக இருக்கும்.
தேங்காய் மூடியில் உப்பைத் தேய்த்து ஃப்ரிட்ஜில் வைத்தால் கெடாது.
சீறுநீரகக்கல் கரைய தினமும் 2 பேரிக்காயை சாப்பிடவும்(அ)காலை மாலை 2 வேளையும் 2 துண்டு அன்னாசிப்பழம் சாப்பிடவும்.
சூடாயிருக்கும் தவாவில் கொஞ்சம் மோர் விட்டு வைத்து பின்,ஆறியதும் தேய்த்தால் பிசுக்கு போய் விடும்.
சூடாக வடித்த அரிசிக் கஞ்சியில் சிறிதளவு பனங்கற்கண்டை சேர்த்து குடித்தால் வறட்டு இருமல் நீங்கும்.
பிரஷர் குக்கர் நீண்ட காலம் நீடித்து உழைக்க நன்றாக ஆவி வந்த பிறகே வெயிட்டைப் போட வேண்டும்.
பசை,கோந்து முதலியவை கட்டிவிட்டால் சிறிது வினிகரை கலந்து இறுக்கம் தளர்ந்து மீண்டும் உபயோகப்படுத்தலாம்.
வடைக்கு அரைத்த பின் மாவைச் சிறிது நேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்த பின் எண்ணெயில் பொரித்தால் மொறுமொறு என்று சுவையாக இருக்கும்.
பூஜைவிளக்கு,தாம்பளம் போன்றவைகளை புளிவைத்து தேய்த்து பின்னரும் நல்ல நிறம் வரவில்லையெனில் விபூதியைக் கொண்டு தேய்க்கப் பளபளப்பாகும்.
சோம்பை பொடி செய்து தேனில் கலந்து 21 நாள் சாப்பிட்டு வர சிந்தனை சக்திப் பெருகும்.
6 பேர் ருசி பார்த்தவர்கள்:
Useful Information, Thanks
இக்பால் தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
உங்கள் டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கு மேனகா
நன்றி பாயிசா!!!
டியர் மேனகா தேங்காய் வங்கியதும் உடனே அதை பத்தை போட்டோ, அல்லது சின்ன சின்னதாக கட் செய்தும் கூட ஒரு கவரில் போட்டு பிரீஜரில் வைத்து விட்டால் எவ்வளவு நாள் ஆனாலும் அப்ப்டியே பிரெஷாக இருக்கும்.
மற்றபடி அனைத்து டிப்ஸும் சூப்பர்.
ஜலீலா
ஜலிலாக்கா உங்கள் கூடுதலான டிப்ஸ்க்கு மிக்க நன்றி!!
Post a Comment