Thursday, 6 October 2011 | By: Menaga sathia

காஞ்சிபுரம் இட்லி & தேங்காய் சட்னி /Kancheepuram Idly &Coconut Chutney

காஞ்சிபுரம் இட்லி செய்ய தே.பொருட்கள்

பச்சரிசி - 1 1/2 கப்
புழுங்கலரிசி - 1 1/2 கப்
உளுந்து - 1 கப்
உப்பு - தேவைக்கு
சுக்குப்பொடி - 1 டீஸ்பூன்

தாளிக்க

நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
கரகரப்பாக பொடித்த மிளகு சீரகம் - தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
முந்திரி - விரும்பினால்

 செய்முறை
*இட்லி செய்ய கொடுத்துள்ள பொருட்களை உப்பு+சுக்குப்பொடி தவிர அரிசி+உளுந்து தனித்தனியாக ஊறவைத்து அரைத்து உப்பு+சுக்குப்பொடி சேர்த்து புளிக்கவைக்கவும்.

*மாவு புளித்ததும் நெய்யில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப்போட்டு தாளித்து சேர்க்கவும்.நல்லெண்ணெயும் ஊற்றி மாவை நன்கு கலக்கவும்.
*இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

சட்னி செய்ய தே.பொருட்கள்

தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
புளி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 1
பூண்டுப்பல் - 1
உப்பு - தேவைக்கு

தாளிக்க

எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை,பெருங்காயம் - சிறிது

செய்முறை
*அனைத்தையும் ஒன்றாக அரைத்து தாளித்து சேர்க்கவும்.

29 பேர் ருசி பார்த்தவர்கள்:

athira said...

அடடா மேனகா.... பூப்போல இட்லி, இதுக்கு சட்னியே தேவையில்லை, சும்மா சாப்பிடலாம்போல இருக்கே... சூப்பர்.

RAKS KITCHEN said...

Looks like idlies are cotton soft,wonderful combo!

MANO நாஞ்சில் மனோ said...

அடடா கடுப்பு ஏத்துரீன்களே, ஊரில் இருந்தால் வீட்டம்மா'கிட்டே பண்ணச்சொல்லி சாப்பிடலாம், ம்ஹும் பெருமூச்சுதான் வருது போங்க படத்தை பார்த்துட்டு....!!!

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க மேஜர் சுந்தர் ராஜன் ரசிகையா? டைட்டில்ல இங்கிலீஷ்லஒருக்கா, தமிழ்ல மறுக்கா? ஹா ஹா சும்மா ஜோக்!!!

சி.பி.செந்தில்குமார் said...

சாதா இட்லியை காஞ்சி புரத்தில் செய்தால் அது காஞ்சிபுரம் இட்லியா? டவுட்டு

angelin said...

காஞ்சிபுரம் இட்லி சூப்பர் மேனகா .இது நாள் வரை செய்ததில்லை .கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்கிறேன்

angelin said...

அப்புறம் இதை கண்டிப்பா உங்ககிட்ட சொல்லணும் .உங்க ரெசிபி asparagus தேங்க போட்டு கூட்டு செஞ்சேன் .ரொம்ப டேஸ்டா வந்தது .thanks .

Vandana Rajesh said...

The idlis look so soft and fluffy.

ஆயிஷா அபுல் said...

காஞ்சிபுரம் இட்லி சூப்பர் மேனகா

MyKitchen Flavors-BonAppetit!. said...

Soft and yumm idli with superb chutney dear.Luvvvvvvv it.

Premalatha Aravindhan said...

wow am really hungry seeing this delicious combo...yum.

San said...

Cannot get so moist idlis like this anywhere other than home made. The combo with coconut chutney is more likely the winner of people choice.

Mano Saminathan said...

காஞ்சிபுரம் இட்லி பார்க்கவே ரொம்ப பிரமாதமாக இருக்கு மேனகா!

asiya omar said...

பார்க்கவே சூப்பர்.விண்டு விண்டு வாயில் போட்டால் பஞ்சாக இருக்கே.

Priya said...

Kancheepuram idlyum,chutneyum superaa irruku Menaga, pasikuthu paathathum..

ஸாதிகா said...

வாவ்..அருமையாக உள்ளது.இதுவரை சாப்பிட்டதில்லை.கண்டிப்பாக செய்கிறேன் மேனகா.

சசிகுமார் said...

அக்கா இட்லி சூப்பர்....

S.Menaga said...

@சி.பி செந்தில்குமார்
//சாதா இட்லியை காஞ்சி புரத்தில் செய்தால் அது காஞ்சிபுரம் இட்லியா? டவுட்டு// செந்தில் கவுண்டமணிக்கிட்ட கேள்வி பேட்பது போல இருக்கு..ஹி..ஹி..

@ஏஞ்சலின்
செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி ஏஞ்சலின்!!

ஹுஸைனம்மா said...

காஞ்சிபுரம் இட்லி இவ்வளவு சிம்பிளா!! செஞ்சிடலாம்.

Aruna Manikandan said...

parkave supera irruku......:)

Uma said...

I love idly so much and yet to taste the kanchipuram style. Lovely. Here, sukku powder is same as ginger powder?

Cheers,
Uma

Kalpana Sareesh said...

indha thengai chutney romba super will try..

S.Menaga said...

@ Uma
//Here, sukku powder is same as ginger powder?
//

Sukku Powder is Dry Ginger Powder Uma,which is available in all shops.Hope it will helpful for u.

Jay said...

Mmmm...flavorful n lipsmacking combo..:P
Tasty Appetite

Priya Sreeram said...

tht's a lovely combo and the idlis just look soft n fluffy

மழை said...

hm Try panren:)

Jaleela Kamal said...

அந்த ரெட் சட்னியுடன் இட்லி ஆஹா சூப்பர்

அமைதிச்சாரல் said...

அசத்தல் மேனகா.. ரொம்ப நாளா எதிர்பார்த்த குறிப்பு.

பித்தனின் வாக்கு said...

kanchipuram idili super menaga.

oru thattu idiliya appadiye oru kinnam niraiya idili milakai podiyum nalla ennaiyum kalanthu, ithai intha idiliyoda pisaithu sapitta irukkum sukam and taste thani.

01 09 10