1.உதடுகள் உலர்ந்து போனால் திரும்பத்திரும்ப நாவால் தடவக்கூடாது.அப்படிச் செய்தால் உதட்டு வெடிப்பு இன்னும் அதிகமாகும்.
2.சாப்பிட்ட பிறகு உதடுகளை கனத்த டவல்,கனமான கர்ச்சீப் போன்றவை கொண்டு அழுந்தத் துடைக்ககூடாது.இதனால் இயற்கையான உதட்டழுகு குறைந்துவிடும்.
3.உதடுகள் காய்ந்திருந்தால் பற்களாலோ,நகத்தாலோ இழுத்து தோலை உரிக்ககூடாது.
4.குளிர்காலத்தில் உதடுகளின் மீது பாலாடையைத் தடவினால் உதடுகள் உலராமல் மிருதுவாக இருக்கும்.
5. 7 அல்லது 8 ரோஜா இதழ்களுடன் சிறுதுளி பாதாம் எண்ணெய் சேர்த்து அரைத்து உதடுகளின் மீது தினமும் பூசி வந்தால் உதடுகளுக்கு இயற்கையான நிறம் கிடைக்கும்.நிஜமாகவே உதடுகள் ரோஜா இதழ்கள்போல் மின்னும்.
2 பேர் ருசி பார்த்தவர்கள்:
உதட்டை பாதுகாக்கும் டிப்ஸ் ரொம்ப அருமை..
இன்னும் நிறைய டிப்ஸ் கொடுத்து அசத்துங்க..
ரொம்ப நன்றி பாயிசா.
Post a Comment