தே.பொருட்கள்
கோதுமை ரவை - 1 கப்
சக்கரை - 1 கப்
தண்ணீர் - 2 1/2 கப்
உப்பு - 1 பின்ச்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி,திராட்சை - தே.அளவு
ஏலக்காய் - 1
செய்முறை
1. நான் ஸ்டிக் கடாயில் நெய்விட்டு மந்திரி,திராட்சை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.ஏலக்காயை பொடித்துக்கொள்ளவும்
2. வேறொறு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க விடவும்.
3.முந்திரி வறுத்த அதே கடாயில் நெய்விட்டு கோதுமை ரவையை வாசம் வரை நன்கு வறுக்கவும்.
4.பின் சிறிது சிறிதாக கொதிக்கும் தண்ணீரை சேர்க்கவும்.ரவை வெந்ததும் உப்பு,சக்கரை
சேர்க்கவும்.
5.நன்கு கிளறி சுருண்டு வரும் போது முந்திரி,திராட்சை,ஏலக்காய் சேர்த்து கிளறி இறக்கவும். கோதுமை ரவைகேசரி தயார்.
8 பேர் ருசி பார்த்தவர்கள்:
ஆஹா இங்கேயும் ஈஸி ரவா கேசரியா!!!!!
இங்கே உங்க முதல் குறிப்பு நல்லா இனிப்பாவும், ஆரோகியமானதாவும் இருக்கு.. வாழ்த்துகள்
ஹாய் மலர் உங்கள் பின்னூட்டம் எனக்கு மகிழ்ச்சியும்,உற்சாகமும் அளிக்கிறது.மிக்க நன்றிப்பா.
ஆஹா அருமையாக இருக்கு. முதல் குறிப்பே இனிப்புடன் ஆரம்பமா?
-faizakad
ஹாய் பாயிசா ரொம்ப நன்றி.செய்துப் பார்த்துட்டு சொல்லுங்க எப்படி இருந்தது என்று.
கேசரியினை நான் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது .
ஹாய் பாயிசா நல்லாயிருந்ததா,செய்து பார்த்து கருத்து சொன்னதற்கு ரொம்ப நன்றிப்பா.
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
நன்றி உலவு.காம்!!
Post a Comment