தே.பொருட்கள்:
நறுக்கிய வாழைப்பூ துண்டுகள் - 1 கப்
மாங்காய் - 1/4 கப்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய்,உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது.
காய்ந்த மிளகாய் - 5
செய்முறை :
* நறுக்கிய வாழைப்பூ துண்டுகளை வேகவைத்து ,நீரை வடித்துக் கொள்ளவும்.
* இத்துடன் மாங்காய்,காய்ந்த மிளகாய்,உப்பு சேர்த்து அரைக்கவும்.
*வெந்தயத்தை வெறும் கடாயில் லேசாக வறுத்துப் பொடிக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,பெருங்காயத்தூள்,வெந்தயப்பொடி சேர்த்து தாளிக்கவும்.
* இதனுடன் அரைத்த விழுது சேர்த்துக் கிளறி கெட்டியாக வந்ததும் இறக்கவும்.
*நல்ல ருசியாக இருக்கும் இந்தத் தொக்கு.
பி.கு: மாங்காய்க்கு பதில் புளி சேர்த்து அரைக்கலாம்.
2 பேர் ருசி பார்த்தவர்கள்:
ஹாய் மேனகா எங்கு பார்த்தாலும் வாழைபூ ரெசிப்பியாக இருக்கு..
உங்கள் சமையல் குறிப்புகள் எல்லாமே புதுசா இருக்கு.. இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்
நன்றி பாயிசா!!!
Post a Comment