பாசிப் பருப்பு - 1/2 கப்
பொன்னாங்கன்னிக் கீரை - சிறு கட்டு
பூண்டு - 5 பல்
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 1
உப்பு -தேவைக்கேற்ப
தாளிக்க :
வடகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
மோர் மிளகாய் - 2
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
*பருப்பை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
* அதில் பூண்டு, நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு வேக விடவும்.
*பருப்பு முக்கால் பாகம் வெந்ததும் கீரையைப் போட்டு 10 நிமிடம் வேகவிடவும்.கீரை வேகும் போது மூடக்கூடாது,மூடினால் கருத்துப் போய்விடும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளிக்கவும்.
*ஆறியதும் கீரையுடன் தாளித்தவைகளையும் கொட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
*இப்போழுது சுவையான கீரைக் கடைசல் தயார்.
12 பேர் ருசி பார்த்தவர்கள்:
தாளிக்க வடகம் என்று போட்டு இருங்கிங்களே என்ன வடகம் சேர்க்கனும்?
ரொம்ப நல்ல இருக்கு.. கீரைப் பருப்பு கடைசல்
http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&view=article&id=2016:2009-03-09-00-14-05&catid=40:--&Itemid=209.ஹாய் பாயிசா இந்த லிங்க்ல இருக்குப்பா வடகம் குறிப்பு.செய்து பாருங்க.எந்த கீரையிலும் செய்யலாம்.
ஓ... நன்றி மேனகா.. நாங்கள் வடகமெல்லாம் போட்டு தாளிக்க மாட்டோம். அடுத்த முறை ட்ரை பண்ணி பார்க்கிறேன்
மேனகா இன்று இந்த கீரையினை செய்தேன். ரொம்ப ருசியாக இருந்தது. இன்னும் நிறைய ரெசிப்பி கொடுங்க.
ரொம்ப நன்றி பாயிசா.உடனே செய்துப் பார்த்து பின்னுட்டம் தந்ததற்க்கு சந்தோஷமாகவும் இருக்கு.
செய்துடுவோம்!
சகோதரர் ஜமால் தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றீ!!செய்துபார்த்துட்டு சொல்லுங்க.
ஹாய் மேனகா,
இன்று இந்த கடைசல் செய்தேன்..தேங்காய் துகையல் சாதத்திற்கு பக்க உணவாக..நல்லா இருந்துச்சு..நன்றி..
அன்புடன்,
அம்மு.
செய்து பார்த்து பின்னுட்டம் அளித்ததற்க்கு நன்றி அம்மு!!
எங்களுக்கு பொன்னாங்கன்னிக்கீரை கிடைக்கிறதில்லை. Looks Good!!!!
அருமையான இடுகை நன்றி மேடம்!!
(ஆமா உங்க கருத்துரையில்,தேதி, வருஷம் எல்லாம் மாறியிருக்கே கவனித்தீர்களா!! எதனால்?)
நன்றி தெய்வசுகந்தி!!
நன்றி சகோ!! இது போன வருடம் பதிவு செய்த இடுகை..இப்பதான் தமிலீஷில் சப்மிட் செய்தேன்...
Post a Comment