* சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
*கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.
*2 தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
*2 தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.
*2 வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
*சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.
*ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
5 பேர் ருசி பார்த்தவர்கள்:
ஆகா! நல்ல பயனுள்ள குறிப்புகள்!!
நல்ல பயனுள்ள டிப்ஸ்
ஜோதிபாரதி,பாயிசா மிகவும் நன்றி!!
டியர் மேனகா கலக்குங்க, ரொம்ப நல்ல தகவல்.
ஜலீலா
ஹாய் ஜலிலாக்கா உங்களிடமிருந்து கருத்தா ரொம்ப சந்தோஷமாயிருக்கு.நன்றி ஜலிலாக்கா!!
Post a Comment