வாழைப்பூ முருங்கைக்கீரை துவட்டல்
தே.பொருட்கள்:
சிறிய வாழைப்பூ - 1
முருங்கைக்கீரை - 1 கட்டு
வெங்காயம் - 1 சிறியது
எண்ணெய்,உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 1/2 கப்
தாளிக்க:
கடுகு+உளுத்தம்பருப்பு = 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
* வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
*முருங்கைக்கீரையை ஆய்ந்து அலசி வைக்கவும்.
*வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய்விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து வெங்காயத்தை வதக்கவும்.
*வதங்கியதும் வாழைப்பூவை போட்டு உப்பு + 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
*முக்கால் பதம் பூ வெந்ததும் கீரையைப் போடவும்.மூடகூடாது,மூடினால் கீரை கருத்துவிடும்.
*தண்ணீர் வற்றி நன்கு வெந்ததும் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
3 பேர் ருசி பார்த்தவர்கள்:
en husband ku piditha dish.. naan iral poothu seyven..neega keerai pothu seythu irrukeega super...
நல்ல சைடு டிஷ்
பாயிசா எனக்கும்,ஹஸ்க்கும் ரொம்ப பிடிக்கும் இந்த டிஷ்,நான் எறால் போட்டு செய்ததில்லை.விரதம் முடிந்ததும் செய்து பார்க்கிறேன்.நீங்களும் இது மாதிரி செய்து பாருங்க.நன்றாக இருக்கும்.
கவிதா தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!!
Post a Comment