தே.பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
சிறிய வெள்ளை முள்ளங்கி - 1
உப்பு+எண்ணெய் - தே.அளவு
நெய் - 1 டீஸ்பூன்.
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
கரம்மசாலா - 1/4 தேக்கரண்டி.
கொத்தமல்லித் தழை - சிறிது.
செய்முறை:
*முள்ளங்கியை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.அதை நெய்விட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
*மாவு+உப்பு+தூள்வகைகள்+முள்ளங்கி+கொத்தமல்லித் தழை அனைத்தும் ஒன்றாக கலந்து தண்ணிர் தெளித்து கெட்டியாக பிசையவும்.
*1 மணிநேரம் நன்கு ஊறியதும் சப்பாத்திகளாக சுட்டெடுக்கவும்.
*சாம்பார்,குருமாவுடன் சூடாக பரிமாறவும்.
*சர்க்கரை நோயாளிகளுக்கு முள்ளங்கி சப்பாத்தி மிகவும் நல்லது.
7 பேர் ருசி பார்த்தவர்கள்:
நான் இத விரும்பி சாப்பிட்டு இருக்கேனே
(ஆனா பரோட்டாவில் - மூளி பரோட்டா)
ஆமாம் ஜமால் இதை பரோட்டா தான் செய்வாங்க,ஆனா எனக்கு பரோட்டா சரியா வராது அதான் பரோட்டா சப்பாத்தியாகிடுச்சு ஹி ஹி!!
இது கூட நல்லாதான் இருக்கு முள்ளங்கி சப்பாத்தி மேனகா.. நான் சாபிட்டது கிடையாது. இனி ட்ரை பண்ணி பார்க்கிறேன்
செய்து பாருங்க பாயிசா,நன்றாக இருக்கும்.
good recipe....
நல்ல ரெசிபி!!
நன்றி கௌசல்யா!!
நன்றி தெய்வசுகந்தி!!
Post a Comment