Thursday, 23 April 2009 | By: Menaga Sathia

புதினா துவையல்


தே.பொருட்கள்:

புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - 1 கட்டு
கறிவேப்பில்லை - 3 இணுக்கு
இஞ்சி - சிறுதுண்டு
தாளிப்பு வடகம் - 2 டேபிள்ஸ்பூன்
வெ.உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் - தேவைக்கு
காய்ந்த மிளகாய் - 4
புளி - 1 கோலிக்குண்டளவு

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு = 11/2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு

செய்முறை:

* புதினா,கொத்தமாலி,கறிவேப்பிலை அனைத்தும் சுத்தம் செய்துக் கொள்ளவும்.

*வெறும் கடாயில் உளுத்தம்பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவும்.

*இஞ்சி,காய்ந்தமிளகாயை எண்ணெயில் வறுக்கவும்.

*வடகத்தை எண்ணெயில் பொரிக்கவும்,பின் புதினாவை லேசாக வதக்கவும்.

*ஆறியதும் வதக்கிய அனைத்து பொருட்கள்+உப்பு+புளி+கறிவெப்பிலை+கொத்தமல்லி சிறிது நீர் தெளித்து விழுதாக கெட்டியாக அரைக்கவும்.

*கறிவேப்பிலை,கொத்தமல்லியை வதக்ககூடாது.பச்சையாகதான் அரைக்கனும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்துக் கிளறவும்.

*எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி ஆறவைத்து உபயோக்கிக்கலாம்.

பி.கு:
அனைத்து வகை சாதம்,இட்லி,தோசைக்கு ஏற்றது.ஒரு வாரம் வரை ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

6 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

மேனு நல்லா இருக்கு சீக்கிரம் இதயும் செய்து பார்த்துட்டு சொல்றேன்..புதினா ஐட்டம்ஸ் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்..ஆனால் இதுலயும் வழக்கம் போல தாளிப்புவடகம்னு சொல்லி இருக்கீங்க..அது இல்லாம பண்ணலாம் இல்லையா?

Menaga Sathia said...

மாமி நீங்களா,செய்துப் பாருங்க எனக்கு ரொம்ப பிடிக்கும்பா.வடகமில்லாமல் இதுவரை எங்கம்மா செய்ததில்லைப்பா.அது இல்லாமல் செய்துப்பாருங்க.நீங்க செய்துப் பார்த்து எப்படி இருந்ததுனு சொல்லுங்க,இதன் ருசியே வடகத்தில் தான் இருக்கு மாமி.

Malini's Signature said...

எங்க வீட்டு புதினா துவையல் பச்சை கலரா தான் இருக்கும்.... இது புதுசா இருக்கே!!!!.... அடுத்த முறை பன்னி பாக்குறேன்.

Menaga Sathia said...

அரைக்கும் போது பச்சைகலர்ல தான்பா இருக்கும்,மறுபடியும் எண்ணெயில் வதக்கும் போது கலர் மாறிவிடும்.வதக்கினால்தான் நீண்டநாள் யூஸ் பண்ணலாம் ஹர்ஷினி!!

Jaleela Kamal said...

இதுவும் நல்ல ஐடியா வதக்கி நீண்ட நாட்கள் பயன் படுத்துவது

Menaga Sathia said...

ஆமாம் ஜலிலாக்கா எங்கம்மா அரைத்தபிறகு வதக்கிதான் யூஸ் பன்னுவாங்க.

01 09 10